ஆட்டம் போட்ட ஜூலி ... அது விழுந்திட போகுது பதறும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தொங்கும் பாலத்தில் துள்ளல் ஆட்டம் போட்டு கலக்கும் ஜூலி, பார்த்து விழுந்திட போறீங்கனு தவிக்கும் ரசிகர்கள்.

அடடா எத்தனை முறை பார்த்தாலும் சரி சலிக்கவில்லையே இந்த ஆட்டம் என ஏங்கும் கூட்டம் அலை மோதுது.

தன்னைப் பற்றி தப்பாக பேசுன ரசிகருக்கு நெற்றியடியாகவும், கூலாகவும் பதில் சொன்ன ஜீலிக்கு குவியும் ரசிகர்களின் பாராட்டுகள்.

எங்க போனாலும் அதை விடல

எங்க போனாலும் அதை விடல

கடைசியாக ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி ரீல்ஸ் வீடியோ போட்டிருந்த ஜூலி வாழ்த்து சொல்வதோடு மட்டும் விட்டுவிடாமல் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்கு கேரளாவிற்கு சென்று விட்டார் போல, போன இடத்தில் வழக்கம்போல் தன்னுடைய ரசிகர்களின் திருப்திக்காகவும், ஹேட்டர்ஸ்களை கூடக்கொஞ்சம் வெறுப்பு ஏற்றவும் வழக்கம்போல் தன்னுடைய பாணியில் ஒரு குத்துப் பாட்டு ரீல்ஸ் வீடியோ போட்டுள்ளார். இவர் எவ்வளவு தான் தன்னுடைய ஆட்டிட்யூட்டை மாற்றி எப்படியாவது மக்களிடம் நல்ல பெயரை வாங்கி விட மாட்டோமா என்று யாரும் முகம் சுளிக்கா வண்ணம் வீடியோக்களை போட்டு வந்தாலும் இவருடைய பழைய பிக்பாஸ் நினைவில் இருக்கும் சில நெட்டிசன்கள் ஜூலியை ஏண்டா வீடியோ போடுகிறோம் என்று நினைக்க வைத்து விடுவார்கள் போல,பிக் பாஸ் ஷோவினால் நெகட்டிவான பெயரைப் பெற்றிருந்தாலும் அந்த ஷேவின் புகழ் வெளிச்சத்தினால் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகளையும் சில விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்ற ஜூலி சில தமிழ் படங்களில் நடித்துக் கொண்டும் இருந்தார்.

மாடலிங்கில் கலக்குறாரு

மாடலிங்கில் கலக்குறாரு

கூரான வாள் அப்படங்கள் எதுவும் இன்னும் ரிலீசாகாமல் பெட்டியில முடங்கிக் கிடக்கிறது. ஆனால் இவர் அப்படி முடங்கிக் கிடக்காமல் தன்னை ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ எப்பொழுதும் லைவில் இருக்கவேண்டுமென்று தான் போகும் இடங்கள் தான் அணியும் உடைகள் இன்று ஒவ்வொன்றிற்கும் ஒரு போட்டோ ஷூட் புல் வீடியோ எடுத்து அப்லோட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். என்னதான் டீ தூளை மாற்றினாலும் காபியை மாத்த மாட்ரீயே என்று வடிவேல் காமெடியாய் கலாய்ப்பது போன்று இவர் என்னதான் வீடியோக்களை விதம் விதமாக மாற்றி மாற்றி போட்டாலும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்க்க தான் செய்கிறார்கள். ரசிகர்கள் தலைவி அக்கா என்று அந்த வீடியோவிற்கு வரவேற்பு கொடுத்தாலும், இவரது ஹேட்டர்ஸ்ளுக்கு ஒரு படி மேலே சென்று வீடியோ பற்றிய விமர்சன கருத்துக்களையே முதன்மை ஆக்கிவிடுகிறார்கள். நம் தமிழ்நாட்டில் ஒரு சில அரசியல் கட்சிகளைச் சார்ந்த அரசியல்வாதிகளுக்கு வரும் விமர்சனங்களை விட சமூக வலைதளங்களில் அதிகமான விமர்சனங்களை பெற்றவர் ஜூலியாக தான் இருக்க முடியும்.

ஜூலியை இருக்க விட மாட்டாங்க போல

ஜூலியை இருக்க விட மாட்டாங்க போல

ஆனால் அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இவர் போக்கிற்கு எதைப்பற்றியும் கவலைப்படாமல் வீடியோவை அப்லோட் செய்து தான் வருகிறார். எந்தவிதமான விமர்சனமாக இருந்தாலும் சாதாரணமாக கடந்து செல்லும் ஜூலி ஒரு சில விமர்சனங்களுக்கு கூலாகவும் பதில் அளித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தன் குடும்பத்தை பற்றி கடுமையான விமர்சனங்களை தருபவர்களுக்கு மட்டும் பதில் அளித்து வரும் ஜூலி, தற்போது கூட கேரளாவில் பாலத்தில் பரபரக்க இவர் போட்டுள்ள ரீல்ஸ்ஸ் வீடியோவிற்கு வந்த கமெண்ட்டுகளை டேக் இட் ஈஸி யாக எடுத்துக்கொண்டுள்ளார். ஜூலி அதில் ஒரே ஒரு இணைய குறும்பர் நீ இன்னுமா உயிரோட இருக்க என்று கேட்டுள்ள கமெண்டை பார்த்து காண்டாகி விட்டார் போல, இருந்தாலும் ஜூலி தான் திருந்திட்டார் அல்லவா?

கும்மாங்குத்து குத்திய ஜூலி

கும்மாங்குத்து குத்திய ஜூலி

அதனால கோபத்தைக் காட்டாமல் பதிலுக்கு நீயே உயிரோடு இருக்கும்போது நான் இருக்கிறதுக்கு என்ன ப்ரோ என்று முகத்தை மட்டும் சிரித்த மாதிரி வைத்துக்கொண்டு பதிலுக்கு கேட்டுள்ளார். காசிக்குப் போனாலும் சனி விடாது என்ற பழமொழி போல் ஜூலி எங்கு போய் வீடியோ போட்டாலும் நெட்டிசன்கள் அவரை கலாய்ப்பது விடுவதில்லை போல. ஒருசில நெகட்டிவ் கமெண்ட் களுக்கே நான் போறேன் போ என்று சமூக வலைதளங்களில் இருந்து தெறித்து ஓடும் செலிபிரிட்டிகளுக்கு மத்தியில் நெகட்டிவ் கமெண்ட்களையே தன்னுடைய பலமாக மாற்றி எதைப்பற்றியும் கவலைப்படாமல் யாருடைய விமர்சனங்களையும் கண்டுகொள்ளாமல் தன் வேலையை தொடர்ந்து செய்து வரும் ஜூலி இந்த விஷயத்தில் உண்மையிலே வீரத்தமிழச்சி தானோ என்னவோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+