நடிகை காயத்ரியிடம் விஜய் பற்றி கேட்ட கேள்வி.. போஸ் வெங்கட் கொடுத்த ரியாக்ஷன்.. ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
சென்னை: ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு ஒலித்த மெட்டி ஒலி சீரியலில் சரோவாக நடித்து பிரபலமான நடிகை காயத்ரி இப்போது மீண்டும் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். குறிப்பாக தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி வரும் "பிரதர் அண்ட் சிஸ்டர்" சீரிஸில் போஸ் வெங்கட் உடன் இணைத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் சமயத்தில் ஒரு தனியார் விருது விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட போது ஒரு சின்ன சம்பவம் தான் இப்போ சோசியல் மீடியாவில் செம கலாய்யாக மாறி இருக்கிறது.
விருது விழாவில் காயத்ரியும் போஸ் வெங்கட்டும் அருகருகே நின்று கொண்டிருக்க, காயத்ரியிடம் தொகுப்பாளர்கள் விஜய், அஜித் ஆகிய இரண்டு நடிகர்களுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். அப்போது காயத்ரி பேச ஆரம்பித்ததும் பக்கத்தில் நின்று கொண்டிருந்த போஸ் வெங்கட்டின் முகபாவணையை கவனித்த நெட்டிசன்கள் இப்போது கலாய்த்து வருகிறார்கள்.
காயத்ரியிடம் கேட்ட கேள்வி
காயத்ரி விஜய் பற்றி முதலில் பேசும்போது, விஜயுடன் நடிக்கும் போது அவர் ரொம்பவும் அமைதியாக இருப்பார். அதிகமாக பேச மாட்டார். "ஷாட் ஓகே" என்று சொன்னதும் அந்த கேரக்டராக மாறிவிடுவார். மற்ற நேரங்களில் ஏதாவது யோசித்துக் கொண்டிருப்பார். இல்லையென்றால் ஏதாவது படித்துக் கொண்டிருப்பார் என்று கூறினார். அந்த சமயத்தில் போஸ் வெங்கட் விஜய் என்ற பெயரை கேட்டதுமே முகத்தை திருப்பிக் கொண்டு என்னுடைய சண்டைக்காரனை பத்தி பேசினா நான் அந்தப் பக்கம் திருப்பவே மாட்டேன் என்பதுபோல வீரப்பாய் நின்று கொண்டிருக்கிறார். இதைத்தான் நெட்டிசன்கள் இப்போ கலாய்த்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் கருத்து
பிறகு காயத்ரி அஜித் பற்றி பேசும்போது, அஜித் விஜய் மாதிரி கிடையாது. அடுத்து நான் என்ன செய்ய வேண்டும், சினிமாவில் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? என ஏதாவது விஷயங்களை என்னிடம் பேசிக்கொண்டே இருப்பார் என்று சொல்லி இருந்தார். இந்த சமயத்தில் நெட்டிசனகள் காயத்ரி பேசியதை கவனித்தார்களோ இல்லையோ தெரியவில்லை போஸ் வெங்கட் ரியாக்ஷனை மட்டும் கலாய்த்து சோசியல் மீடியாவில் மீம்ஸ்களை குவித்து வருகிறார்கள்.
விஜய்யின் அரசியல் வெற்றி குறித்து ஷாக்.. கங்குவா படத்தை ஒப்பிட்டு நடிகர் போஸ் வெங்கட் பேசியதால் விவாதம்
அண்ணா.. கேள்வி காயத்ரியிடம் கேக்குறாங்க. நீங்க ஏன் இவ்வளவு சீரியஸா இருக்கீங்க என்று ஒருவர் கமெண்ட் கொடுத்திருக்கிறார். இன்னொரு நெட்டிசன் எப்படா இந்த கேள்வி முடியும் என்று காத்திருக்கிறார் போல.. விஜய் பற்றி பேசுகிறார்கள் என்று தெரிந்ததும் வயிறு எரியுதா? என்று தங்களுக்கே உரிய பாணியில் கமாண்டு மழையை பொழிகிறார்கள். இந்த கலாய்ப்புக்கு காரணமும் இருக்கிறது.
விஜய் பற்றிய விமர்சனம்
விஜயின் அரசியல் பயணம் தொடங்கியதில் இருந்தே போஸ் வெங்கட் விஜயின் அரசியல் தகுதி குறித்து வெளிப்படையாக விமர்சனம் செய்து வந்திருக்கிறார். 2024 சூர்யாவின் கங்குவா இசை வெளியீட்டு விழாவில் பேசிய போஸ் வெங்கட், நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு தங்களுடைய ரசிகர்களை நல்ல முறையில் வழிநடத்த வேண்டும். அவர்களுக்கு கல்வி மற்றும் சரி தவறு குறித்து புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.
அதுபோல அதற்கு பிறகு 2025ல் போஸ் வெங்கட் விஜய்யை நேரடியாகவே விமர்சித்து இருந்தார். நடிகராக விஜய் நல்லவர், அரசியல்வாதியாக ஜீரோ. விஜய் தன்னை எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டுவது சரியல்ல. அவருடைய அரசியல் பயணம் சிரஞ்சீவியின் அரசியல் பயணத்தைப் போல ஆகிவிட கூடும் என்று சொல்லி இருந்தார். விஜயால் அரசியலில் 4 சீட்டு கூட வாங்க முடியாது என்று சொல்லி இருந்தார்.

வெளிப்படையான பேச்சு
ஆனால் விஜய் மிகப்பெரிய வெற்றி பெற்றதும் இதை நான் எதிர்பார்க்கவில்லை, தேர்தல் முடிவை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு கனவு போல இருந்தது. என்னுடைய மனைவியும் மகனும் கூட நீங்க சொன்னது எல்லாம் தப்பாகி விட்டதே என்று கலாய்த்தார்கள் என்று வெளிப்படையாகவே பேசி இருந்தார். அதுபோல ஆரம்பத்தில் விஜய் பற்றி என்னென்னவோ பேசிட்டீங்க.. இனியாவது விஜய் பற்றி பாராட்டி பேசுங்க உங்களுக்கு 4 பட வாய்ப்பு கிடைக்கும் என்று சிலர் சொல்றாங்க ஆனால் நான் எப்போதும் என்னுடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் பக்கத்தில் இருக்கும் போது காயத்ரியிடம் கேட்ட கேள்விக்கு இவர் கொடுத்த ரியாக்ஷன் சின்ன புள்ளத்தனமா இருக்கே ஐயா என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
