பிக்பாஸில் தமிழ்நாடுனு உரக்க சொன்ன விக்ரமன்! தெரிஞ்சி சொல்றீங்களா தெரியாம சொல்றீங்களான்னு கேட்ட டிடி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொங்கல் விழா கொண்டாட்டத்தின்போது தமிழ்நாடு என பெயர் எப்படி கிடைத்தது என விக்ரமன், சிறப்பு விருந்தினர் டிடிக்கு விளக்கினார். அப்போது டிடி தமிழ்நாடு தமிழ்நாடுதான் என வெளியே நடக்கும் பிரச்சினையை மனதில் வைத்துக் கொண்டு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதலில் 21 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஒவ்வொருவராக எலிமினேட் ஆகி 6 போட்டியாளர்கள் இருந்தனர். இவர்களில் கதிரவன் 3 லட்சம் பணத்துடன் வெளியேறினார். மீதமுள்ள 5 பேர் 105 ஆவது நாளாக நிகழ்ச்சியில் பயணித்து வருகிறார்கள்.
அமுதவாணன், அசீம், நந்தினி, ஷிவின், விக்ரமன் ஆகியோர் இறுதியாக இருக்கிறார்கள். இவர்களில் ஒரு வின்னரும் ஒரு ரன்னரும் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் 5 பேரில் நந்தினி மட்டுமே நிகழ்ச்சி தொடங்கிய 7ஆவது நாளில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வந்துள்ளார்.

101 ஆவது நாள்
தற்போது 101 ஆவது நாளாக வெற்றிகரமாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 105 ஆவது நாளில் மக்களின் வாக்களிப்புபடி வின்னரும் ரன்னரும் தேர்வு செய்யப்படுவார்கள். அது வரை போட்டியிலிருந்து வெளியேறியவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து செல்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கரும்பு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து பொங்கலை கொண்டாடினர். இந்த பொங்கல் விழாவுக்கு தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி) சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.

ப்ரோமோ
அவர் கலந்து கொண்ட ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விக்ரமன் டிடியை வணக்கம் எனக் கூறி வரவேற்கிறார். அவர் கூறுகையில் டிடி இன்று பொங்கல் என்பது நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனால் இன்று ஒரு முக்கியமான நாளும் கூட! அது என்னவன்றால் நம்முடைய மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் வந்த நாள் இன்று!

ஏன் என கேட்ட டிடி
உடனே குறுக்கிட்ட டிடி, "இதை தெரிஞ்சி சொல்றீங்களா இல்லை தெரியாம சொல்றீங்களான்னு தெரியலை, பரவாயில்லை சொல்லுங்க!" என்கிறார். உடனே விக்ரமன் ஏன் ஏன் என கேட்கிறார். அதற்கு டிடி ஒன்னுமில்லை நீங்கள் சொல்லுங்கள். கரெக்ட் இன்றுதான் தமிழ்நாடு என பெயர் வந்த நாள். இதற்காக நிறைய பேர் போராடி அந்த பெயரை கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறார்.

14 நாட்கள் உண்ணாவிரதம்
உடனே விக்ரமன், அவ்வாறு போராடியவர்களில் ஒருவர் சங்கரலிங்கனார். அவர் ஒரு தமிழறிஞர், தியாகி. இந்த கோரிக்கை வலியுறுத்தி 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் கோரிக்கை நிறைவேறுவதற்குள் அவர் இறந்து விட்டார். அதன்பிறகு 1968 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையிலான ஆட்சியில் நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரை வைத்தார். எனவே தமிழ்நாடு என்ற பெயருக்காக போராடிய அனைவருக்கும் இந்த நன்னாளில் நாம் அஞ்சலி செலுத்தும்விதமாக பொங்கல் வைப்போம் என விக்ரமன் சொன்னார்.

தமிழ்நாடு
அப்போது டிடி, 1968 இல் அண்ணா போராடி தமிழ்நாடு என்ற பெயரை வைத்தார். எனவே என்றாக இருந்தாலும் தமிழ்நாடு தமிழ்நாடுதான். வேறு எந்த பெயரும் அதற்கு பொருத்தமாக இருக்காது இல்லையா ஒரு வாட்டி உரக்க சொல்லுங்கள் என டிடி கேட்க, அதற்கு தமிழ்நாடு தமிழ்நாடுதான் என்கிறார். உடனே மைனா நந்தினி, டிடி அக்கா பூவை புஷ்பம்னு சொல்லலாம், புய்ப்பம்னு சொல்லலாம் என்கிறார். அதற்கு டிடி, இதெல்லாம் உங்களுக்கு இப்போ புரியாது, வெளியே வந்த பிறகு புரியும் என்கிறார்.

தமிழ்நாடு தமிழ்நாடுதான்
உடனே விக்ரமன், இந்த தமிழ்நாடு என்ற பெயர் காரணத்தை நான் சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டை கொங்கு நாடு என பிரிக்க வேண்டும் என தமிழ்நாட்டுக்கு ஒவ்வாத கூட்டம் வலியுறுத்தினாங்க. அப்போது நான் சொன்னேன், இப்படியெல்லாம் நீங்கள் பேசினீர்களேயானால் இந்த மண்ணை நாங்கள் பெரியார் நாடு என அறிவிப்போம். தமிழ்நாடு என பெயர் வருவதற்காக உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு நாம் எப்போதும் தலைவணங்க வேண்டும். பெரியார் நாடாக இருந்தாலும் அண்ணா நாடாக இருந்தாலும் பெரியார் நாடாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் பொதுவான பெயர் தமிழ்நாடுதான். இது தமிழ்நாடுதான் என விக்ரமன் அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications