வீல் சேரில் வந்த செஃப் தாமு.. குக் வித் கோமாளி செட்டில் நடந்த சம்பவம்.. கண் கலங்க அவரே சொன்ன விஷயம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் செஃப் தாமு தனக்கு ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனை குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார். நான் இப்போது சூட்டிங்க்கிற்கு வீல் சேரில் வந்து கொண்டிருக்கிறேன் அதற்கு இதுதான் காரணம் என்று தாமு பேசியதை கேட்டு பலரும் அவர் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஐந்து சீசன்கள் முடிவடைந்து இப்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து நடுவராக செஃப் தாமு இருந்து வருகிறார். ஆரம்பத்தில் வெங்கடேஷ் பட்டும் நடுவராக இருந்தார். அவரோடு இணைந்துதான் செஃப் தாமுவும் நடுவராக மாறி இருந்தார். ஆனால் நான்காவது சீசனிலிருந்து வெங்கடேஷ் பட் விலகி விட்டார்.

செஃப் தாமு பேட்டி
அதை தொடர்ந்து ஐந்தாவது சீசனில் செஃப் தாமுவுடன் மாதப்பட்டி ரங்கராஜன் நடுவராக கலந்து கொண்டார். இவர்களுடைய கூட்டணியும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கடந்த ஐந்தாவது சீசன் முடிவடையப் போகும் நேரத்தில் பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த நிகழ்ச்சியை பற்றிய பேச்சு அதிகமாக இருந்தது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் கடந்த ஐந்தாவது சீசனாக சில சர்ச்சைகளும் எழுந்து வந்தது.
வெற்றிக்கு காரணம் கோமாளிகள்
இப்போது ஆறாவது சீசன் தொடங்கப்பட்ட வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. நீங்கள் சில வாரங்களாக செஃப் தாமு வீல்சேரில் சூட்டிங்க்கிற்கு வந்து கொண்டிருக்கிறார். அது குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அதோடு குக் வித் வத்து கோமாளி நிகழ்ச்சி பற்றியும் பேசி இருந்தார். அதில் அவர் பேசும்போது "குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் கோமாளிகள் தான் இங்கே எல்லாமே. கோமாளிகள் இல்லாட்டி இந்த நிகழ்ச்சியே இல்லை."
40 வருட கனவு
அதிலும் "புகழ், சுனிதா, குரேஷி இவங்க தான் இந்த நிகழ்ச்சிக்கு முக்கியம். நான் தினமும் அவங்களை பாராட்டுவேன். இந்த நிகழ்ச்சியுடைய பைனலுக்கு பிரியா, லட்சுமி நாராயணன், நந்தகுமார், ராஜு போற்றோர் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதுபோல எனக்கு பத்மபூஷன் விருது சமீபத்தில் தான் கிடைத்தது. அந்த விருது என்பது எனக்கு 40 வருஷ கனவாக இருந்தது. அதுவும் சமையல் துறையில் எனக்கு அந்த விருது கிடைத்தது ரொம்பவும் மகிழ்ச்சி.
எலும்பு உடைந்து விட்டது
எனக்கு விருது கிடைத்ததற்கு இந்திய அரசாங்கத்துக்கு நன்றி கூறுவேன். ஆனால் நான் விருது வாங்கிவிட்டு இறங்கும்போது கால் பிரண்டு கீழே விழுந்து விட்டேன். அப்போது இடுப்பு எலும்பு உடைஞ்சிருச்சு. அதனால் நான் இப்போது சூட்டிங்க்கிற்கு வீல் சேரில் தான் வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு சில வாரத்தில் சரியாயிடும்னு நம்புறேன் என்று அந்த பேட்டியில் தாமு கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications