அந்த தெலுங்கு நடிகர் என்னை கூப்பிட்டு மிரட்டுனாரு.. என் மகன் கேட்ட கேள்வி.. விசித்ரா கணவர் எமோஷனல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியளராக இருக்கும் நடிகை விசித்திரா தான் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்கில் தனக்கு தெலுங்கு நடிகர் ஒருவர் கொடுத்த பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து பேசி இருந்தார்.
இது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் விசித்ராவின் கணவர் அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதோடு விசித்ரா சொன்ன அந்த தெலுங்கு நடிகர் என்னையும் கூப்பிட்டு மிரட்டினார் என்றும் இப்போ பல வருடங்களுக்கு பிறகு என்னுடைய மகனுக்கு இந்த உண்மை தெரிந்ததும் அவர் சொன்ன வார்த்தை என்றும் அந்த பேட்டியில் சில தகவல்களை கணவர் பகிர்ந்திருக்கிறார்.
அது வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களின் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் குறித்து கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது விசித்திரா என்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் என்றால் 2001 ஆம் ஆண்டு நடந்ததுதான். தெலுங்கில் பிரபலமான முன்னணி நடிகர், அவருடைய ஒரு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்தில் ஷூட்டிங் கேரளாவில் மலப்புழாவில் நடந்தது. அதனால் அங்குள்ள ஒரு ஹோட்டலில் நான் தங்கி இருந்தேன். அந்த ஹோட்டலில் தான் என்னுடைய வருங்கால கணவரை நான் சந்தித்திருந்தேன். அவர் ஜெனரல் மேனேஜராக அந்த ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த படத்தில் ஹீரோவிடம் நான் இந்த படத்தில் தான் நடிக்கிறேன் என்பதை அறிமுகம் செய்வதற்காக போனேன்.
ஆனால் அவர் என்னுடைய பெயரைக் கூட கேட்கவில்லை. நீ இந்த படத்தில் நடிக்கிறாயா? அப்போ நைட்டு ரூமுக்கு வந்துடு என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் அப்படி சொன்னதுமே எனக்கு பெரிய ஷாக் ஆக இருந்தது. பிறகு நான் என்னுடைய ரூமுக்கு சென்று தூங்கி விட்டேன். அதனால் ஒரு சிலர் இரவில் என்னுடைய அறையை வந்து தட்டி ரகளை செய்திருந்தனர். இதனால் நான் மிகவும் பயந்தேன்.
எப்படியாவது சூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதனால் ஒவ்வொரு நாளும் இதே மாதிரி பிரச்சனையை நான் சகித்துக் கொண்டிருந்தேன். அந்த நடிகர் சொல்லி சில நபர்கள் தினமும் குடித்துவிட்டு வந்து என்னுடைய ரூம் கதவை தட்டி பிரச்சனை செய்தனர். இதை கவனித்து என்னுடைய கணவர் என்னிடம் என்ன பிரச்சனை உங்களுக்கு நான் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்.
அப்போது நான் இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு அரை வேண்டும் நான் இங்கே தங்கி இருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியக்கூடாது என்று சொன்னேன். அவரும் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு ஒவ்வொரு நாளும் ஒரு அறையில் தங்க வைத்தார். அது யாருக்குமே தெரியாது. இது அந்த நடிகருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.. நான் அவர்கள் எண்ணத்திற்கு ஒத்துப் போகவில்லை என்பதால் என்னை எப்படியாவது படத்தில் இருந்து தூக்க வேண்டும் என்று மொத்த படக்குழுவே பிளான் செய்திருந்தது.
ஒருநாள் படப்பிடிப்பு சண்டை காட்சி நடந்து கொண்டு இருந்தது. ஸ்டாண்ட் மாஸ்டர் மக்கள் எல்லாரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு நபர் பின்னாடி இருந்து என்னை தவறான நோக்கத்தில் பின்பக்கத்தில் கை வைத்தார். நான் முதல் முறை தெரியாமல் நடந்தது என்று அமைதியாகிவிட்டேன். ஆனால் அடுத்த டேக்கிலும் இதே மாதிரி நடந்தது. பிறகு நான் அந்த நபரை கையும் கவனமாக பிடித்துக் கொண்டு ஸ்டாண்ட் மாஸ்டர் இடம் ஒப்படைத்தேன்.
ஆனால் அவர் அந்த நபரை எதுவும் செய்யாமல் என்னை பளார் என்று அறைந்தார். அங்கிருந்த இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் யாருமே எனக்கு நடந்த அநீதியை தட்டி கேட்கவில்லை, குரல் கொடுக்கவும் இல்லை. நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். என்னுடைய நண்பர் புகார் கொடுக்க சொன்னார். நானும் புகார் கொடுத்திருந்தேன்.
அந்த செய்தி, செய்தி சேனல்களிலும் வெளியாகி இருந்தது. ஆனால் எனக்கு திரைத்துறையில் இருந்து யாருமே உதவி செய்யவில்லை. நடிகர் சங்கத்திடம் நான் பேசும்போது கூட அவர்கள் இதை தூக்கிப் போட்டுவிட்டு நடிப்பை போய் பாருமா என்று அந்த நேரத்தில் தலைவராக இருந்தவர் கூறினார். இதனால் தான் நான் வெறுத்துப் போய் 20 வருடமாக நடிப்பை விட்டு விலகி இருந்தேன் என்று வேதனையோடு கூறி இருந்தார்.
இந்த நிலையில் இந்த தகவல் இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தெலுங்கு நடிகர் பாலையா தானா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி இருக்கையில் நடிகை விசித்ராவின் கணவர் பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் விசித்திரா இத்தனை வருடங்களுக்கு பிறகு இந்த தகவலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசி இருப்பது எனக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. காரணம் விசித்திரா இது பற்றி எப்போதுமே நினைக்கக்கூட கூடாது என்று நினைக்கிறவர். இது பற்றி பேசினாலே அவர் வீட்டிலேயே அழுதுவிடுவார். இந்த கசப்பான நினைவுகளை மறக்க வேண்டும் என்று அவர் நினைத்துக் கொண்டிருப்பவர்.
எதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் இதை பேசினார் என்று தெரியவில்லை. அதே நேரத்தில் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த சம்பவம் நடந்த போது நான் அந்த ஹோட்டலில் மேனேஜராக தங்கி இருந்தேன். அப்போது நான் விசித்திராவிற்கு உதவியதற்கு என்னையும் கூப்பிட்டு அந்த தெலுங்கு நடிகர் மிரட்டினார்.
எதற்காக நீங்க அந்த பொண்ணுக்கு உதவி செய்றீங்க? இது உங்களுக்கு தேவையில்லாத வேலை. நீங்க இதிலிருந்து விலகிவிட வேண்டும் என்று சொன்னார். அப்போது நான் விசித்ராவின் கணவராகவும் இல்லை, விசித்ராவின் நண்பராகவும் இல்லை. அந்த ஹோட்டலில் மேனேஜராக மட்டும் தான் இருந்தேன்.
ஆனாலும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இந்த ஹோட்டலை விட்டு போய்விடலாம் என்று கூறி இருந்தேன். அதனால் அவருக்கு என் மீது கோபம் இருக்க தான் செய்தது. அதுபோல இத்தனை வருடங்களாக இந்த விஷயம் என்னுடைய பையனுக்கு தெரியாது. நாங்கள் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் தான் இருந்தோம்.
ஆனால் இப்போது விசித்திரா இது பற்றி மனம் திறந்து பேசி இருப்பதால் இன்று என்னுடைய மூத்த பையன் இது பற்றி என்னிடம் பேசினான். அம்மாவுக்கு இப்படி எல்லாம் நடந்து இருக்கா? இதை ஏன் எங்களிடம் சொல்லவில்லை என்று கொஞ்சம் அப்செட்டாக இருந்தான். காலேஜுக்கு கூட அவன் இன்று செல்லவில்லை, அப்சட்டாக இருந்தான்.
பிறகு இதை நாங்கள் மறக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். அதனால் தான் சொல்லவில்லை என்று அவனுக்கு புரிய வைத்தேன். அதற்குப் பிறகு இப்போது தான் என்னுடைய பையன் நார்மலாக மாறி இருக்கிறான் என்று அந்த பேட்டியில் விசித்திராவின் கணவர் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications