Bison OTT: 'பைசன்' இந்த வாரம் ஓடிடிக்கு வருது! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்! வெளியான தகவல்!
இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் துருவ் விக்ரம் கூட்டணியில் கடந்த மாதம் 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான 'பைசன்' (BISON) திரைப்படம், திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதுடன், வசூலிலும் சாதனைப் படைத்துள்ளது. விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இப்போது நேரடி இணைய வெளியீட்டுக்குத் (OTT) தயாராகி உள்ளது.

பைசன் கதைக்களம்
இந்தப் படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கபடி வீரர் தனது அடையாளத்தையும், கபடி மீதான காதலையும் தக்கவைத்துக்கொள்ள நடத்தும் போராட்டமே இப்படத்தின் மையக்கரு. மாரி செல்வராஜின் முந்தைய படங்கள் போலவே, இந்தப் படமும் விளையாட்டு மற்றும் சமூக நீதி பின்னணியைக் கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமானக் கதையாகப் பார்க்கப்படுகிறது.
பிரபல தயாரிப்பு
இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
படம் வெளியான நாள் முதல், இதன் துணிச்சல்மிக்கக் கதை சொல்லும் பாணிக்கும், நடிகர்களின் யதார்த்தமான நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்தன. துருவ் விக்ரம் கபடி வீரராகப் பொருந்தியிருக்கிறார் என்றும், குறிப்பாக லால், பசுபதி ஆகியோரின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது என்றும் சினிமா விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
பிரபலங்களின் பாராட்டு
இந்தப் படம் வெளியானதில் இருந்து, இதன் துணிச்சலானக் கதைக்களத்துக்காகத் திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடமிருந்துப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ரஜினிகாந்த் தொடங்கி, இயக்குநர்கள் வெற்றிமாறன், சேரன், வசந்தபாலன் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் படக்குழுவினரை நேரில் அழைத்துச் சிறப்பித்திருந்தார்.
இயக்குநர் திலகம்
இந்தப் படத்தை பாராட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாரி செல்வராஜுக்கு 'இயக்குநர் திலகம்' என்றப் பட்டத்தையும் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது! அடுத்து துரை வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் படத்தைப் பாராட்டியுள்ளனர்.
வசூல் வேட்டையும், இணைய வெளியீட்டு அப்டேட்டும்
திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற 'பைசன்' திரைப்படம், வசூல் ரீதியாகவும் சாதனைப் படைத்துள்ளது. வெளியான 25 நாட்களில் இப்படம் 70 கோடிக்கும் மேல் வசூலித்து, தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டித் தந்திருக்கிறது. இந்தப் படத்தின் நேரடி இணைய வெளியீட்டு தேதி இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 21ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தைக் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் தவறவிட்டவர்களும், மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களும் இப்போது இணையத்தில் இப்படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications