பிரதீப்பிடம் நான் அந்த விஷயத்தை பற்றி பேசினேன்.. ஆனால் இப்படி சொல்லிவிட்டான்.. கோபத்தில் வனிதா
சென்னை: பிக் பாஸ் முன்னாள் போட்டியாளராகவும் நடிகையாகவும் இருக்கும் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ செய்து வருகிறார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் வனிதாவை தாக்கிவிட்டு சென்றுவிட்டதாக வனிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

அதைத் தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து பிரதீப்பிடம் பேசும் போது அவர் சொன்ன வார்த்தை தன்னை கோபப்படுத்துகிறது என்று வனிதா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதா தன்னுடைய ரிவியூவை முடித்துவிட்டு தன்னுடைய சகோதரியின் வீட்டில் சாப்பிட்டு விட்டு கீழே காரை பார்க்கிங் செய்து இருந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தபோது அங்கு ஒரு நபர் வனிதாவை பின்பக்கத்தில் இருந்து பிடித்து தள்ளி அவருடைய முகத்தில் அடித்து விட்டு ரெட் கார்டா கொடுக்குறீங்க? நீயும் உடந்தையா? என்ற வார்த்தைகளை சொல்லிவிட்டு மெண்டல் மாதிரி சிரித்துக் கொண்டே ஓடிவிட்டான் என்று தன்னுடைய புகைப்படத்தையும் வனிதா சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.
உடனே இந்த செய்தி காட்டு தீ போல பரவியது. அது மட்டுமல்லாமல் அந்த மர்மமானவர் ரெட் கார்டு பற்றி பேசி அடித்திருப்பதால் இது ஒருவேளை பிரதீப் உடைய ஆதரவாளராக இருக்கலாமா என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் வனிதா எந்த இடத்திலும் பிரதீப் தான் இதை செய்தார் என்று சொல்லவில்லை. இந்த நிலையில் வனிதா தன்னுடைய ரிவ்யூவில் பேசிக் கொண்டிருக்கும்போது தான் தாக்கப்பட்டது குறித்து பிரதீப்பிடம் போனில் மெசேஜ் மூலம் சாட் செய்து பேசினேன்.
அதில் பிரதீப் நான் எந்த இடத்திலும் உன்னை நேரடியாக புகார் கூறவில்லை. வந்தவர் ஒருவேளை உனக்கு ஆதரவாளர்களாக கூட இருக்கலாம் என்று தான் சொல்லி இருந்தேன் என்று கூறி, அதையும் மீறி நான் ஏதாவது இடத்தில் பேசியது உன்னை புண்படுத்தி இருந்தால் சாரி என்று மெசேஜ் செய்திருந்தேன்.
அதற்கு பிரதீப் பரவாயில்லை என்று சொன்னதோடு ஜோவிகாவை பற்றி வனிதாவிடம் பேசினாராம். அதில் ஜோவிகா சமீபகாலமாக நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்றும், நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் அவள் கண்டிப்பாக ஜெயிப்பாள் என்றும் பிரதீப் கூறி இருக்கிறார். இதற்கு பதிலாக வனிதா நான் என்னை தாக்கியதை பற்றி அவனிடம் கூறினேன். ஆனால் அவன் ஏதோ என் மகள் விளையாட்டில் நான் சந்தேகப்படுவது போலவே என்னிடம் அவள் ஜெயிப்பாள் என்று கூறுகிறான்.
பிக் பாஸ்க்கு பிறகு வனிதாவிடம் பேசுறது கிடையாது.. லவ் டார்ச்சர் பண்றேன்னு போலீஸிடம்.. பாலாஜி எமோஷனல்
இது எப்படி எப்படி சொல்ல முடியும் என்று கேள்வி கேட்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் மகள் ஜெயிப்பாள் என்று சொன்னதில் அப்படி என்ன தவறு இருக்கிறது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் வனிதா அடிபட்டது போலி நாடகமாக கூட இருக்கலாம். மகளுக்கு அனுதாப அலையே உருவாக்குவதற்காக இப்படி செய்கிறாரா? என்று கலாய்க்கும் வகையில் பிரதீப் மேலே சொன்ன பதிலை சொன்னாரா? என்றும் பலர் கேள்வி எழுப்ப வருகின்றனர்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications