பிக்பாஸ் அல்டிமேட்: முதல் நாளே இப்படியா பிக்பாஸ் வைத்திருக்கும் புது ஆப்பு...இப்படி ஆகிட்டே
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் நாள் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ப்ரோமோவை பார்த்ததும் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே இப்படியா??என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

தொடங்கிய பிக்பாஸ் அல்டிமேட்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் நாளில் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பலர் ஆர்வத்தோடு வரவேற்பு கொடுத்துள்ளனர். ஜனவரி 30,மாலை 06:30க்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. 24X7 என்பது இதனுடைய தாரக மந்திரமாக இருந்தாலும் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் முதல் நாள் அலப்பறைகள் வேற லெவலில் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முதல்நாளே வேலையை தொடங்கிய போட்டியாளர்கள்
இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே பரிச்சயமான போட்டியாளர்கள், அதுவும் ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் ரசிகர்களிடம் ஒரு பக்கம் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு பக்கம் இங்கே சண்டை சச்சரவு மட்டும் தான் அதிகமாக இருக்கும் என்று கருத்துக்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் முதல் நாளே ஒரு சில போட்டியாளர்கள் நடந்துகொள்வது பார்க்கும்போது அப்படித்தான் இருக்கிறது. பாலாஜி முருகதாஸ் வீட்டிற்கு வந்ததுமே தன்னுடைய வேலையை தொடங்கிவிட்டார். ரூல்ஸ் பிரேக் பண்ணுகிற இவருடைய செயல் பலருடைய அதிருப்தயை பெற்றுள்ளது.

முதல் ப்ரமோ
இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக யார் வரவேண்டும் என்று ரசிகர்கள் பலர் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களின் பெயர்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவர்களுக்கு ஓட்டு அளிக்குமாறு கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்தில் முதல்நாள் ப்ரமோ தற்போது வெளியாகியிருக்கிறது. முதல் நாளே இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளரின் பெயரை நாமினேஷன் செய்ய பிக் பாஸ் கூறியிருக்கிறது. முதல் நாளில் பிக் பாஸ் செய்த செயல் இது வரைக்கும் இல்லாதவகையில் இருக்கிறது என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று பிக்பாஸ் இந்த முறை பல விஷயங்களை மாற்றம் செய்துள்ளது போல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Recommended Video

முதல் வார எலிமினேஷன்
முதல் வாரமே அதிகமான போட்டியாளர்கள் வனிதா, அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் சினேகன் ஆகிய நான்கு பேரின் பெயர்களை தான் கூறிவருகின்றனர். இதனால் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்று பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ப்ரோமோ வெளியாகி ஒரு சில நிமிடங்களுக்குள் ரசிகர்கள் வனிதா, அனிதாவிற்கு ஓட்டு போட சொல்லி கமெண்ட்களில் வாக்கு சேகரித்து வருகின்றனர். முதல் ப்ரமோவே வேற லெவலில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் நிலையில், இன்னும் போகப் போக என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறதாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications