பிரிந்து போன மகன் திரும்பி வந்த நேரம்! தாமரை செல்வி வெளியிட்ட பதிவு... ஆசைப்பட்டது நடந்து விட்டது
பிக் பாஸ் தாமரை செல்வின் பிரிந்து சென்றிருந்த மகன் மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலமாக தாமரை செல்வி பிரபலமானார்.
நாடக கலைஞராக இருந்த தாமரை செல்வி தற்போது சின்னத்திரை ரசிகர்களுக்கு பிரபலமான நபராக மாறி இருக்கிறார்.
குடும்ப பிரச்சினையால் தன்னுடைய மூத்த மகன் தன்னை விட்டு பிரிந்து இருக்கிறார் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் வருத்தத்துடன் தாமரை செல்வி பேசி இருந்தார்.
தற்போது அவருடைய மூத்த மகன் மீண்டும் தாமரை செல்வியோடு வந்து சேர்ந்திருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
பிக் பாஸ் நிகழ்ச்சியால் பலர் பிரபலமாகி இருக்கின்றனர். அதில் ஒருவராக தாமரை செல்வியும் இருந்து வருகிறார். இவர் தற்போது பிரிந்து சென்ற தன்னுடைய மூத்த மகன் உடன் சேர்ந்த அவரோடு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலருடைய பாராட்டையும் ஆசிர்வாதங்களையும் பெற்று வருகிறது. அடித்தட்டு மக்களில் ஒருவராக இருந்து நாடக கலைஞராக ஒரு சிலருக்கு மட்டுமே பரீட்சையமாக இருந்த தாமரை செல்வி தெருக்கூத்து கலைஞராகவும், மேடை நாடக கலைஞர் ஆகவும் வேலை செய்து வந்தார். கோவில் திருவிழாக்கள் மற்றும் மேடை நாடகங்களில் இவர் கலந்து கொண்டு இருந்த நிலையில் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.

மகனைப் பற்றிய வருத்தம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட தாமரை செல்வி இந்த நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் தன்னுடைய கடந்த கால சோகங்களை கூறி ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். அதில் தனக்கு முதல் திருமணம் ஆகி ஒரு மகன் இருப்பதாகவும் ஆனால் அவர் தன்னிடம் பேசுவதில்லை அவருடைய தந்தையுடன் இருக்கிறார் என்று கண்ணீரோடு கூறி இருந்தார். அந்த மகன் தன்னை புரிந்து கொண்டு எப்போது வருவார் என அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன் என்றும் அப்போது அவர் பேசியிருந்தார்.

வெற்றி கிடைக்கவில்லை
பார்த்தசாரதி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து தாமரை செல்விக்கு சிவா என்கிற மகன் இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் ஜோடியில் அவருடைய கணவர் பார்த்தசாரதியோடு ஜோடியாக தாமரை செல்வி டான்ஸில் பங்கேற்று இருந்தார். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அல்டிமேட் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டாலும் இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த தாமரை செல்வி ஆனாலும் தன்னுடைய உழைப்பை மட்டும் விட்டுக் கொடுக்காமல் அடுத்த கட்ட முயற்சியை தொடர்ந்து கொண்டே இருந்தார்.

பாரதி கண்ணம்மாவில் அறிமுகம்
இந்த நிலையில் தாமரை செல்விக்கு பாரதி கண்ணம்மா சீசன் 1 சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் தாமரையாக நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய மூத்த மகன் தாமரை செல்வியோடு வந்து சேர்ந்து இருக்கிறார். அவரோடு எடுத்த செல்பியை தாமரை செல்வி சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது அதிகமான லைக்குகள் பெற்று வருகிறது. அது மட்டும் அல்லாமல் இதுபோல் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தாமரை செல்வியை பலர் வாழ்த்தியும் வருகிறார்கள்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications