மாற்றுத்திறனாளி மாணவனுக்காக வெங்கடேஷ் பட் செய்த செயல்.. அதோடு முதல்வர் குறித்து சொன்ன வார்த்தை
சென்னை: செஃப் வெங்கடேஷ் பட் தன்னை புகைப்படமாக வரைந்த மாற்றுத்திறனாளி மாணவன் குறித்து ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அந்த வீடியோவில் அந்த மாணவனுக்கு பல உதவிகளையும் செய்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் முதல்வர் மு.க ஸ்டாலின் புகைப்படத்தையும் அந்த மாணவர் வரைந்திருந்த நிலையில் அந்த மாணவனுக்கு வெங்கடேஷ் பட் சில அறிவுரைகளையும் கூறி இருக்கிறார்.
விஜய் டிவியில் பல சமையல் நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலம் அடைந்த செஃப் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்தார். ஆனால் திடீரென்று அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இப்போது சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் இணைந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியிலும் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வரும் வெங்கடேஷ் பட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவுதான் இப்போது இணையத்தில் பலரையும் பேச வைத்திருக்கிறது.

அதாவது வெங்கடேஷ் பட் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ஒரு மாற்றுத்திறனாளி மாணவன் தன்னை வரைந்ததற்கு பாராட்டி இருக்கிறார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் வெங்கடேஷ் பட் எவ்வளவு இளகிய மனது உடையவரா என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். அந்த மாணவன் வெங்கடேஷ் பட்டை தத்ரூபமாக வரைந்து அசத்தி இருக்கிறார். ஆனால் அவர் மாற்றுத்திறனாளி என்பதால், "நம்மால் செய்ய முடியும் வேலைகளை அவரால் செய்ய முடியாவிட்டாலும்... நம்மால் செய்ய முடியாத வேலையை அவர் செய்திருக்கிறார்".
இந்த மாணவனிடம் அவ்வளவு திறமை இருக்கிறது என்று வெங்கடேஷ் பட் அவரை வாழ்த்துகிறார். அதோடு அவர் மேலும் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்காக வரைவதற்கு தேவையான பல பொருள்களை பரிசாக கொடுத்திருக்கும் நிலையில் இதுபோல இன்னும் நிறைய வரையுங்கள்.. என்னுடைய பாராட்டு மட்டுமல்லாமல் பலருடைய பாராட்டையும் நீங்கள் பெற வேண்டும் வாழ்க்கையில் நன்றாக முன்னேறுங்கள் என்று கூறியிருக்கிறார்.
அப்போது அந்த சிறுவன் ராஜேஷின் அம்மா மீனா பேசுகையில், என்னுடைய மகன் முதல்வர் ஸ்டாலின் சாரையும் வரைந்துள்ளான் என்று கூற, அதற்கு வெங்கடேஷ் பட் "அப்படியென்றால் ரொம்ப நல்ல விஷயம். நீங்கள் ஸ்டாலினை போய் பாருங்கள். அவர் கண்டிப்பாக வாழ்த்து தெரிவிப்பார். ராஜேஷ் போன்ற ஒரு மாணவனை பார்த்தாலே ஸ்டாலின் சார் ரொம்ப உதவி செய்வார்" என்று கூறி இருக்கிறார். மேலும் ராஜேஷின் படிப்புக்கு வெங்கடேஷ் பட்டு உதவி செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை வெங்கடேஷ் பட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததும் லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications