Good Bad Ugly: படம் முழுக்க “இதுதான்”! எங்க தாலியை ஏன் அறுக்குறீங்க? ப்ளூசட்டை மாறன் ரிவ்யூ! கோபத்தில் ரசிகர்கள்
சென்னை: இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஏப்ரல் பத்தாம் தேதியான நேற்று திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியானது. இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ செய்திருக்கிறார். அதற்கு அஜித்தின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
குட் பேட் அக்லி திரைப்படத்தைப் பற்றி ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட வீடியோவில் இந்த திரைப்படத்தின் கதாநாயகன் அஜித்குமார் மிகப்பெரிய டானாகவும் கேங்ஸ்டர் ஸ்டார் ஆகவும் இருக்கிறார். அவர் திரிஷாவை கல்யாணம் பண்றாரு. அவங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. குழந்தையை பார்ப்பதற்காக அஜித் போகும்போது நீ பெரிய கேங்ஸ்டர் ஆக இருப்பதால் என்னுடைய குழந்தைக்கு ஆபத்து இருக்கிறது அதனால் நீ குழந்தையை பார்க்க வரக்கூடாது என்று திரிஷா சொல்றாங்க.

ப்ளூசட்டை மாறன் ரிவ்யூ
அதோடு நீ நல்லவனா திருந்தி வந்தா மட்டும் தான் குழந்தையை தொடணும் என்று சொல்லிவிடுகிறார். அதனால் தன்னுடைய மகனுக்காக தான் செய்த தவறுகளை எல்லாம் ஒத்துக்கொண்டு ஜெயிலுக்கு போகிறார். ஜெயிலுக்கு போனவர் 18 வருஷங்களுக்கு பிறகு தான் வெளியே வர முடியும் என்ற சூழலில் மகனுடைய பிறந்தநாளுக்கு ஜெயிலில் இருந்து வருகிறார்.
குட் பேட் அக்லி கதை
அஜித் வெளியே வரும்போது அவருடைய மகன் போதைப்பொருள் வழக்கில் ஜெயிலுக்கு செல்கிறார். தன்னுடைய மகன் மீது திட்டமிட்டு பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து விட்டதால் மகனை காப்பாற்ற எந்த கேங்ஸ்டர் தொழிலை விட்டாரோ அதே தொழிலை கையில் எடுக்கிறார். அதற்குப் பிறகு என்ன ஆனது என்பதுதான் கதை. இந்த கதையில் முக்கால்வாசியை வாய்ஸ் ஓவரில் சொல்லி விடுகிறார்கள்.
பில்டப் காட்சிகள்
மீதி ஒன்னு ரெண்டு காட்சிகள் மட்டும்தான் விஷுவலில் காட்டுகிறார்கள். படத்தில் நான்கு காட்சிகள் மட்டும் தான் எக்ஸ்ட்ரா இருக்கிறது. படத்தில் கதையோ திரைக்கதையோ எந்த ஒரு டெவலப்மென்ட்டும் இருக்காது. கதையில் எந்த ஒரு உயிரும் இருக்காது. அதை வைத்து படம் எடுத்து இருக்கிறார்கள். மீதி படத்தில் என்ன செய்து வைத்துள்ளார்கள் என்றால் ஹீரோ யார் தெரியுமா? எப்படிப்பட்டவர் தெரியுமா? என்ன செய்வார் தெரியுமா? என்றெல்லாம் ஓவர் பில்டப் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தில் வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் பில்டப் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். கேட்டால் படத்தின் இயக்குனர் ஹீரோவின் ஃபேன் பாய் என்று கூறுகிறார்கள். டான் என்றால் படிக்கட்டுகளில் ஏற வேண்டும், இறங்க வேண்டும் என்பதே போல் ஃபேன் பாய் என்றால் இப்படித்தான் படத்தை எடுத்து அடுத்தவன் உசுரை வாங்கணுமா?

ஃபேன் பாய் மூவ்மெண்ட்
நீ ஃபேன் பாயா இருந்தா அந்த காலத்துல மன்னர்களை புகழ்ந்து பாடி புலவர்கள் பரிசு வாங்குவாங்க அந்த மாதிரி வாங்கிட்டு போங்க. முருகரை பார்த்த உடனே ஔவையார் பழம் நீயப்பானுபாடுவாங்க. அது மாதிரி நீ வேணா அஜித் வீட்டு வாசலில் போய் உட்கார்ந்து பழம் நீயப்பா பழுத்த பழம் நீயப்பான்னு பாடு. அதை விட்டுட்டு ஃபேன் பாய்னா இப்படித்தான் எடுப்பாங்கன்னு எங்க தாலியை ஏன்டா அறுக்குற.
பழைய பாட்டு
எவனுமே ஆடியன்ஸ்காக படம் எடுக்கிறது கிடையாது. எவன் ஹீரோவோ அவனுக்கு பேன் பாயா மாறி எந்த ஒரு கதையும் இல்லாம ஒரு செட்டை மட்டும் போட்டுக்கிட்டு துப்பாக்கியை எடுத்து வரவன் போறவனை எல்லாம் சுட்டுட்டு படம் முடிஞ்சு போச்சு என்கிறார்கள். படம் முழுக்க ரெஃபரன்ஸ்ன்னு போட்டு சாகடித்துவிட்டாங்க. அதுபோல பழைய பாட்டு ஒன்னு ரெண்டு படத்துல வரலாம்... அதுவும் பொருத்தமா இருந்தா அந்த பாட்டு போடலாம். ஆனால் இவங்க படம் முழுக்க பழைய பாட்டு போட்டு வச்சிருக்காங்க.
எல்லாமே பழசு
மொத்தத்தில் இந்த படம் எப்படி இருக்கு என்று கேட்டால் இந்த படம் ரிலீசுக்கு முன்னால் ப்ரொமோஷனில் இந்த படம் வேற லெவலில் இருக்கப் போகிறது, இந்த படம் ஃபேன் பாய் சம்பவம், வின்டேஜ் அஜித் சம்பவம் அந்த அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும் என்றெல்லாம் கூறினார்கள். வின்டேஜ் என்றால் என்ன பழையது என்று அர்த்தம் இந்த படத்தில் எது பழையது என்று பார்த்தால் எல்லாமே பழையது தான். படத்தில் டைட்டில் பழசு படத்தில் நடித்த திரிஷா, சிம்ரன், ஜாக்கி செராப் உள்ளிட்ட அனைவருமே பழசு.

ரசிகர்களின் கமெண்ட்ஸ்
அர்ஜுன் தாஸ் மட்டும்தான் புதுசாக தெரிகிறார் என்று அந்த வீடியோவில் ப்ளூ சட்டை மாறன் பேசி இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் பொதுவாக பல படத்தை இப்படித்தான் விமர்சிப்பார். அவர் எந்த படத்தை தான் நன்றாக இருக்கிறது என்று விமர்சித்தார்? இவருக்கு வேற வேலையே இல்லை என்பது போன்று அதிகமான கமெண்ட்கள் கொடுத்திருக்கிறார்கள். மேலும் ப்ளூ சட்டை மாறனுக்கு புது ட்ரெண்ட் தெரியவில்லை. அவர் விமர்சிக்க தெரியாத விமர்சகர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. ஒவ்வொரு படமும் ஒரு ஸ்டைலில் இருக்கும். எல்லாவற்றிலும் கதை சொல்ல இது எம்ஜிஆர் காலம் இல்லை. ரசிகர்களை ஜாலியாக வைத்திருக்கும் திரைக் கதைதான் மேட்டரே என்பது ஆண்டி இந்தியன் மாதிரி படம் எடுத்த ப்ளூ சட்டை மாறனுக்கு எங்கே புரியப்போகிறது என்கிறார்கள் அஜித் மற்றும் ஆதிக் ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications