நடிகருக்கு வந்த நிலைமை? வாரிசானாலும் திறமை தேவை.. தமிழ் சினிமாவில் நெப்போடிசம் இருக்கா? பிரபலம் நச்
சென்னை: பிரபலங்களின் வாரிசுகள் என்பதால் மட்டுமே சினிமாவில் நிலைத்துவிட முடியாது, திறமை இல்லையென்றால், யாராலுமே சினிமாவில் நிலைக்க முடியாது என்று பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, கருத்து தெரிவித்துள்ளார்.
நெப்போடிசம் என்ற சொல், அரசியலை போலவே, சினிமா துறையில் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. சினிமா துறையில் புகழ் பெற்றிருப்பவரின் வாரிசு, அந்த துறையில் வரும்போது அவரது தந்தையின் புகழ் அவருக்கும் கிடைக்கும்.. இதனால் அந்த நபர் தன்னுடைய திறமையை வளர்த்து கொள்ளாமல், வருகிற திறமைசாலிகளின் வளர்ச்சிக்கு முட்டுகட்டை போடுவதாக குற்றச்சாட்டுகள் சோஷியல் மீடியாவில் வெடித்து வருகின்றன.

நெப்போடிசம்: இப்படிப்பட்ட சூழலில், Aram Naadu என்ற யூடிப் சேனலுக்கு தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், அனைத்து பிரபலங்களின் வாரிசுகளையும் நெப்போடிசம் என்று சொல்லிவிட முடியாது என்றும், திறமை இருந்தால் மட்டுமே மக்கள் அவர்களை அங்கீகரிப்பார்கள் என்றும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அந்த பேட்டியின் சுருக்கம்தான் இது:
"விஜய்யின் மகன், லைகாவுக்காக ஒரு படம் டைரக்ட் செய்யப்போவதாக சொல்கிறார்கள். விஜய்யின் மகன் என்பதால், இந்த வாய்ப்பு அவருக்கு வந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அடுத்தடுத்த படங்களிலும் சஞ்சய் நிலைப்பாரா என்பதையும் கவனிக்க வேண்டும். அதற்காக இதை நெப்போடிசம் என்று சொல்ல முடியாது.,
நியாயமான ஆசை: காரணம், ஒரு டாக்டர், தன்னுடைய மகனை டாக்டராக்கவே விரும்புவார். வக்கீல் ஒருவர், தன்னுடைய மகனையும் வக்கீலாக்கவே ஆசைப்படுவார். இதெல்லாம் ஒரு தகப்பனுக்குரிய நியாயமான ஆசைகள். இதை தவறு என்று சொல்ல முடியாது.
விஷால், விஜய், சூர்யா போன்றோர் பிரபலங்களின் வாரிசுகளாக இருந்தாலும், ஆயிரம் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் இங்கு வரவேண்டியிருந்தது. பட்டுக்கம்பளம் விரித்து யாரும் யாரையுமே வரவேற்க மாட்டார்கள். நாளைய தீர்ப்பு படத்தில் நடிக்கும்போது, ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே விஜய்யை கிண்டலடித்தார்களாம்.. இதையெல்லாம் தாண்டிதான் இவர்கள் எல்லாம் உயரத்துக்கு சென்றிருக்கிறார்கள்.
செந்தூர பாண்டி: எஸ்.ஏ. சந்திரசேகரன் அன்று மிகப்பெரிய டைரக்டராக இருந்தார்.. மகன் விஜய்யை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் தோல்வி அடைந்தன. ஒருகட்டத்தில் குடியிருக்கும் வீட்டையே விற்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது. செந்தூர பாண்டி படத்தில் விஜயகாந்த் நடித்ததால், விஜய் எல்லா இடத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். ஆனால், விஜயகாந்த் செய்ததை போல வேறு யாரும் முன்வந்து அப்படி நடித்து தந்து உதவியிருப்பார்களா தெரியாது.
அதர்வா நல்ல நடிகர்தான். ஆனாலும் அவரை மக்கள் ஏற்கவில்லையே.. மக்கள் ஏற்றுக் கொண்டால்தான் ரஜினிகாந்த், மக்கள் ஏற்றுக் கொண்டால்தான் சிவகார்த்திகேயன்... "அது இது எது" என்று டிவியில் ஷோ செய்தபோது, 15 வருஷம் கழித்து, தனி ஆளுமையாக சிவகார்த்திகேயன் நிற்பாருன்னு யாராவது எதிர்பார்த்தோமா? அமரன் படத்துக்கு பிறகு 70 கோடி அவருக்கு சம்பளம்ன்னு சொல்றாங்க.. விடுதலை 2 -க்கு பிறகு விஜய் சேதுபதியின் சம்பளமும் வேற லெவலுக்கு போகிறது.
பிரபலங்கள்: நெப்போடிசம் என்றால் இவர்கள் சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இவர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தார்கள்? கவுண்டமணி செந்தில், கோவை சரளா, மனோரமா, சூரி, யோகி பாபு, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் இவங்க எல்லாரும் எங்கிருந்து வந்தார்கள்? எந்த பிரபலத்தின் பிள்ளைகள் இவர்கள்?
பிரபலத்தின் வாரிசுகளாக இருந்தால், திரையில் அறிமுகப்படுத்த மட்டுமே அவர்களால் முடியும்.. எத்தனையோ நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா.. அப்படியிருந்தும் தன் மகனை பிரபலப்படுத்த முடியவில்லையே.. தாஜ்மகால் படம் மிகப்பெரியதோல்வி படம்.. தேவாவின் புகழை ஸ்ரீகாந்த் தேவா அடைந்தாரா?
திறமைகள்: ராமராஜன், ராஜ்கிரண், இவர்கள் எல்லாம் குறிப்பிட்ட கேரக்டர்களில் மட்டுமே நடிப்பவர்கள். நெப்போடிசம் இருக்கிறது என்றால் இவர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தார்கள்? இளையராஜாவின் மூளை, அவரது மகன் யுவன் சங்கருக்கு வராது. சிவாஜியின் மகன் அளவுக்கு பிரபுவின் புகழ் கிடையாது. பிரபுவின் அளவுக்கு, அவரது மகன் விக்ரம் பிரபுவின் வளர்ச்சி கிடையாது..
முத்துராமன் நல்ல நடிகர்தான், ஆனால், கார்த்திக் முத்துராமனைவிட சிறந்த நடிகர்.. அதேசமயம் கௌதம் கார்த்திக் கார்த்திக் அளவுக்கு வரமுடியவில்லை.. எஸ்ஏசி சிறந்த டைரக்டர்தான்.. ஆனால், எஸ்ஏசியைவிட விஜய் டாப்பில் சென்றுவிட்டார்..
பிளஸ் பாயிண்ட்: எனவே, அனைத்தையுமே நெப்போடிசம் என்று சொல்ல முடியாது. நடிகர்கள் மகன் என்பதால் விளம்பரம், பிசினஸ் போன்றவை பிளஸ் பாயிண்ட்டாக இருக்கலாம். ஆனால், யாராக இருந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே இங்கு நிலைக்க முடியும்.. பிரபலங்களின் வாரிசுகள், அபார திறமைகளுடன் திரைக்கு வருவதை அனைவரும் வரவேற்கவே செய்யலாம்" என்று பேசியிருக்கிறார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications