சினேகனுக்காக கன்னிகா கூறிய வார்த்தைகள்... இவ்வளவு நாட்களுக்குள் இப்படி ஒரு நிலைமையா??
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருக்கும் சினேகனுக்காக அவருடைய மனைவி பேசிய வார்த்தைகள் வைரலாக பரவி வருகிறது.
காதலை வார்த்தைகளால் வெளிக்காட்டி கண்ணீரை வர வைத்த கன்னிகாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பாடலாசிரியராக பிரபலம்
திரைத்துறையில் பாடலாசிரியராக பல ஆண்டுகள் தனது திறமையை நிரூபித்து வரும் சினேகன் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களமிறங்கியிருக்கிறார். ஏற்கனவே இவர் பிக்பாஸ் முதல் சீசனில் அறிமுகமாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பிரபலமானமானவராக இருந்தாலும் தற்போது மீண்டும் இவருடைய அதிரடியான ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுக்க தொடங்கியிருக்கின்றனர்.

மீண்டும் கிடைத்த வாய்ப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போது தான் ஒரு பெண்ணை 8 வருடமாக காதலித்து வருவதாக கூறிய சினேகன் யாரந்த பெண் என்று அப்போது பெயரைக்கூட கூறாமல் மறைத்து வைத்துவிட்டார். ஆனால் பல வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் அவருடைய காதல் வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது அவருடைய காதல் திருமணத்தில் முடிந்திருக்கிறது. காதல் மனைவியோடு இவர் பல போட்டோசூட் வீடியோக்களையும், போட்டோக்களையும் எடுத்து குவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மீண்டும் இவருக்கு கிடைத்த வாய்ப்பு காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

கன்னிகாவின் காதல்
திரைத்துறையின் தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கன்னிகா மற்றும் சினேகன் இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகன் இடம் ரசிகர்கள் பலர் திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களில் இப்படி ஒரு முடிவு தேவையா என்று கேள்விகளை எழுப்பி இருந்தனர். ஆனால் தன்னுடைய கணவரின் வாழ்க்கையின் வெற்றிக்காக அவரக்காக காத்து இருப்பதாகவும், அவருக்கு ஒவ்வொரு முறையும் உறுதுணையாக இருப்பதாகவும் கன்னிகா கூறியிருக்கிறார்.

கதறி அழுத சினேகன்
இன்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் காதலர் தின கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் போட்டியாளர்களின் உறவினர்கள் தங்களுடைய காதலையும் அன்பையும் இவர்களோடு பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சினேகனின் மனைவியான கன்னிகா தன்னுடைய கணவருக்காக ஆறுதல் வார்த்தைகளை கூறி இருக்கிறார். "ஹாய் தங்கமே எப்படி இருக்கீங்க?? நான் ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கிறேன்..!! நீங்க சோகமா இருந்தீங்கன்னா, நானும் சோகமா மாறிவிடுவேன். நீங்க ஹாப்பியா இருந்தா நானும் ஹேப்பியா இருப்பேன். ஹேப்பி லவ்வர்ஸ் டே பட்டு" என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்டு குழந்தைபோல தேம்பித்தேம்பி சினேகன் அழுவதை பார்த்து ரசிகர்கள் பலர் இவர்கள் காதலுக்கு காதலர் தின வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications