Bison Kaalamaadan Box Office: சாதனை படைக்கும் 'பைசன் காளமாடன்'! மொத்த வசூல் இத்தனை கோடியாம்!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான 'பைசன் காளமாடன்' திரைப்படம், திரையரங்குகளில் வெளியான 20 நாட்களுக்குப் பிறகும் தொடர்ந்துச் சிறப்பான வசூலை குவித்து வருகிறது. சமூக நீதியையும், கபடி வீரனின் நெஞ்சுரத்தையும் பேசிய இந்தப் படம், விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் தனது பிடியை இறுக்கி உள்ளது.
சாக்னிக் (Sacnilk) இணையதளம் வெளியிட்டுள்ளத் தகவலின் அடிப்படையில், இந்த படத்தின் மொத்த வசூல் மற்றும் சமீபத்திய கலெக்ஷன் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

பைசன் காளமாடன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
மொத்த வசூல் 20 நாட்கள் வரை 45.03 கோடி, அதில் நேற்று 20வது நாள்) வசூல் 22 லட்சம். மொத்த உலகளாவிய வசூல் 63.13கோடி. இந்த படத்தின் தயாரிப்பு செலவு (Budget) 30 கோடி என்று கூறப்படுகிறது. இந்த படம், துல்லியமான திரைக்கதை மற்றும் நடிகர்களின் அழுத்தமான நடிப்பால், 50 லாபத்தை ஈட்டியுள்ளது.
கதையும் விமர்சனமும்
கபடிப்போட்டி வீரர் மாணத்தி கணேசனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 'பைசன் காளமாடன்', 1990களின் கிராமப்புற தமிழகத்தை பின்னணியாகக் கொண்டது. கிட்டான் வேலுசாமி (துருவ் விக்ரம்) என்ற இளைஞன், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன். அவன் ஜாதிப் பாகுபாடு, வன்முறை மற்றும் குடும்ப எதிர்ப்பையும் மீறி, கபடியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த கனவு காண்கிறான். தனதுத் தந்தையின் (பசுபதி) எதிர்ப்பையும், நிலப்பிரபுவான கந்தசாமியின் (லால்) ஆதிக்கத்தையும் மீறி, கிட்டான் தன் கோபத்தையும் வலிமையையும் விளையாட்டில் செலுத்துகிறான். ஒரு பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன், அவன் 'பைசன்' ஆக உருவெடுத்து சமூக மாற்றத்துக்கானச் சின்னமாக மாறுவதே இப்படத்தின் உணர்வுப்பூர்வமானக் கதை.
படத்தின் விமர்சனம்
மாரி செல்வராஜ் தனது முந்தைய படங்களைப் போலவே, இந்தத் திரைப்படத்திலும் சமூகப் பிரச்சனை, சாதிய ஒடுக்குமுறை மற்றும் வீர விளையாட்டு ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தி உள்ளார். மிருக உருவகங்களை பயன்படுத்துவதில் மாரி செல்வராஜுக்கு இருக்கும் ஆர்வம் இப்படத்தின் தலைப்பிலும், துருவ்வின் உடல்மொழியிலும் எதிரொலிக்கிறது.
துருவ் விக்ரமின் நடிப்பு
கிட்டான் பாத்திரத்தில் துருவ் விக்ரம் தனது திரைப் பயணத்தில் மிகவும் தீவிரமான மற்றும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது உடல்மொழி, ஆத்திரம் மற்றும் விரக்தி ஆகியவைப் பாராட்டப்பட்டன. கிட்டான் மற்றும் அவரதுத் தந்தை வேலுசாமி இடையேயான பிணைப்புதான் படத்தின் ஆன்மாவாக உள்ளது என்று பல விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். பசுபதி, ராஜீஷா விஜயன் போன்றவர்களின் ஆதரவு நடிப்பும் படத்துக்குப் பலம் சேர்த்தது.
விமர்சனம்
இருப்பினும், சில விமர்சகர்கள், இரண்டாம் பாதியில் கதைக்களம் சலிப்பை ஏற்படுத்தியதாகவும், சில பாத்திரங்கள் ஆழமாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். இருந்தபோதிலும், இந்தப் படம் அர்த்தமுள்ளதாகவும், உறுதியானதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும் இருப்பதாகப் பெரும்பான்மையானக் கருத்துகள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில், 'பைசன் காளமாடன்' திரைப்படம் ஒரு வலுவானத் துவக்கத்தை அமைத்து, அதன் சமூக உள்ளடக்கம் மற்றும் துருவ் விக்ரமின் அர்ப்பணிப்பான நடிப்பால், வணிக ரீதியாக வெற்றியடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications