உடைந்த அபிராமியின் குடும்பம்.. குன்றத்தூர் ஜோடி, இனி அப்பீலுக்கு போனால் என்னாகும்? பரிதாப கணவர்
சென்னை: குன்றத்தூர் அபிராமி தன்னுடைய இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில், தற்போது தண்டனை பெற்றுள்ளார்.. வாழ்நாள் முழுவதும் சிறைதண்டனையை பெற்றுள்ளார்.. இந்த தீர்ப்பு வெளியானதுமே கண்ணீர்விட்டு சிறை வளாகத்தில் கதறி அழுதார் அபிராமி.. அதேபோல மீனாட்சி சுந்தரமும் அதிர்ச்சியில் அழுதுகொண்டேயிருந்தார். அபிராமி - மீனாட்சி சுந்தரம் இருவருமே இன்று தண்டனை பெற்றுள்ள நிலையில், அவர்களது குடும்பங்கள் நிலைகுலைந்துள்ளன.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சுபைர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், ஜெயிலுக்குள்ளே சென்றதுமே, சம்பந்தப்பட்டவர்களின் உடைகளை, உடைமைகளை வாங்கி வைத்து கொண்டு, சிறையில் உடுத்தும் உடையை தந்துவிடுவிடுவார்கள்.. மீண்டும் வெளியே அழைத்து வரும்போது, மீண்டும் அவர்களது உடை, உடைமைகளை அணிந்து கொள்ள தருவார்கள்..

அபிராமி நெயில்பாலிஷ் - மோதிரம்
அந்தவகையில், அபிராமிக்கு உடை, மோதிரம் தந்திருக்கலாம்.. அதுவும் இல்லாமல 8 வருடமாக ஜெயில் வாழ்க்கையே அபிராமிக்கு பழகிவிட்டது.. ஆனால், இவ்வளவ பெரிய படுபாதக செயலை செய்துவிட்டு, தீர்ப்பு வரும்நாளில் , குற்ற உணர்ச்சியே இல்லாமல் அபிராமி கோர்ட்டுக்கு வந்தது, பலருக்கும் அதிர்ச்சியை தந்துவிட்டது.
அப்போது, அவரது தலையில் காணப்பட்ட ஹேர் கிளிப்கள், நகத்துக்கு நெயில்பாலிஷ் போன்றவைகளை கவனித்த பொதுமக்கள், கேள்வியாக எழுப்பிவிட்டார்கள்.
சின்னா பின்னமாக சிதறிய குடும்பம்
அபிராமிக்கு காமம் தலைக்கேறியதன் விளைவு, அவரை சார்ந்த 3 குடும்பங்களுமே இன்று சின்னாபின்னமாகிவிட்டது. அபிராமியின் 2 குழந்தைகள் இறந்துவிட்டன.. கடைசி நேரத்தில் கணவர் உயிர் பிழைத்துவிட்டார்.. ஆனால், வாழ்நாள் முழுவதும் ஆறாத ரணத்தை, கணவருக்கு தந்துவிட்டார் அபிராமி.
மீனாட்சி சுந்தரத்தின் அப்பா, எல்ஐசி ஏஜெண்ட்டாக இருக்கிறார்.. சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம்.. எனவே, மீனாட்சி சுந்தரத்தின் வருமானத்தை நம்பியே அந்த குடும்பம் ஓடியிருக்கிறது. மீனாட்சி சுந்தரமும் 8 வருடம் முறை சிறைக்கு சென்றுவிட்டதால், அவரது அப்பாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. அவரை கவனிக்க ஆளின்றி மீனாட்சி சுந்தரத்தின் குடும்பம் தத்தளித்து கொண்டிருக்கிறது.
அபிராமியின் தம்பி
அபிராமி குடும்பத்தை பொறுத்தவரை, அங்கேயும் அதே நிலைமைதான்.. அபிராமிக்கு ஒரு தம்பி இருந்தார்.. அவர் ஒரு பெண்ணை காதலித்தார்.. இதையடுத்து, இரு வீட்டிலும் திருமணம் செய்ய முடிவு செய்து, நிச்சயதார்த்தம் செய்ய வந்துள்ளனர்.. நிச்சயதார்த்தத்தின்போதுதான், தான் காதலித்தவர் அபிராமியின் தம்பி என்பதை அறிந்து, அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.. உடனே இந்த திருமணத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விட்டாரகள். இதனால் மனம் உடைந்த அபிராமியின் தம்பி, தற்கொலையே செய்துகொண்டார்.
இப்படி, அபிராமி வாழ்க்கை, மீனாட்சி சுந்தரம் வாழ்க்கை, அபிராமி கணவரின் வாழ்க்கை என 3 பேரின் வாழ்க்கையுமே சிதைந்துவிட்டது.. சாதாரண காமம் என்ற தீப்பொறி 2 குடும்பத்தையே அழித்துவிட்டது..
சில்லு சில்லாக சிதறிய குடும்பம்
குழந்தைகளை கொலை செய்தது குறித்து மீனாட்சி சுந்தரமும், அபிராமியும் பேசிய ஆடியோ வெளிவந்து ஏற்கனவே பரபரப்பை தந்தது.. ஆனால் இப்போது மீனாட்சி சுந்தரம், எங்களுக்குள் உறவு இருந்தது உண்மைதான்.. ஆனால், குழந்தையை கொல்லும்படி சொல்லவில்லை, அபிராமியே இந்த முடிவை தன்னிச்சையாக எடுத்தார் என்றார்..
எது எப்படியிருந்தாலும், முதல் குற்றவாளி அபிராமி, 2வது குற்றவாளி மீனாட்சி சுந்தரம் என்றே இறுதியாகி தீர்ப்பும் வெளியாகிவிட்டது.
அப்பீல் மனு
இதை எதிர்த்து இருவரும் உயர்நீதிமன்றம் போவார்கள், பிறகு உச்சநீதிமன்றமும் போவார்கள்... எனினும், தற்போது வழங்கப்பட்டுள்ள இதே தீர்ப்பைதான், இனிவரும் நீதிமன்றங்களிலும் உறுதி செய்வார்கள்.. பச்சிளம் குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதாலும், அனைவராலும் பேசப்பட்ட வழக்கு என்பதாலும், தற்போதுள்ள வழங்கப்பட்ட தீர்ப்பில் பெரிதாக மாற்றம் இருக்காது.
ஆணோ, பெண்ணோ, அவரவர் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ள, சட்டமும், அரசாங்கமும் இடம் தந்துள்ளது.. அதுக்காக, குழந்தைகளை கொல்வதை ஏற்க முடியாது.. கொலை செய்தால் கைதாகுவோம், தண்டனை அனுபவிப்போம் என்றுகூட யோசிக்காத அளவுக்கு காமம் கண்ணை மறைத்துள்ளது.
இவர்கள் 2 பேருமே வெளியே வருவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை. இருவரையும் மன்னிக்க யாரும் தயாராக இல்லை.. இவ்வளவு நடந்தும்கூட, ஃபுல் மேக்கப்புடன் கோர்ட்டுக்கு ஒரு பெண் வரும்போது, அவருக்கு தூக்கு தண்டனையே தந்திருக்க வேண்டும் என்றுதான் பலரும் பதிவுகளை செய்து வருகிறார்கள்..
நாங்கள் திருந்திட்டோம், மாறிட்டோம், வயதான பெற்றோரை கவனிக்க வேண்டும் என்றெல்லாம் இருவர் தரப்பிலும் வாதங்கள் வைத்தாலும், பெரும்பாலும் அதனை நீதிமன்றம் பரிசீலிக்காது..
இவர்கள் செய்த தவறால், அவர்களது 2 குடும்பங்களுமே இன்று சிதைந்து விட்டது..அபிராமி செய்த தவறு அவரை மட்டுமே பாதிக்கவில்லை.. அபிராமியின் குடும்பத்தையும் தாண்டி, , அபிராமியின் தூரத்து உறவினர்களையும் சேர்த்தே களங்கத்தையும், அவமானத்தையும் அவர் ஏற்படுத்திவிட்டார்" என்றார்.












Click it and Unblock the Notifications