ஏன் பாப்பா.. உங்க வாலுத்தனத்துக்கு அளவே இல்லையா.. கலக்கறீங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக திருமணம் என்பது யாராலும் மறுக்கமுடியாத நிகழ்ச்சி தான் அதுவும் வாலுத்தனம் பண்ணும் பிரண்ட்ஸ்கள் கூட இருக்கும்போது அந்தத் திருமணத்தில் யாரும் முடியாத அளவிற்கு செம்மையாக பண்ணி விடுகிறார்கள்.

அந்த மாதிரி தான் தற்போது சைத்ரா ரெட்டியின் திருமணத்தில் அவரது சேட்டைக்கார பிரண்ட்ஸ் செய்த செயல் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

யாரடி நீ மோகினி சீரியலில் ஸ்வேதாவாக கலக்கிக் கொண்டிருக்கும் சைத்ரா ரெட்டி திருமணம் இன்று நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் சைத்ராவின் குடும்ப வழக்கப்படி திருமணத்திற்கு முதல் நாள் நழுங்கு பங்க்ஷன் நடைபெற்றது.

நாலு வாலுகள்

நாலு வாலுகள்

அதில் மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கும் நலுங்கு வைப்பார்கள். இது எல்லா வீட்டிலும் நடப்பது தான் ஆனால் சித்ராவின் பிரண்ட்ஸ் களான ரேஷ்மா, ஷபானா, நட்சத்திரா இவர்கள் செய்த லூட்டி தான் வேற லெவல். இந்த கூட்டணியில் தற்போது ஸ்ரீநிதியும் இணைந்திருக்கிறார். இவர்களிடம் மாட்டிக் கொண்ட மாப்பிள்ளை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்.

 சந்தனத்தால் குளிப்பாட்டி

சந்தனத்தால் குளிப்பாட்டி

அந்த அளவிற்கு அவரை சந்தனத்தால் குளிப்பாட்டி பாடாய்படுத்தி எடுத்திருக்கிறார்கள். அவரை மட்டுமல்ல மண பெண்ணையும் விட்டுவைக்கவில்லை. ஏற்கனவே அழகில் ஜொலிக்கும் சைத்ரா தற்போது திருமணம் நாள் குறித்ததும் அழகில் கூடிவிட்டார். அவருக்கு அழகு சேர்க்கும் வகையாக சந்தனத்தை முகமெல்லாம் பூசி தற்போது அவருடைய பிரண்ட்ஸ்களும் கொண்டாடியிருக்கிறார்கள்.

தோழிகளுக்கும் நலுங்கு

தோழிகளுக்கும் நலுங்கு

கல்யாண பொண்ணு மாப்பிள்ளைக்கு மட்டும் நலுங்கு பூசவில்லை . அவர்களுடைய பிரண்ட்ஸ்களும் மாத்தி மாத்தி நலுங்கு வைத்து கொண்டாடி இருக்கிறார்கள் .அதுவும் இந்த வீடியோக்களை நாங்கள் திருமணத்திற்குப் பிறகுதான் வெளியிடுவோம் என்று கூறியிருந்தார்கள். ஆனாலும் அந்த வீடியோஸ்கள் லீக்காகி விட்டது. எப்பவுமே இவர்களின் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கும்.

ஆட்டம் பாட்டம்

ஆட்டம் பாட்டம்

ஏற்கனவே சைத்ராவின் நிச்சயதார்த்தத்துக்கு இவர்களின் ஆட்டம் பாட்டம் வைரலாகி வந்தது .அது மட்டுமல்லாமல் அதன் பிறகு ப்ரீ வெட்டிங் சூட் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்கள். அந்த போட்டோக்களையும் கடற்கரையில் சைத்ராவை மட்டும் தேவதை போல வெள்ளை உடையுடன் இவர்கள் அனைவரும் நீல கலரில் உடை அழகான ஒரு போட்டோ ஷூட்டை நடத்தி முடித்திருந்தார்கள்.

போட்டோக்கள் வைரல்

போட்டோக்கள் வைரல்

அந்த போட்டோக்களில் அவர்களுடைய ரசிகர்களிடமும் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. அந்த மாதிரிதான் தற்போது இவர்களின் போட்டோஷூட் வைரலாகி வருகிறது. இதில் யாருக்கு கல்யாணம் என்று தெரியாத அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது. சந்திராவிற்கு கண்ணாடி வளையல்களை அணியும் பங்ஷனில் அவருக்கு கை நிறைய கண்ணாடி வளையல்கள் அணிவித்து அதை போட்டோக்களாக எடுத்து குவிந்திருந்தனர்.

அதேபோல வேணும்

அதேபோல வேணும்

அதுபோல எனக்கும் கண்ணாடி வளையல் வேண்டும் என்று யாரடி நீ மோகினி சீரியலில் நடிக்கும் ஸ்ரீ மதியும் வளையல் காரரிடம் கைகளை நீட்ட அவர் உங்களுக்கு கல்யாணமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அய்யய்யோ எனக்கு இல்லை என்று கூறி வெட்கப்பட்டிருக்கிறார். இந்த வீடியோக்களும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அப்லோட் பண்ணுவோம்

அப்லோட் பண்ணுவோம்

அதுமட்டுமல்லாமல் யாரடி நீ மோகினி வெண்ணிலா வாக நடித்துக்கொண்டிருக்கும் நட்சத்திரா சீரியலில் அமைதியான பூச்சியாக இருந்துகொண்டு இங்கு வில்லத்தனத்தை பண்ணிக்கொண்டு இருக்கிறார். பண்ணாத சேட்டைகள் எல்லாம் பண்ணிக்கொண்டு சைத்ரா வின் திருமணத்திற்கு நாங்கள் ஏகப்பட்ட போட்டோக்களும் வீடியோக்களும் எடுத்திருக்கிறோம் அதை திருமணம் முடிந்ததும் அப்லோட் பண்ணுவோம்.

அழகான ராட்சசி

அழகான ராட்சசி

நாங்களும் வாழ்த்துக்களை கூறி இருக்கிறோம் எங்கள் பிரண்ட் நன்றாக வாழவேண்டும் என்று நீங்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே சைத்ரா ஒரு அழகான ராட்சசி தான் அவருக்கு திடீரென்று திருமணம் என்று கூறியதும் அவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி இருக்கிறார்கள். தற்போது இந்த போட்டோவை பார்த்து மனதுக்குள் கஷ்டப்பட்டாலும் எல்லாரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+