பிக்பாஸ் அல்டிமேட்: தன்னுடைய வேலையை தொடங்கிய சுரேஷ் சக்கரவர்த்தி.. மாட்டிக்கொண்ட தாமரைச்செல்வி
சென்னை: சுரேஷ் சக்கரவர்த்தி எப்போதும் போல தன்னுடைய வேலையை தொடங்கி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
தாமரைச்செல்வி இடம் சுரேஷ் சக்கரவர்த்தி பேசிய வார்த்தைகள் கேட்டு நெட்டிசன்கள் மீம்ஸ்களில் கலாய்த்து வருகிறார்கள்.

தொடங்கிய பிக்பாஸ் அல்டிமேட்
கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிரச்சனைகளும் பூதாகரமாக வெடிக்க தொடங்கிவிட்டது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இதை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் இருந்தனர். தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்தது தொடங்கிவிட்டது என்று கூறி வருகின்றனர். இதற்கு முன்பு சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அதுவும் ரசிகர்களை அதிகமாக கலவரப்படுத்திய போட்டியாளர்களாக பார்த்து இந்த சீசனில் அறிமுகப்படுத்தியதால் ஆரம்பத்தில் இதை எதிர்பார்த்தாலும் தற்போது சுரேஷ் சக்கரவர்த்தி தன்னுடைய வேலையை தொடங்கி இருக்கிறார்.

நான்காவது சீசன் போட்டியாளர்
சுரேஷ் சக்கரவர்த்தி நான்காவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி பலருக்கும் அள்ளு கிளப்பியவர் என்பது அனைவரும் அறிந்ததுதான். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையம் தன்னுடைய அடாவடி பேச்சால் கவர்ந்து இழுத்தவர் இவர். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு கடந்த ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியை தன்னுடைய யூடியூப் சேனல் மூலமாக ரிவ்யூ செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சீசனில் இவருக்கு அதிகமாக கவர்ந்த போட்டியாளராக தாமரைச்செல்வி இருந்து வந்துள்ளார். அதை தன்னுடைய யூடிபில் அவரே குறிப்பிட்டுள்ளார்.

வம்பு இழுக்க தொடங்கிவிட்டாரே
அதனால்தான் தாமரைச்செல்வி பிக்பாஸ் ஐந்தாவது சீசனை விட்டு வெளியேறிய பிறகு அவரை சந்தித்து அவருக்கு விருந்து எல்லாம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது தாமரைச்செல்வி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மீண்டும் களமிறங்கி இருப்பதால் அவரிடம் சுரேஷ் சக்கரவர்த்தி எப்படி நடந்து கொள்வார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில் இன்று தன்னுடைய வழக்கமான காமெடியால் அனைவரையும் வம்பு இழுத்துக் கொண்டு இருக்கிறார். அப்படித்தான் தாமரை செல்வியிடம் நீ நடித்த நாடகங்களில் ஒன்றே ஒன்று தான் நான் பார்த்துள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

தாத்தாவின் குறும்பு
வழக்கம்போல சுரேஷ் சக்கரவர்த்தி பேசுவதை புரிந்து கொள்ளாத தாமரைச்செல்வி வெள்ளந்தி தனமாக அப்படியா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போதுதான் அந்த நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் என்று கூறியிருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் தாத்தாவுக்கு குறும்பு அதிகம் தான், இருந்தாலும் இவ்வளவு இருக்கக் கூடாது என்றெல்லாம் ஜாலியாக கலாய்த்து வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததும் தன்னுடைய வேலையை மீண்டும் தொடங்கிவிட்டார் என்று பலர் கூறி வந்தாலும், இவர் இவருடைய விளையாட்டை ஆட தொடங்கினால் வீடு கதிகலங்க போகிறது என்று இப்போதே பலர் எதிர்பார்த்து வருகிறார்களாம்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications