பையன் கேட்டானே ஒரு கேள்வி... சொன்னானே ஒரு வார்த்தை... நெஞ்சுல சுருக்!
சென்னை: சன் டிவியின் சந்திரலேகா சீரியல் நாலு குடும்பத்தை சுற்றின கதையா நல்லாத்தான் இருக்கு.
இந்த சீரியலில் சந்திராவா நடிக்கற ஸ்வேதாவை, சின்னத்திரை வட்டாரத்துல சின்ன ஹன்சிகான்னு செல்லமா கூப்பிடறாங்களாம்.
அது சரி.. இது அந்த ஹன்சிகாவுக்கு தெரியுமான்னு, சின்னத்திரை வட்டாரத்துல கேட்டுத்தான் சொல்லணும். எல்லாரும் சொல்லிக்கறாங்க.. நாமும் சொல்வோமே...

நிலாவுக்கு திருவுக்கும் முதலிரவு நடக்கலை இல்லையா.. நடக்க கூடாதுன்னு திருவோட அம்மா தனக்கு பிடிச்ச அஞ்சலியோட சேர்ந்துக்கிட்டு நிலாவை வீட்டை விட்டு துரத்தி, அஞ்சலியை திருவுக்கு கல்யாணம் செய்து வைக்கணும்னு நினைக்கறாங்க.
ஒவ்வொரு நாள் இரவும் ஏதாவது டிராமா பண்ணி, முதலிரவு நடக்க விடாம பண்ணிடறாங்க. திரு கேட்கறான், முதலிரவுதான் நமக்கு செட்டாகலை.. முதல் பகல் வச்சுக்கோவாமான்னு கேட்கறான் திரு.
பெரியவங்க சடங்கு, சம்பிரதாயம்னு வச்சிருந்தா அதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்ங்க.. இன்னிக்கு பொறுத்துக்கோங்க.. நான் அத்தைக்கு மருந்து தர அவங்க கூடவே தங்கிக்கறேன். நாளைக்கு பார்த்துக்கலாம்னு சொல்லிட்டு நிலா போனாளா...அப்போதானே பொய்யா மாமியார் உடம்பு சரியில்லாத மாதிரி நடிக்கறாங்கன்னு வேலைக்காரி மூலமா தெரியுது.

உடனே நிலா அவங்களுக்கு பேதி மாத்திரை, வாந்தி மாத்திரைன்னு குடுத்துடறா. அவங்க காலையில பெரிசு பண்ணி, நிலாவை திருகிட்ட போட்டுக் கொடுக்கறாங்க. திரு, நிலா அம்மா சொல்றது உண்மையான்னு கேட்கறான் திரு. இதுக்கு முதல்ல என்ன நடந்துச்சுன்னு கேளுங்க அத்தான்னு சொல்லிட்டு, அத்தைக்கு என்னை புடிக்கலை. அஞ்சலியை உங்களுக்கு கல்யாணம் செய்துவைக்க துடிக்கறாங்கன்னு சொல்றா.
அதனால்தான் நாம ரெண்டு பேரும் ராத்திரி ஒண்ணு சேர கூடாதுன்னு ஏதாவது பிளான் பண்ணி கெடுத்துடறாங்க. நேத்து டாக்டருக்கு போன் பண்ணி அத்தை உடம்புக்கு என்னன்னு கேட்டேன். அவங்க, உங்க ரெண்டு பேருக்கும் தோஷம் இருக்காம். அதனால ஒண்ணு சேரக கூடாதுன்னு என்னை இப்படி சொல்ல சொன்னாங்கன்னு டாக்டர் சொன்னதா சொல்றா.''

என்மேல சந்தேகம் இருந்தா நீங்க போன் போட்டு கேளுங்கன்னு சொல்றா. என்னம்மா இதெல்லாம்னு கேட்க, இல்லை திரு அவ பொய் சொல்றான்னு அம்மா சொல்றாங்க. நீங்க பொய் சொல்லாதீங்கம்மா.. நிலாவுக்கு ஜூஸ்ல விஷம் கலந்து குடிக்க சொன்னது வரைக்கும் எனக்குத் தெரியும்.
நான் அஞ்சலியை கல்யாணம் செய்துக்குவேன்னு கூடவே அவளை வச்சிருக்கறதும் தெரியும்மான்னு சொல்றான். திரு..நிலாவை வீட்டை விட்டு போ சொல்லிடு.. சாயந்தரம் நீ வரதுக்குள்ள இவ இந்த வீட்டுல இருக்க கூடாதுன்னு சொல்றாங்க.
அவளை மட்டும் அனுப்பட்டுமான்னு பையன் கேட்டானே ஒரு கேள்வி.இல்லை நானும் சேர்ந்து அவளோட போகணுமான்னு நீங்க சாயந்தரம் முடிவு பண்ணி வைங்கன்னு சொன்னானே ஒரு வார்த்தை.. பாவம் இப்படிப்பட்ட அம்மாக்களும் இருக்கத்தான் செய்யறாங்க.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications