"ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்கக் கூடாது"! அபிஷேக்கை மிரட்டிய அமிதாப் பச்சன்! மும்பையில் சுவாரஸ்யம்!
மும்பை: மும்பையில் வெற்றிகரமான ஒரு ஹோட்டலை நடத்தி வரும் செஃப் ஹர்பல் சிங் சோக்கி என்பவர் திரைபிரபலங்கள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். சிறு வயதில் அபிஷேக் பச்சனுடன் வரும் அமிதாப் பச்சன், தனது மகன் உணவை வீணடித்தால் திட்டி சாப்பிட வைப்பார் என்ற தகவலை தெரிவித்துள்ளார். அது போல் ஸ்ரீதேவி குறித்தும் அவர் பல்வேறு தகவல்களை அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு உணவகத்தில் சமையல் கலைஞராக பணியாற்றுபவர் செஃப் ஹர்பல் சிங் சோக்கி. இவர் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், எங்கள் உணவகத்திற்கு தர்மேந்திரா, மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். தர்மேந்திராவின் மகன் திருமணத்தில் கலந்து கொண்டேன். ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் இந்த ஹோட்டலுக்கு வருவதுண்டு.
எங்களுக்கு சைனீஸ், இந்தியன் உள்ளிட்ட ஹோட்டல்கள் உள்ளன. எங்களது இந்தியன் ரெஸ்டாரன்டிற்கு அமிதாப் பச்சன் அடிக்கடி வந்துள்ளார். அவர் தனது மனைவி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், மகள் ஸ்வேதா உள்ளிட்டோருடன் வருகை தந்துள்ளார்.
அப்போது, அபிஷேக் பச்சன், தனது தட்டில் உணவை சாப்பிடாமல் மிச்சம் வைத்தால், அமிதாப், விடவே மாட்டார். அபிஷேக்கை மிரட்டியாவது அந்த உணவை உட்கொள்ள வைத்துவிடுவார். மகன் சாப்பிட்ட தட்டில் எதுவும் மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும் என திட்டி சாப்பிட வைப்பார்.
அப்போது அபிஷேக், "எனக்கு வயிறு நிரம்பிவிட்டது" என சொன்னாலும் அவர் விடமாட்டார். அது போல் நடிகை ஸ்ரீதேவி எங்கள் ஹோட்டலில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்தார். ஆனால் அவர் எங்கள் ஹோட்டலில் சாப்பிட்டதில்லை. ஹரீஷ் என்ற இடத்தில் இருந்து சாப்பாடு வரும். ஸ்ரீதேவி வந்தாலே அவருக்கென பிரத்யேகமான அறை உள்ளது. ஸ்ரீதேவிக்கு மீன் கறியும், மங்களோரியன் உணவும் கொண்டு வருவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமிதாப் பச்சன், இந்திய சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர். இவர் "பிக் பி" (Big B) என்று அன்பாக அழைக்கப்படுகிறார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் திரைப்படத் துறையில் கோலோச்சி வருகிறார்.
வாழ்க்கை மற்றும் சினிமா பயணம்
- அமிதாப் பச்சன் அக்டோபர் 11, 1942 அன்று உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் பிறந்தார்.
- இவரது தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன் ஒரு புகழ்பெற்ற கவிஞர்.
- இவர் 1970-களில் 'ஆங்ரி யங் மேன்' (Angry Young Man) என்ற பட்டத்துடன் பல படங்களில் நடித்துப் பிரபலமானார்.
- 'ஷோலே' (Sholay), 'தீவார்' (Deewaar), 'ஜஞ்சீர்' (Zanjeer), மற்றும் 'குலி' (Coolie) ஆகியவை இவரது மிக முக்கியமான வெற்றிப் படங்களில் சில.
- நடிப்பு மட்டுமின்றி, 'கௌன் பனேகா குரோர்பதி' (Kaun Banega Crorepati) போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
- இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. மேலும், இவர் பல தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.
- அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோரும் நடிகர்களே.
- அண்மையில், அமிதாப் பச்சன், தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளார். சமூக சேவை மற்றும் பொதுநலப் பணிகளிலும் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இன்றும், பல இளைஞர்களுக்கு இவர் ஒரு உத்வேகமாகத் திகழ்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications