தினேஷ் இப்படி பேசலாமா? நடந்தது இதுதான்.. கமல் கூட இப்படித்தான்.. விசித்ராவின் கணவர் எமோஷனல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகை விசித்திரா தனக்கு சினிமா துறையில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேசி இருந்தார்.
பிரபலமான தெலுங்கு நடிகர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்து விசித்திரா பிக் பாஸ் வீட்டிற்குள் பேசி இருக்கிறார்.
விசித்ரா சொன்ன கதைக்கு நடிகர் தினேஷ் சொல்ல வார்த்தையை குறித்து விசித்ராவின் கணவர் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது போட்டியாளர்கள் தாங்கள் அனுபவித்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விசித்திரா தெலுங்கு நடிகர் ஒருவர் மூலமாக கிடைத்த கசப்பான அனுபவம் அதனால் தான் சினிமாவை விட்டு விலகி விட்டேன் என்று கூறியிருந்தார்.

தெலுங்கு திரைப்படம் ஒன்றில் தான் நடிக்கும் போது பிரபல நடிகர் ஒருவர் தன்னை ரூமிற்கு அழைத்தார். அதற்கு தான் போகாததால் ஆள் வைத்து தன்னிடம் பிரச்சனை செய்தார். அதற்கும் தான் உடன்படாத போது சூட்டிங் ஸ்பாட்டில் சண்டை பயிற்சியாளர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அப்போது அதை குறித்து தான் கம்ப்ளைன்ட் செய்த போது அங்கு இருந்த சண்டை பயிற்சியாளர் தன்னை அறைந்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.
அதோடு இது குறித்து எந்த நடிகரும் தனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் நடிகர் சங்கமும் இந்த பிரச்சனையை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டார்கள் என்றும் தன்னுடைய வேதனையை தெரிவித்திருந்தார். இதற்கு தினேஷ் இந்த பிரச்சனையை பற்றி நீங்கள் இந்த இடத்தில் சொல்லி இருக்க வேண்டாம். இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
இதை இப்போது பேசினால் இந்த பீல்டுக்கு வர நினைக்கும் பெண்கள் பயப்படுவார்கள் என்று கூறியிருந்தார். இது ரசிகர்களின் மத்தியில் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. தினேஷ் மீது அதிகமான பாசிட்டிவ் கருத்து இருக்கும் நிலையில் அவர் எதற்காக இப்படி ஒரு வார்த்தையை சொன்னார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை விசித்ராவின் கணவர் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசி இருக்கிறார்.
அதில் தினேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் நான் ஆரம்பத்தில் இருந்திருந்தால் நிக்சனிடம் பெண்கள் உள்ளாடையை தூக்கி காட்டிய போது நான் கேள்வி கேட்டு இருப்பேன். அதுபோல பிரதீப் குறித்து சில பெண்கள் அவர் தங்களிடம் தவறான வார்த்தைகளை பேசிக்கொண்டிருந்தார் என்று சொல்லும் போது அந்த இடத்தில் நான் இருந்து இருந்தால் கேள்வி கேட்டு இருப்பேன் என்று பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால் நேற்று தினேஷ் பேசியது சரியா தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து அந்த வலியை ஒரு பெண் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது அதை இப்போது நீங்கள் இந்த இடத்தில் பகிர்ந்து இருக்க கூடாது என்று தினேஷ் பேசிக் கொண்டிருக்கிறார். இது எந்த வகையில் நியாயம் என்று விசித்ராவின் கணவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதே நேரத்தில் விசித்திரா சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு கமல் கேள்வி கேட்பாரா என்று அதிகமானோர் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இது குறித்தும் விசித்ராவின் கணவர் பேசியிருக்கிறார். அதில் கண்டிப்பாக கமல் இதையெல்லாம் விசாரிக்கவே மாட்டார். இதை கண்டு கொள்ளவே மாட்டார். இந்த அளவிற்கு பேசுவதற்கு கமலுக்கு தைரியமும் கிடையாது என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். இதனால் இது குறித்து அதிகமானோர் விமர்சித்து வருகிறார்கள். அதே நேரத்தில் கமல் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் பலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications