வெந்து தணியாத இந்த பிரச்சனைக்கு முடிவே இல்லையா? சிம்பு ரசிகர்களோடு கருத்து மோதலில் ப்ளூ சட்டை மாறன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:ரஷ்யா-உக்கிரைன் பிரச்சினை கூட முடிவுக்கு வந்து விடும் போல ஆனால் ப்ளூ சட்டை மாறன் சிம்பு ரசிகர்கள் பிரச்சனைக்கு ஒரு என்டே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்

.அந்த அளவிற்கு லென்த்தாக வார்த்தை போர் போய்க்கொண்டே இருக்கிறது. யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்று ட்டுவிட்டரில் நிரூபித்து வருகின்றனர். ப்ளூ சட்டை மாறனும் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் போல சிம்பு ரசிகர்கள் போடுகிற பந்தயெல்லாம் தனி ஆளாக எதிர்கொண்டு வருகிறார்.

விமர்சனமே விளம்பரம்

விமர்சனமே விளம்பரம்

திரை விமர்சனங்களை விமர்சிக்க மட்டுமே செய்து பிரபலமானவர் புளூ சட்டை மாறன்.அஜித் நடித்த விவேகம் படத்தை விமர்சித்த விதத்தால் கொஞ்சம் பிரபலமானார்.அதன் பின்பு தான் பலருக்கு இப்படி ஒரு விமர்சகர் இருக்கிறார் என்றும் தெரிய ஆரம்பித்தது. மாறனின் பழைய வீடியோக்களையும் தேடி தேடி பார்த்து வந்தனர்.ஒவ்வொரு நடிகரின் ரசிகர்களும் தங்களுக்கு பிடிக்காத நடிகர் குறித்து மாறன் செய்திருக்கும் நக்கலான விமர்சனங்களை ட்ரெண்ட் செய்து ட்ரெண்ட் செய்து மாறனை நல்ல பிரபலமாக்கி விட்டனர்.

என்னத்த மாறன்

என்னத்த மாறன்

மாறனுக்கு ப்ளூ சட்டை மாறன் என்று பெயர் வைத்ததற்கு பதிலாக "என்னத்த" மாறன் என்று பெயர் வைத்திருக்கலாம். அந்த அளவிற்கு எந்த படமாக இருந்தாலும் 'என்னத்த படம் எடுத்திருக்காங்க' 'என்னத்த கதை' என்று என்னத்தையாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பார்.எல்லா படங்களையும் நெகட்டிவ் விமர்சனம் மட்டும் செய்து கொண்டிருந்தவரை "நீ ஒரு படம் எடு.. அப்ப தெரியும்" என்று ரசிகர்கள் உசுப்பேத்தி ஆன்ட்டி இந்தியன் என்று ஒரு படத்தை வேறு இயக்க வைத்து விட்டனர்.

பார்த்திபன் பட்ட பாடு

பார்த்திபன் பட்ட பாடு

உலக சினிமா பேசும் ப்ளூ சட்டை மாறனிடம் கொஞ்ச நாட்களாக பார்த்திபனின் இரவின் நிழல் படமும் பார்த்திபனும் சிக்கிக் கொண்டு இருந்தார்கள். இரவின் நிழல் படத்தையும் பார்த்திபனையும் குறித்து மாறன் ஏதோ சொல்ல போக பதிலுக்கு பார்த்திபனும் விமர்சிக்க கொஞ்ச நாட்களாக சமூக வலைதளங்களில் இருவருக்கிடையே பெரிய வார்த்தை போரே நடந்தது.அந்தப் பிரச்சனைக்கு பின்பு தான் போடும் வீடியோக்கள் எல்லாவற்றிலும் பார்த்திபனை லைட்டாவாது விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் மாறன்.

வெந்து தணியாத பிரச்சனை

வெந்து தணியாத பிரச்சனை

தற்பொழுது சிம்பு நடித்து வெளிவந்திருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தை குறித்து விமர்சனம் செய்த மாறன்,அதில் நடித்திருந்த நடிகரைப் பற்றி உருவகேலி செய்து இருந்ததாகவும், அதை கண்டித்தும் சிம்பு பேசியிருந்தார்.சிம்புவுக்கு ஆதரவாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் கொஞ்சம் 'இறங்கியே' கருத்து தெரிவித்திருந்தார். பதிலுக்கு மாறனும் வழக்கம்போல் தன் பாணியில் நக்கலாக பதில் சொல்ல கோபமான சிம்பு ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனின் புகைப்படத்தை எரித்ததோடு, சமூக வலைதளங்களிலும் மாறனை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிம்பு ரசிகர்களின் பதிவும் அதற்கு ப்ளூ சட்டை மாறனின் பதில்களும் சமூக வலைதளங்களில் நக்கலாகவும் நகைச்சுவையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+