கமல்ஹாசனுக்கு ஆதரவாக பிக் பாஸ் முத்துக்குமரன் பேசிய வீடியோ.. கடைசியில் அந்த வார்த்தை தான் இப்போ “ஹைலைட்”
சென்னை: நடிகர் கமல்ஹாசன் "தக் லைஃப்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சிலர் கமல் பேசியது சரி என்று அவருக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகரும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான முத்துக்குமரன் கமல்ஹாசனுக்கு சப்போர்ட் பண்ணி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று பேசியிருந்தார். இந்த கருத்து கர்நாடகாவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. கர்நாடக முதல்வர் சித்தராமையா உட்பட பல கன்னட அமைப்புகள் கமல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்றும் போராட்டம் நடத்தப்பட்டது.

கமல்ஹாசன் அறிக்கை
இதற்காக கமல்ஹாசன் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி நாக பிரசன்னா, கமல்ஹாசன் என்ன வரலாற்று ஆய்வாளரா? எந்த அடிப்படையில் கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கூறினார்? இந்த விவாகரத்தில் கமல் மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்சனை முடிந்து இருக்கும் என்று பேசி இருந்தார். ஆனால் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் "மொழி மீதான என்னுடைய அன்பு உண்மையானது. கன்னடர்கள் தங்கள் தாய்மொழி மீது வைத்திருக்கும் அன்பு மீது எனக்கு மரியாதை உண்டு. தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டிருப்பேன், ஆனால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்க முடியும்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
கமலுக்கு முத்துக்குமரன் சப்போர்ட்
இதனால் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து கமல்ஹாசனுக்கு பல நடிகர்களும், அரசியல் பிரமுகர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சிகள் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், "மன்னிப்பவன் மனிதன் மன்னிப்பு கேட்பவர் பெரிய மனிதன் என்று கமல்ஹாசன் கூறி இருக்கிறார். அந்த வசனத்தில் இறுதியில் அவன் தவறை உணர்ந்தால் மன்னிப்பு கேட்கிறான் என்றும் கூறியிருப்பார். அதுபோல அவ்வளவு பணம் போட்டு ஒரு படத்தை எடுத்திருக்கிறார். ஆனால் அதை ரிலீஸ் ஆக விடாமல் ஒரு நீதிமன்றம் தடுக்கிறது இது எந்த வகையில் நியாயம்?
முத்துக்குமரன் ஆதங்கம்
இந்த நேரத்தில் எல்லாரும் எதற்காக கமல்ஹாசன் கூட இருக்க வேண்டும் என்றால், கமல்ஹாசன் ஒரு தீவிரமான "சினிமாவாதி" என்றுதான் நான் சொல்ல வேண்டும். ஒரு விவசாயி எப்படி தான் கடைசி காலம் வரைக்கும் ஒரு நிலத்தில் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து கொண்டு இருப்பானோ அதுபோல நான் சாகுற வரைக்கும் சினிமாவில் ஏதாவது செய்து கொண்டே இருப்பேன் என்று விடாப்பிடியாக முயற்சி செய்து கொண்டே இருக்கும். கமல்ஹாசனின் படம் வெளியாகும் சமயத்தில் இத்தனை பிரச்சனை இவருக்கு. அவருடைய படம் ரிலீஸ் பண்ண விடாமல் தடுக்கிறோம் என்று மிரட்டுகிறார்கள். அந்த நேரத்திலும் நான் என்னுடைய முடிவில் இருந்து மாற மாட்டேன் என்று இருக்கிறார் என்றால் அவருக்கு சினிமாவை விடவும் தன்னுடைய மொழி மீது இருக்கும் மதிப்பும் மரியாதையும் தான் காரணம்.
கமல்ஹாசன் பற்றிய ஹேஷ்டேக்
இந்த விஷயத்தில் கமல் தவறே செய்யவில்லை. பிறகு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தன்னுடைய மொழி தான் முக்கியம் என்று கமல்ஹாசன் நின்று கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் நாம எல்லாருமே அவர் பக்கம் நிற்க வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று இருக்கிறோம். தன்மானத்தை இழந்து இருக்கவில்லை" என்று அந்த வீடியோவில் முத்துக்குமரன் கோபமாக பேசி இருக்கிறார். இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் I stand with Kamal Hassan என்ற ஹேஷ்டேக் உடன் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications