எதிர்நீச்சல் இனி அடுத்தடுத்து வரப்போவது இதுதானாம்! ரகசியங்களை உடைத்த “பட்டம்மாள்”
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இனி என்ன நடக்கப் போகிறது என்பதை குறித்து அந்த சீரியலில் பட்டமாளாக நடிக்கும் பாம்பே ஞானம் கூறி இருக்கிறார்.
சீரியல் ஆரம்பித்து எப்போது பேசுவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அப்பத்தா முதல் முறையாக இப்போது தான் ஒரு சில எபிசோடுகளாக பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இனி ரசிகர்கள் எதிர்பார்த்த பல திருப்பங்கள் சீரியலில் வரப்போகிறது ஆனால் எதிர்பார்க்காத நிகழ்வும் நடப்பதாக கூறியிருக்கிறார்.

ரசிகர்களின் விருப்பங்கள்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆண் ஆதிக்கத்தோடு இருக்கும் ஒரு சிலரை பற்றியதாகவும், அவர்களுடைய குணத்தால் கஷ்டப்படும் பெண்களுடைய மனக்குமுறலை சொல்வதாகவும் இந்த சீரியல் இருந்து வருவதாக ரசிகர்கள் பலரும் இந்த சீரியலுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த சீரியல் 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதற்கு முன்பே ஒளிபரப்பாக வேண்டும் என்று பலர் அன்பு கட்டளைகளை இட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சீரியலில் இப்போது ரசிகர்கள் எதிர்பார்த்த பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

ஆட்டத்தை தொடங்கி அப்பத்தா
சீரியல் தொடங்கிய நாளிலிருந்து அந்த வீட்டில் அப்பத்தாவாக இருக்கும் பாம்பே ஞானம் எப்போது பேசுவார் என்று பலரும் கேள்விகளை எழுப்பி வந்தனர். அது மட்டும் இல்லாமல் இவருக்கும் இந்த குடும்பத்திற்கும் என்ன உறவு என்பது கூட தெரியாமல் தான் சஸ்பென்சாக வைத்திருந்தனர். பலர் இவரும் சந்திரமுகி திரைப்படத்தில் வரும் பாம்பும் ஒன்று எதற்கு வருகிறது என்றே தெரியாமல் அடிக்கடி வந்து எட்டிப் பார்த்துவிட்டு சென்று விடுவார்கள் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் குணசேகரனின் சூழ்ச்சியால் சக்தியால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சில ஜனனியை மீண்டும் வீட்டுக்குள் அழைத்து வந்து தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார்.

மருமகளுக்கு வைத்த ஆப்பு
இதுவரைக்கும் அப்பத்தா என்ற ஒரே பெயரில் தெரிந்து வந்த இவர் இப்போது பட்டம்மாள் எம் ஏ என்பதுதான் என்னுடைய பெயர் என்பதை பதிவு செய்திருக்கிறார். ஆட்டம் போடும் குணசேகரன் கதிரை ஒரே வார்த்தையால் அடக்கி வைத்துக் கொண்டு என்னுடைய 40% ஷேரில் நீங்களும் இருந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அனைவருக்கும் மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இதுவரைக்கும் அந்த வீட்டு மருமகள்களை அடிமையாகவும், இழிவாகவும் நடத்தி வந்த மாமியாரையும் தன்னுடைய சிறப்பான பாணியால் தண்டனை கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்.

இனி ஐந்து வருடத்திற்கு எதிர்நீச்சல்
இந்த நிலையில் இந்த சீரியலில் கதை குறைந்தது 5 வருடத்திற்கு செல்லும் நோக்கில் தான் எடுக்கப்பட்டு வருகிறதாம். அதுபோல இனி பல திருப்பங்கள் வரப்போகிறதாம் .ஜனனி புது வேளையில் சேர்ந்து தன்னுடைய திறமையால் ஜெயிக்கப் போகிறாராம். அதுபோல அந்த வீட்டில் இருக்கும் மீதமுள்ள மூன்று மருமகள்களும் இனி சுயமாக முடிவெடுத்து செயல்பட போகிறார்களாம். அதுபோல இதுவரைக்கும் அந்நியனாக மாறிய சக்தி இனி மீண்டும் அம்பியாக மாறி ஜனனியை புரிந்து கொள்ளப் போகிறாராம். ஆனாலும் ஜனனி இனி சக்தியை ஏற்றுக் கொள்ள போவதில்லையாம். தன்னுடைய வாழ்க்கை தொலைந்து விட்டாலும் தன்னைப்போல இருக்கும் பெண்களின் வாழ்க்கை தொலைந்து விடக்கூடாது என்பதற்காக ஜனனி எடுத்த முடிவால் ஒவ்வொரு பெண்களாக வீட்டில் அடுத்தடுத்து செய்யும் செயல்களால் குணசேகருக்கு மட்டுமல்லாமல் மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் இனி விறுவிறுப்பு குறையாமல் இருக்கப் போகிறதாம்.












Click it and Unblock the Notifications