பிக் பாஸ் பினாலேவில் எதிர்பாராத திருப்பம் – பார்வதி, சான்ட்ரா மோதல்! ரெட் கார்ட் பற்றிய பஞ்சாயத்து
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசனில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வார கிராண்ட் பினாலேவில் நடந்த சம்பவங்கள் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறிய பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகிய இருவரையும் மீண்டும் மேடைக்கு அழைத்த நிகழ்வு, இந்த சீசனின் முக்கியமான தருணமாக அமைந்தது.
பார்வதி வெளியேற காரணமாக இருந்த சான்ட்ராவை மையமாக வைத்து, இந்த வாரம் ஒரு புதிய 'எமோஷனல் கேம்' விளையாடப்பட்டது. சூட்டிங் தாமதமாக வந்த பார்வதியை, தனியாக அழைத்து விஜய் சேதுபதி பேச வைத்தார். அப்போது, வீட்டிற்குள் நடந்த சில சம்பவங்கள் தனிப்பட்ட விரோதம் அல்ல, டாஸ்க் காரணமாக நடந்த தவறுகள் மட்டுமே என்று பார்வதி விளக்கம் அளித்தார்.

அதன் பிறகு, தன்னை பாதித்த முக்கியமான விஷயமாக 'ரெட் கார்ட் கொடுத்த சம்பவம்' பற்றி பார்வதி பேச, அதற்கு காரணமாக இருந்தவர் சான்ட்ரா என குறிப்பிட்டதும் மேடையின் சூழ்நிலை மாறியது. சான்ட்ரா தானாகவே எழுந்து மேடைக்கு வரவா? என்று கேட்க, பார்வதியும் அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் தலையசைத்தார்.
மேடையில் சான்ட்ரா, அந்த நேரத்தில் நடந்த சம்பவத்திற்காக பார்வதியிடம் மன்னிப்பு கேட்டார். மேலும், பார்வதி வெளியேறும் போது வாசலில் தனியாக நின்று சென்ற காட்சியை ஏவியில் பார்த்தபோது தனக்கு மனவேதனை ஏற்பட்டதாகவும், அந்த தருணத்தில் அவருக்கு ஆதரவு கொடுக்காமல் விட்டதை இப்போது திருத்த விரும்புவதாகவும் கூறி, பார்வதியை கட்டிப்பிடித்தார். இந்த தருணம் பலருக்கும் 'ஸ்கிரிப்ட் போல' தோன்றினாலும், சிலருக்கு அது உணர்ச்சிபூர்வமான சமாதானமாகவும் அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, பார்வதி வீட்டிற்குள் இருக்கும் போது பல நேரங்களில் தனிமையாக உணர்ந்ததாகவும், வெளியேறும்போது யாரும் வந்து பேசாததைவிட, "இன்னும் வீட்டிற்குள் இருக்க முடியாதா?" என்ற வருத்தமே அதிகமாக இருந்ததாகவும் கூறினார். ஆனால், இந்த உரையாடலின்போது விஜய் சேதுபதி எந்த ரியாக்ஷனையும் காட்டாமல், 'போதும்' என்பதுபோன்ற சுருக்கமான ரியாக்ஷன்களையே வழங்கினார்.
கடைசியாக, பார்வதி ரசிகர்களுக்கு நன்றி சொல்ல முயன்றபோதும், நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என்பதுபோல் விஜய் சேதுபதி சைகை காட்டினார். இருந்தாலும், "ஒரு நிமிஷம்" என்று கேட்டுக்கொண்டு பார்வதி அனைவருக்கும் நன்றி தெரிவித்து, பின்னர் கம்ருதீன் அருகில் சென்று அமர்ந்தார்.
இந்த முழு சம்பவமும் பிக் பாஸ் ரசிகர்களிடையே, இது உணர்ச்சிபூர்வமான சமாதானமா அல்லது திட்டமிட்ட மேடை நாடகமா என்ற கேள்வியை எழுப்பி, சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications