தனுஷ் பேசிய பாயிண்ட்டை பிடித்துக் கொண்ட ப்ளூ சட்டை மாறன்.. இந்த கிளி கிழிக்கிறாரே? வெடித்த விவாதம்
சென்னை: 72 வது தேசிய திரைப்பட விருதுகளில் ராயன் படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதுதையும், கேப்டன் மில்லர் படத்திற்காக சிறந்த நடிகருக்கான சிறப்பு விருந்தையும் தனுஷ் வெற்றி பெற்றிருந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவி விழாவில் பேசியது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனுஷ் பேசியதை விமர்சிக்கும் வகையில் ப்ளூ சட்டை மாறன் நீண்ட பதிவு வெளியிட்டு இருக்கிறார். அது சோசியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
தனுஷ் பேச்சு
தனுஷ் தன்னுடைய பிறந்தநாள் விழாவில் மாணவர்களுக்கு கல்வி உதவி, ரத்ததான முகாம் உள்ளிட்ட நலத்திட்டங்களை தொடங்கி வைத்து இருந்தார். பிறகு பேசும்போது ராயனை விட சிறந்த படங்கள் வந்திருக்கின்றன என்பதை நானே ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் புதுப்பேட்டை, மயக்கம் என்ன, வடசென்னை, கர்ணன் போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்காத போது யாரும் கேள்வி கேட்கவில்லை? இன்று மட்டும் ஏன் கேட்கிறீர்கள்? என்னை யாரும் தட்டி விட வேண்டாம், தயவு செய்து தட்டிக் கொடுங்கள் என்று பேசி இருந்தார்.
இந்த பேச்சு சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இது குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பதிவில் சுள்ளான் கடந்து வரும் பாதை என்று தனுஷை கலாய்ப்பது போலவே ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறார். பிறகு அறிமுக படத்திலிருந்து ஹாட்ரிக் ஹிட் தந்து தமிழ் திரை உலகை திரும்பி பார்க்க வைத்தார் சுள்ளான். படத்தில் நடித்து மொத்த தமிழ்நாட்டையும் சிரிக்க வைத்தார்.

ப்ளூ சட்டை மாறன் பதிவு
தென்னிந்திய புரூஸ்லீ என்னும் பட்டம் வேறு தந்து கொண்டார். கொலவெறி பாடலால் இந்திய அளவில் பிரபலமானார். உலக மகா சமூக கருத்துக்களை கொண்ட இப்பாடலை தந்த இவரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2011ல் நேரில் அழைத்து பாராட்டிய காமெடியும் நடந்தது. பொல்லாதவன், ஆடுகளம், அசுரனில் நடித்து பெயர் வாங்கினார். படிக்காதவன், மாப்பிள்ளை பரட்டை என தலீவரின் பட டைட்டில்களில் நடித்தார்.
தலீவர் (ரஜினி) போல இவரும் ஒரு சங்கீ தான். ஒரு கட்டத்தில் வெள்ளை ஜிப்பா, ருத்ராட்சம் என கெட்டப்பை மாற்றி இமயமலை பாபா, பாஜக பாசம் என மாறினார் தலீவர். இவரும் வெள்ளை வேஷ்டி, சட்டை ருத்ராட்சம், ஓம் நமச்சிவாய என கலர் மாறினார். காலா, கபாலி மூலம் தலித் மக்கள் மீது பாசம் உள்ளது போல வேஷம் காட்டினார் தலீவர்.
தனுஷை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
கர்ணன், அசுரன், கேப்டன் மில்லர் மூலம் அதே டெக்னிக்கில் இவரும் வேஷம் காட்டினார். ஏன் சார் நாங்க போயஸ் கார்டன்ல வீடு வாங்க கூடாதா என இவர் பேசியது ட்ரோல் மெட்டீரியல் ஆனது. இட்லி கடை படத்தில் குலத்தொழில் செய்வது சரி எனும் இவர் இந்துத்துவா பிற்போக்கு கொள்கையை புகுத்தினார். அசுரனுக்கு தேசிய விருது பெற்றபோது பலரும் பாராட்டினர். ஆனால் திருச்சிற்றம்பலம் ராயன், கேப்டன் மில்லர் என தொடர்ந்து இவருக்கு தேசிய விருதுகள் தந்தது ஏன் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.
பாஜகவிற்கு பிரச்சாரம் செய்யும் நடன ஆசிரியை கலா இந்த தேசிய விருது நடுவர் என்பது முக்கிய பாயிண்ட். இவரது தந்தையும் அண்ணனும் இந்துத்துவா ஆதரவாளர் என்பது ஊரறிந்த உண்மை. இவரது குலதெய்வம் கருப்பசாமி, நம்ம மாநில கிராமத்து தெய்வத்தின் பெயரை சொல்லாமல் மேடைகளில் மற்றும் லெட்டர் பேடில் ஓம் நமச்சிவாய என இவர் சொல்வதன் அஜெண்டா உங்களுக்கு தெரிந்தது.
இந்த தேர்தலில் விஜய் தோற்று இருந்தால் இந்த சுள்ளான் ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் அரசியல் ஆசையை குழிதோண்டி புதைத்து இருப்பார்கள். ஆனால் விஜய் ஜெயித்த பிறகு இந்த முட்டாள் கூட்டம் தங்களையும் முதல்வராக்கும் என உறுதியாக நம்புகிறார்கள். அதனால் தான் தனது ரசிகர் மன்றம் மூலம் கடந்த சில நாட்களாக சமூக சேவையில் ஈடு இயங்கியுள்ளார் சுள்ளான். இவருக்கு பின்னால் நிற்கிறது காவி கட்சி.
ரஜினியை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
மாமனாரின் ஆன்மீக ஆட்சி அமைக்கும் கனவை தமிழ்நாட்டில் நிறைவேற்ற தயாராகி விட்டார் சுள்ளான். யாரை எங்க வைக்க வேண்டும் என்பது மக்கள் கையில். மீண்டும் ஒரு நடிகர் தமிழகத்தை ஆண்டால் அதைவிட கேவலம் இருக்க முடியாது... ஓம் கருப்பசாமி, மானமுள்ள தமிழர்கள் உஷாராக இருங்க சாமி.. என்று அந்த பதிவை ப்ளூ சட்டை மாறன் முடித்து இரக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் இதுபோல போஸ்ட் போட்டதுதான் தாமதம் தனுஷ், ரஜினி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்து வருகின்றனர். அதே நேரத்தில் விஜய் ரசிகர்கள் எங்க தலைவருடைய ஆட்சி ஒன்றும் மோசமாய் இல்லை என்று சப்போர்ட் செய்து வருகிறார்கள். இதனால் எக்ஸ் தளத்தில் ஒரு பெரிய பஞ்சாயத்தை நடந்து கொண்டிருக்கிறது.
விஜய் அரசியலுக்கு வரும்போது எப்படி எல்லாம் மக்களுக்கு உதவி செய்கிறேன் என்று செய்தாரோ... அதேபோல இப்போது தனுஷ் ஆரம்பித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. ஆனாலும் தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
