தனுஷ், யூடியூபர்கள் விஷயத்தில் நயன்தாரா செய்தது நாகரீகமா? புரட்சி பேசியவர்கள் எங்கே?- ப்ளூசட்டை மாறன்
சென்னை: திரைப்படம் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனுஷ் மற்றும் யூடியூபர் வலைப்பேச்சு விஷயத்தில் நயன்தாரா செய்தது குறித்து விமர்சித்து ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கமெண்ட் பெற்று வருகிறது.
நடிகை நயன்தாரா சின்னத்திறையில் இருந்து வெள்ளி திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் எளிமையாக திரைப்படங்களில் அறிமுகமான நயன்தாரா இப்போது லேடி சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் நயன்தாரா பற்றிய பேச்சு அடிக்கடி வந்து கொண்டு இருக்கிறது. அதிலும் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய ஆவணப்படத்தில் தான் நடித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூன்று நிமிட காட்சிகளை பயன்படுத்தியதற்காக தனுஷ் கார்ப்பரேட்டுக்காக நஷ்ட ஈடு கேட்கிறார் என்று மூன்று பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டிருந்தார். அது பெரிய அளவில் பேசப்பட்டது.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் ஹிந்தி youtube சேனலில் தன்னை பற்றி பரவி வரும் வதந்திகள் பற்றியும் தன்னை பற்றி சில youtube பேசுகிறார்கள், அவர்கள் குரங்கு போல தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்து இருந்தார். இதுவும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் மூன்று நொடி வீடியோ காப்பிரைட் விவாகரத்தில் தனுஷை சாடி பல பக்க கட்டுரை எழுதினார் நயன்தாரா மேடம். அதன் ஆரம்பத்தில் B/O selvaraghavan, S/O Kasturi Raja என குறிப்பிட்டு இருந்தார்.
தனிப்பட்ட விவாகரத்தில் குடும்பத்தினரை இழுப்பது என்ன வகையான நாகரிகம்? இதற்கு பார்வதி உள்ளிட்ட மலையாள நடிகைகள் லைக் வேற செய்திருக்கிறார்கள். ஒருவேளை இப்படி ஒரு கடிதத்தை தனுஷ் எழுதி, அதில் W/O விக்னேஷ் சிவன் என்றும் D/O என இவரது பெற்றோர் பெயர்களை குறிப்பிட்டு இருந்தால் முற்போக்குவாதிகளும், பார்வதி உள்ளிட்ட புரட்சி நடிகை எப்படி சலங்கை கட்டி ஆடி இருப்பார்கள்..?
தற்போது Hollywood reporter India எனும் ஆங்கில youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் வலைப்பேச்சு குழுவினரை மூன்று குரங்குகள் என மறைமுகமாக நையாண்டி செய்துள்ளார் மேடம். ஆங்கிலத்தில் மங்கி எனவும், ஹிந்தியில் பந்தர் எனவும் விளக்கம் வேறு.. ஒரு வேலை வலைப்பேச்சில் இவரை இதுபோன்று குரங்குடன் ஒப்பிட்டு பேசி இருந்தால் இந்நேரம் எப்படி கொந்தளித்து இருப்பார்?
படத்தை விமர்சனம் செய்வது தவறில்லை. ஆனால் தரம் தாழக்கூடாது, தனிநபர் தாக்குதல், வண்ணம் கூடாது என நீதி பேசும் தனஞ்செயன் போன்ற திரைத்துறை நீதி போதகர்கள்.. தற்போது எங்கே போனார்கள்? பெண்களை இழிவாக பேசும் போது ரவுண்டு கட்டி ஆடும் உங்கள் புரட்சி சலங்கைகள் ஆண்களை பற்றி கீழ்த்தரமாக பேசும்போது மட்டும் டிரங்கு பெட்டியில் சுருண்டு கிடப்பது ஏன்? என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதில் mani Dravid என்ற ஐடியில் இருந்து, “நீங்கள் வலிமை ரிலீஸில் அஜித்தை உருவ கேலி பண்ணுனது மட்டும் சரியா” என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதுபோல கதிர் என்ற ஐடியில் இருந்து “வா தலைவா” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுபோல அதிகமான கமெண்ட்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இது குறித்து நயன்தாரா தரப்பில் என்ன ரியாக்ஷன் கொடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
3 நொடி வீடியோ காப்பிரைட் விவகாரததில் தனுஷை சாடி பலபக்க கட்டுரை எழுதினார் நயன் மேடம்.
— Blue Sattai Maran (@tamiltalkies) December 14, 2024
அதன் ஆரம்பத்தில் B/o Selvaraghavan, S/o Kasthuriraja என குறிப்பிட்டிருந்தார். தனிப்பட்ட விவகாரத்தில் குடும்பத்தினரை இழுப்பது என்ன வகையான நாகரீகம்?
இதற்கு பார்வதி உள்ளிட்ட மலையாள நடிகைகள் லைக்… pic.twitter.com/6gULdLqNsE












Click it and Unblock the Notifications