கணவனால் துடிதுடிக்க பறிபோன இன்ஸ்டா பிரபலம் உயிர்.. பொண்ணா பொறந்தா இப்படியா? நடிகை ஹேமா ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடந்த ஒரு கொடூர சம்பவம், சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த நாகலட்சுமி என்ற பெண், தனது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அதே வீட்டில், அவரது கணவர் சுப்பிரமணியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது இந்த நிலையில் நாகலட்சுமி குறித்து சீரியல் நடிகை ஹேமா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nagalakshmi

யார் இந்த நாகலட்சுமி?

திருநெல்வேலியை சேர்ந்த நாகலட்சுமி (42) சென்னை நங்கநல்லூரில், புடவை விற்பனை செய்து வந்தார். அண்ணாநகர் மற்றும் நங்கநல்லூர் பகுதிகளில் தனது வியாபாரத்தை நடத்தி வந்த அவர், இன்ஸ்டாகிராமிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார்.புடவைகள் குறித்து வீடியோக்கள் வெளியிட்டு, சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ்களை வைத்திருந்தார். சோசியல் மீடியாவில் புதுவிதமான புடவைகளை உருவாக்கி தனக்கென ஒரு அடையாளம் ஏற்படுத்தி வைத்திருந்தார். இவரிடம் பிரபலங்கள் முதல் சின்னத்திரை சினிமா பிரபலங்கள் வரை பலரும் பொருட்கள் வாங்கி வந்தனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள்

நாகலட்சுமியின் கணவர் சுப்பிரமணியனுக்கு நிலையான வேலை இல்லை என கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு கட்டத்தில், இந்த தகராறுகள் அதிகரித்ததால் சுப்பிரமணியன் மதுரையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இருந்தாலும், அவருக்குத் தேவையான பணத்தை நாகலட்சுமி தொடர்ந்து அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த நாள்

கடந்த வாரம் சுப்பிரமணியன் மீண்டும் சென்னை திரும்பியதும், இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று, இரண்டாவது மகன் சைலாஷிற்கு சுப்பிரமணியன் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், "நானும் அம்மாவும் இனி இருக்கமாட்டோம்... உனக்கு சாப்பாடு வைத்திருக்கிறேன்" என்று இருந்ததாம். இந்த மெசேஜை பார்த்தவுடன் பதறிய சைலாஷ் உடனே வீட்டிற்கு சென்றுள்ளார்.

கண்ணால் காண முடியாத காட்சி

வீட்டிற்குள் நுழைந்த அவர், தனது அம்மா நாகலட்சுமி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தலை, கழுத்து மற்றும் கைகளில் கடுமையான காயங்களுடன் அவர் கிடந்ததாக கூறப்படுகிறது. மற்றொரு அறையில், சுப்பிரமணியன் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருந்தார். ஒரே வீட்டில் நடந்த இந்த இரட்டை மரணம், குடும்பத்தையே சிதறடித்துவிட்டது.

போலீஸ் விசாரணை

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக சுப்பிரமணியன் மனைவியை தாக்கி கொலை செய்து, பின்னர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சமூக வலைதளங்களில் பரபரப்பு

இந்த சம்பவம் வெளிவந்ததும், சமூக வலைதளங்களில் இருவிதமான எதிர்வினைகள் ஏற்பட்டன. ஒரு பக்கம் மக்கள் இதை ஒரு பெரிய சோகமாக எடுத்துக்கொண்டு வருத்தம் தெரிவித்தனர். ஆனால் மற்றொரு பக்கம், சிலர் நாகலட்சுமியை குறை சொல்லும் வகையில் கருத்துக்களையும் பதிவிட்டனர்.

இதற்கு எதிராக பலரும் குரல் எழுப்பி, "ஒரு பெண் இறந்த பிறகும் அவளை குறை சொல்லுவது தவறு" என்று கண்டனம் தெரிவித்தனர்.

நடிகைகள் ஆதங்கம்

இந்த விவகாரம் குறித்து சின்னத்திரை நடிகைகள் சிலர் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா வெளியிட்ட வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. அதில் அவர், "பொண்ணா பொறந்தாலே தப்பா பேசுவீங்களா? உயிரோட இருந்தாலும், இறந்தாலும் குறை சொல்லுறது ஏன்? என்ன நடந்துச்சுன்னு தெரியாம எப்படி முடிவு பண்ண முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "பெண்களை சாமி மாதிரி பார்க்கணும்னு பேசுறது வெறும் வார்த்தை மாதிரி தான்... நிஜத்துல அவங்களை மதிக்கறதில்லை" என்று கூறியிருக்கிறார்.

அதேபோல், நடிகை சசி லயா தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார். "நாகலட்சுமி தனக்கென ஒரு அடையாளம் உருவாக்கி, எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை இப்படியா முடிவடைய வேண்டும்? ஒரு நாளில் அவர் உருவாக்கிய எல்லா பெயரும் மறைந்து போய்விட்டது"
என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+