பிக் பாஸ் ரித்விகாவுக்கு கல்யாணம் ரத்து? எதிர்பாராத சூழ்நிலையால் ஒத்திவைப்பு! நடிகை திடீர் அறிவிப்பு
சென்னை: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் பங்கேற்று டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட ரித்விகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது.. தன்னுடைய நீண்ட கால நண்பரான வினோத் லட்சுமணன் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக ரித்விகா அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி, ரித்விகாவின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
இயக்குநர் பாலாவின் பரதேசி மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரித்விகா.. கபாலி, பரதேசி, மெட்ராஸ், ஒருநாள் கூத்து, ஓநாய்கள் ஜாக்கிரதை, டார்ச்லைட், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது, போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

விருது வாங்கிய நடிகை
லெவன் படத்தில் இரட்டை கேரக்டரிலும் நடித்திருந்தார்... தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டியதால், மெட்ராஸ் படத்துக்காக ஃபிலிம்ஃபேர்' விருதும் வாங்கியவர்.
பல படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் சீசன் 2ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலும் வென்றபோதுதான், ரித்விகாவின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவியது.. மொத்தம் 106 நாட்கள் வீட்டிற்குள் இருந்து ரித்விகா அந்த டைட்டிலை வென்றிருந்தார்..
எனினும் ரித்விகாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் வரவில்லை.. நன்றாக நடிக்கக்கூடியவராக இருந்தும், சான்ஸ் நிறைய வராதது, அவரது ரசிகர்களுக்கே ஏமாற்றத்தை தந்துள்ளது.
நிச்சயதார்த்த போட்டோக்கள்
இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த ஜூலை மாதம், தன்னுடைய நிச்சயதார்த்த போட்டோக்களையும், வீடியோக்களையும் ரித்விகா சோசியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.. "கைத்தலம் பற்ற" என குறிப்பிட்டு, கணவர் பெயர் வினோத் லட்சுமணன் என்று பதிவிட்டிருந்தார்.. ஆனால், அவர் யார் என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்.
அதனால்தான், தான் ஷேர் செய்திருந்த நிச்சயதார்த்த போட்டோவிலும், வருங்கால கணவரின் முகத்தை வெளியே சரியாக தெரியாதபடியே ப்ளர் செய்திருந்தார்.. வினோத் லட்சுமணன், ரித்விகாவின் நீண்ட நாள் நண்பர் என்கிறார்கள்.
அதேபோல, இவருடைய நிச்சயதார்த்தத்தில் சினிமா பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது.. மிகவும் சிம்பிளாக நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டதால், எப்படியும் திருமணத்துக்கு அனைவரையும் ரித்விகா அழைப்பார் என்றே தெரிகிறது..
மணநாளை அறிவித்தார்
அதேபோல திருமணம் எப்போது என்றும் தெரியவில்லை.. எனவே விரைவில் மணநாளை வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.. அதன்படியே, இந்த மாதம் 27ம் தேதி தனது திருமணம் நடைபெறும் என நடிகை ரித்விகா அறிவித்திருந்தார்.. உடனே ரித்விகாவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவிக்க துவங்கிவிட்டார்கள்.. ரித்விகாவும், கல்யாண பத்திரிகையை பிரபலங்களுக்கு வைத்து வருவதாக செய்திகள் கசிந்திருந்தன.
ஆனால், இப்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை.. எதிர்பாராத காரணங்களால் தன்னுடைய திருமணம் ஒத்தி வைக்கப்படுவதாக ரித்விகா அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ரித்விகா திருமணம் எப்போது
இதுகுறித்து தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் ரித்விகா எந்த தகவலையும் வெளியிடவில்லை,.. ஆனால், திருமண பத்திரிகை வைத்த நண்பர்களுக்கு திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் சொல்லியிருக்கிறாராம்.
"குடும்ப காரணங்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக 27ம் தேதி நடக்கவிருந்த தனது திருமணம் ஒத்திவைக்கப்படுகிறது. உங்கள் புரிதலுக்கு நன்றி" என்று குறிப்பிட்டு திருமண பத்திரிகை வைத்த நண்பர்களுக்கு ரித்விகா தகவல் அனுப்பியிருப்பதாக தெரியவந்துள்ளது.
உண்மையிலேயே ரித்விகா திருமணம் தள்ளி வைக்கப்படுகிறதா? என்பது தெரியவில்லை.. இதை ரித்விகா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை என்றாலும், அவரது ரசிகர்களிடையே இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications