அசைவம் சாப்பிடாமலே சமையல்! எலிசபெத் முதல் ரஜினிகாந்த் வரை பாராட்டு இப்படித்தான்!- வெங்கடேஷ் பட்
சென்னை: செஃப் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி சன் டிவியில் வரும் 19ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கும் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் இணைந்திருக்கும் நிலையில் தான் எப்படி அசைவம் சாப்பிடாமலேயே அதை சூப்பராக சமைக்கிறேன் என்ற ரகசியத்தை நிகழ்ச்சி ஒன்றில் உடைத்திருக்கிறார்.
அந்த வகையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் செஃப் வெங்கடேஷ் பட் 20 வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இருந்த நிலையில் இப்போது விஜய் டிவியின் நிகழ்ச்சியில் இருந்து வெளியாகி சன் டிவி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சித்ரா லட்சுமணன் பேட்டி எடுத்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.

அப்போது சித்ரா லட்சுமணன் வெங்கடேஷ் பட்டிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். அதில் நீங்க நான்வெஜ் சாப்பிட மாட்டீங்க. ஆனால் நான்வெஜ் விரும்பி சமைக்கிறீங்க உங்களுடைய சாப்பாடு அருமையாக இருக்கிறது என்று பல பிரபலங்களும் பாராட்டுறாங்க. அது எப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது? நீங்க எப்படி நான்வெஜ் சமைக்க கத்துக்கிட்டீங்க? என்று கேட்க அதற்கு வெங்கடேசப்பட்டு தன்னுடைய அனுபவத்தை சொல்ல தொடங்கி இருக்கிறார்.
அதாவது இவர் 9 வயதாக இருக்கும்போது வீட்டில் கோதுமை தோசையை ஒரு நாள் ஊற்ற அது அழகாக இருக்கிறது என்று அப்பா பாராட்டி இருக்கிறார். அதற்கு பிறகு சமையல் கலைஞராக வேண்டும் என்று இவர் சமையல் கலைஞர் படிப்பை படித்திருக்கிறார். பிறகு தாய்லாந்தில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது இவர் அங்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் இரண்டு வருடங்கள் ட்ரெய்னியாக அங்கு வேலை செய்து இருக்கிறார். அந்த நேரத்தில் ஒவ்வொரு ஹோட்டலுக்காக சென்று சில வாரங்கள் ட்ரெயினில் எடுக்கப்பட வேண்டுமாம். அப்போது செஃப்பாக வேண்டும் என்றால் நான் வெஜும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. பிராமண குடும்பத்தை சேர்ந்த வெங்கடேஷ் பட் முதல் முறையாக சிக்கன், இறாலை கையால் தொட்டு பார்த்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இறாலை சுத்தம் செய்யும்போது இவருக்கு கையில் சிரங்கு வந்து விட்டதாம். ஆனால் செஃப்பிடம் வந்து இதை சொன்னால் வேறு வேலை கொடுப்பார் என்று நம்பி வந்த வெங்கடேஷ் பட்க்கு ட்ரைனிங் கொடுக்கும் நபர் வெங்கடேஷ் பட்டிற்கு நான்வெஜ் சப்ளை செய்யும் நபருக்கு போன் போட்டு வெங்கடேஷ் பட்டுக்கு 20 கிலோ பிரான் கொடுத்து இருக்க இப்போ அவருக்கு கையில் சிரங்கு வந்துட்டு. அதனால் நாளையிலிருந்து 50 கிலோ கொடு.
ஒரு வாரத்தில் சிரங்கு சரியா போய்விடும் என்று சொல்லி இருக்கிறார். அதுபோல கையில் சிரங்கு போய் விட்டது. ஆனால் ஆரம்பத்தில் நான்வெஜ் பார்த்து ரொம்பவே கஷ்டப் பட்டேன். பிறகு பழகிவிட்டது. அதற்குப் பிறகு தாய்லாந்தில் ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கும் போது அங்கு 5 செஃப் இருந்தார்கள். அவர்கள் நான்வெஜ் எப்படி சமைக்க வேண்டும் எவ்வளவு உப்பு போட வேண்டும், காரம் சேர்க்க வேண்டும் என்று எல்லா விஷயத்தையும் சொல்லி தந்தார்கள்.
அவர்கள் பக்கத்தில் நின்று கொண்டு என்னை சமைக்க வைத்து அதில் டேஸ்ட் பார்த்து இதில் இன்னும் இதை சேர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்று பல விஷயங்களை சொல்லி தந்தார்கள். அதனால் தான் இன்று என்னால் அசைவம் சமைக்க முடிகிறது. நான் இதுவரைக்கும் அசைவம் சாப்பாட்டை சாப்பிட்டு பார்த்தது கிடையாது. ஆனால் நாம் செய்யும் சமையலை நடிகர் ரஜினிகாந்த், ரகுமான், ஸ்ரீதேவி, போனி கபூர் என்று திரைதுறையில் பல பிரபலங்களும் சுவைத்து பார்த்து அருமையாக இருக்கிறது என்று பாராட்டிருக்கிறார்கள்
ஏன் எலிசபெத் ராணி கூட என்னுடைய சாப்பாடு அருமையாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். அதற்கு காரணம் எனக்கு சொல்லித்தந்த செஃப்தான். நான் எப்போதும் அவர்கள் சொல்லித்தந்த முறையில் தான் சமைக்கிறேன். வெஜிடபிள் சாப்பாடு என்றால் அதில் நான் சுவைத்து பார்த்து எதை வேண்டுமானாலும் செய்து விடுவேன். ஆனால் நான்வெஜ் என்றாலே அதில் 20 கிலோ சிக்கனுக்கு இவ்வளவு தான் உப்பு என்ற கணக்கில் அவர்கள் சொல்லித் தந்த அளவிலேயே எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறேன் என்று அந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications