அந்த ஆதாரத்தை காட்டுங்க.. இல்லன்னா ஜோவிகாவை வைத்து கமல் மேல் கேஸ் போடுவேன்.. வனிதா மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்ததற்கு பிறகு தினம் நடக்கும் பிரச்சனைகள் அவரை சுற்றி தான் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய பிக் பாஸ் ரிவியூவில் தன்னுடைய மகளுக்காக சொல்லி இருக்கும் விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

bigg boss Vanitha said in proof is not given, she will file a case against Bigg Boss and Kamal

அதாவது பிரதீப் வெளியேற்றப்படும் போது ஒரு சில போட்டியாளர்கள் பிரதீப்க்கு எதிராக பிளான் போட்டு அவரைப் பற்றி தவறாக கருத்து கூறி இருந்தனர் என்று இப்போது பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பிக் பாஸ் 7: ஆண் குளிக்கிறதை எட்டி பாக்குறாங்க.. திடீர் குற்றச்சாட்டு வைத்த தாமரை..அது யார் தெரியுமா?
இந்த நிலையில் தன்னுடைய மகள் சொல்லாத வார்த்தைகளை சிலர் வெளியே சொல்லுகின்றனர். அதனால் அதற்கான ஆதாரத்தை தர வேண்டும் இல்லை என்றால் பிக் பாஸ் மீதும் கமல் மீதும் கேஸ் போடுவேன் என்று பேட்டியில் வனிதா பேசியிருக்கிறார்.

கடந்த வார இறுதியில் பிரதீப் ஆண்டனியால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. இதற்கு உள்ளே இருக்கும் சில போட்டியாளர்கள் பிரதீப் மீது தவறான குற்றசாட்டுகளை வைத்து அவரை வேண்டும் என்று பிளான் போட்டு வெளியே அனுப்பி வைத்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இது குறித்த விவாதம் தான் பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் சரி வெளியேவும் சரி அதிகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த ஸ்டேட்மெண்ட் டாஸ்க்கில் மீண்டும் இந்த விஷயம் குறித்து பேசப்பட்டது. அதில் சிலர் பேசிக் கொண்டிருக்கும்போது பெண்களுக்கு பிரதீபால் பாதுகாப்பு இல்லை என்று நாங்கள் பேசவில்லை.

கமல் சார் தான் பிரதீப்பால் எங்களுக்கு நடந்த நிகழ்வுகளை சொன்னதும் உமன் கார்டு வைத்து அந்த ரெட் கார்டு கொடுத்தார் என்று கூறியிருந்தனர். இதனால் இந்த வீடியோவை சிலர் எடிட் செய்து கமலை டேக் பண்ணி உங்களையே மாட்டி விட்டுட்டாங்க. இவங்களுக்கா நீங்க சப்போர்ட் பண்ணுனீங்க? என்று கமெண்ட் அனுப்பி வருகின்றனர்.

bigg boss Vanitha said in proof is not given, she will file a case against Bigg Boss and Kamal

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ செய்து வரும் நடிகை வனிதா தன்னுடைய ரிவியூவில் சில விஷயங்களை பேசி இருக்கிறார். தற்போது அது சர்ச்சையாகி வருகிறது. அதில் என்னுடைய பொண்ணு உமன் குறித்து எதுவுமே பேசவில்லை. ஆரம்பத்தில் இருந்து பிரதீப்புக்கும் என்னுடைய பொண்ணுக்கும் இடையில் ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்தது.

அன்று பிரதீப் பற்றி எல்லோரும் தங்களுடைய கருத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போது என்னுடைய மகளும் சொன்னாள், அவ்வளவுதான். ஆனால் அவள் பிளான் போட்டு பிரதீப்பை வெளியேற்றி விட்டதாக சிலர் வீடியோ பரப்பி வருகிறார்கள்

அதனால் என் பொண்ணு பெயரை சேர்த்து கெடுப்பது போல இந்த ரெட் கார்ட் இருப்பதால் கமல் மற்றும் விஜய் தொலைக்காட்சி மீது அவதூறு வழக்கு போடுவேன். இந்த வாரம் இந்த பிரச்சனை குறித்து கமல் பேசியாக வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார். என்னுடைய பெண்ணின் பெயர் இந்த பிரச்சனையில் அதிகமாக அடிபடுகிறது. அவளுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று வனிதா பேசியிருக்கிறார்.

bigg boss Vanitha said in proof is not given, she will file a case against Bigg Boss and Kamal

இப்படியாக இருக்கும் நிலையில் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலர் ஜோவிகா கடந்த சனிக்கிழமை கமல் முன்பு பிரதீப் குறித்து பேசுவதற்காக செங்கொடியை தூக்கி இருந்த நிலையில் அப்போது இரவு தூங்குவதற்கு பெண்களுக்கு பயமாக இருக்கிறது என்றும் பிரதீப் தூங்காமல் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று புகார் அளித்திருந்தார். ஆனால் அது உங்களுக்கு மறந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+