செல்லம்மா சீரியல் கதாநாயகி அன்ஷிதாவிற்கு திடீர் திருமணம்.. மாப்பிள்ளை இவர்தானா?
சென்னை: விஜய் டிவியில் செல்லம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகி செல்லம்மா கேரக்டரில் நடிகை அன்ஷிதா நடித்து வருகிறார்.
இதே நேரத்தில் இந்த சீரியலின் கதாநாயகனாக நடிக்கும் அர்னாவ்வுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக அர்னாவுடைய மனைவி திவ்யா ஸ்ரீதர் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

அதே நேரத்தில் அர்னாவ் மற்றும் அன்ஷிதா இருவரும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தனர். இந்த நிலையில் அன்ஷிதா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியல் கதாநாயகன் அர்னாவ் மற்றும் அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதர் இருவருக்கும் இடையே இருந்த குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் தெரிந்ததுதான். திவ்யா ஸ்ரீதர் அர்னாவ் தன்னோடு செல்லமா சீரியலில் நடிக்கும் அன்ஷிதாவிடம் நெருக்கமாக பழகி வருவதால் தான் என்னை அடித்து துன்புறுத்துகிறார் என்று போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து அர்னாவ் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று இப்போது ஜாமினில் வந்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அர்னாவ் பற்றி அடுக்கடுக்கான பல ஆடியோ ஆதாரங்களையும் திவ்யா ஸ்ரீதர் வெளியிட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் தொடர்ச்சியாக அர்னாவ் செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் கதைப்படி செல்லம்மா ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அவருடைய கணவர் கொடுமை காரணமாக அவர் வேண்டாம் என்று தன்னுடைய சொந்த அப்பாவின் வீட்டிலேயே வேலைக்காரியாக இருக்கிறார்,
செல்லம்மாவின் அப்பா அம்மாவிற்கு இது நம்முடைய மகள் என்று தெரிந்திருந்தாலும் உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். அதே நேரத்தில் சித்து அதாவது அர்னாவ் செல்லம்மாவை காதலித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளும்படி செல்லமாவிடம் அர்னாவ் கூறி இருக்கும் நிலையில் அர்னாவை கடத்தி வைத்துக்கொண்டு செல்லம்மாவின் கணவர் செல்லமாவை மிரட்டுகிறார்.

இப்படியாக கதை போய்க்கொண்டிருக்கும் போது இன்று திடீரென்று செல்லமாவிருக்கும் செல்லமாவின் கணவருக்கும் திருமணம் முடிந்தது போன்று வீடியோக்களையும் புகைப்படங்களையும் நடிகை அன்ஷிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதே நேரத்தில் அப்போ சித்துக்கும் செல்லம்மாவுக்கும் கல்யாணம் நடக்காதா? என்ன சீரியலில் இப்படி ஒரு டுவிஸ்ட் வைத்து விட்டார்களே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications