Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீலாங்கரை வீட்டில் இந்த நடிகரா? பிரபலத்தின் மகளை மணம் முடித்தாரா? இப்ப தொட கூடாததை தொட்ட எம்புரான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி பிஜேஷுக்கு கேரள ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. எம்புரான் படத்தால் எங்கேயும் வன்முறை ஏற்பட்டதா? என்றும் பாஜக நிர்வாகிக்கு கேரள கோர்ட் கேள்வி எழுப்பியதுடன், படத்துக்கு தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்திலும் எம்புரான் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி சொல்லும் கருத்து என்ன?

மோகன்லால் நடிப்பில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்’. இந்தப் படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமானார். இப்போது லூசிபர் படத்தின் 2ஆம் பாகம் 'எல் 2: எம்புரான்’ என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

Television Neelankarai empuraan

கடந்த மார்ச் 27ம் தேதியன்று, படம் வெளியானது.. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படம் முதல் நாளில் ரூ.22 கோடி ரூபாய் வசூலித்தது. பிறகு 48 மணிநேரத்தில், அதாவது இரண்டு நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிவேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த மலையாளப் படம் என்ற புதிய சாதனையை 'எல் 2: எம்புரான்’ படைத்திருக்கிறது. ஆனால், சர்ச்சைகளிலும் சிக்கி கொண்டுவிட்டது.

17 இடத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, எம்புரான் படம் மீது ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.. கடந்த 2002-ல் குஜராத்தில் நடந்த கலவரத்தை, சாயல் படுத்தி, பல வன்முறைகள் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளதாக கூறி, பாஜக, இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்து அமைப்புகளுக்கு எதிரான கருத்துகளும் இதில் உள்ளதாக கூறி, ஆர்ப்பாட்டமும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டன.

இறுதியில் சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் ரீ-சென்சார் செய்யப்பட்டது. அப்போது எம்புரான் படத்தில் 17 இடங்களில் கத்தரி போடப்பட்டது.. அதுமட்டுமல்லாமல், மதக்கலவரத்துக்கு எதிராக இதுவரை தான் செய்ததில்லை என்றும், தெரியாமல் ஒன்றிரண்டு செய்திருந்தாலும் அதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் மோகன்லால் கூறியிருந்தார்.

முல்லைப்பெரியாறு அணை

ஆனாலும், தமிழகத்தில் சர்ச்சை தீரவில்லை. காரணம், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்கள் அப்படத்தில் உள்ளதாக காட்டப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரளாவில் அணை இருந்தாலும், அதை தமிழக அரசு பராமரிக்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரம் முல்லை பெரியாறு அணைதான்.. 2 லட்சம் ஏக்கர் தமிழக விவசாயிகள் இதனால் பலன் பெற்று வருகிறார்கள்.. ஆனால் இந்த அணை பலவீனமாக உள்ளதால், இடிந்து விழுந்தால் கேரளாவுக்கு ஆபத்து என்று சொல்லி வருகிறார்கள். எனவே, தமிழகம் - கேரளா இடையே பல வருட காலமாகவே அணை சம்பந்தமான சர்ச்சை உள்ளது..

சூப்பர் ஸ்டார் மோகன்லால்

அப்படியிருக்கும்போது, எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு அணை பற்றின விவகாரம் காட்டப்பட்டுள்ளது.. இந்த அணைதான் என்று நேரடியாக சொல்லாவிட்டாலும், படத்தில் வரும் காட்சிகள் அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளன.. அதேபோல, படத்திலுள்ள வசனங்களும், தமிழர்களுக்கு எதிராகவே உள்ளது.

நம்முடைய சகோதர மாநிலமாக கேரளா இருந்து வருகிறது. நெருக்கடி நேரத்தில் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வருகிறோம்.. மலையாளத்தில் மோகன்லால் சூப்பர் ஸ்டார் உள்ளதால், அவர் என்ன சொன்னாலும் மக்கள் அப்படியே நம்புவார்கள்.. ஒரு மாநிலத்துக்கு எதிராக கருத்து சொல்லும்போது, அது காட்டு தீ போல பரவும்.. இப்படிப்பட்ட படத்தில் எப்படி மோகன்லால் நடித்தார் என தெரியவில்லை.

தமிழகத்தில் பெண் எடுத்தார்

தமிழ்நாட்டில் பிரபல இயக்குனர் கே பாலாஜி மகளைதான், மோகன் லால் திருமணம் செய்துள்ளார்.. நீலாங்கரையில்தான் அவரது வீடு உள்ளது.. தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் பல காற்றாலைகளை அமைத்து, அதில் பல கோடிக்கணக்கான வருமானம் சம்பாதிக்கிறார் மோகன்லால்.. தமிழிலும் பல படங்கள் நடித்துள்ளார்.

அந்தவகையில், தமிழகத்தையே இருப்பிடமாக வைத்திருக்கிறார் மோகன்லால்.. எனவே, அவரை தமிழ் நடிகராகவே நம் மக்களும் பார்க்கிறார்கள்.. அப்படியிருக்கும்போது, அந்த உணர்வு இருக்க வேண்டுமே தவிர, இன வெறியை காட்டக்கூடாது.

நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. எப்படி தமிழகத்துக்கு எதிராக இந்த கருத்தை சொன்னார் என்று தெரியவில்லை? இது இனவெறிக் கருத்தாகும்.. பல வருட காலம் சர்ச்சையிலுள்ள ஒரு விஷயம், காலப்போக்கில் அதுவாகவே அடங்கிவிடும். அப்படி அடங்கி கிடந்த முல்லை பெரியாறு சர்ச்சையை, மீண்டும் எதற்காக தூண்டிவிடும் அளவுக்கு படத்தை எடுக்க வேண்டும்? இப்போது ஏன் இந்த விவகாரத்தை பற்ற வைக்கணும்?

மகனை பலிகடா ஆக்கிவிடாதீர்

என் மகனை பலிகடா ஆக்கிவிடாதீர்கள் என்று பிருத்விராஜ் அம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.. ஆனால், இது விவசாயிகள் பிரச்சனையாக மாறிவிட்டது.. எந்த படத்திற்கும், அதன் கதை கேட்டு, வசனங்களை கேட்டு நடிக்கக்கூடியவர் மோகன்லால். அவர் சம்பந்தப்படாமல் எப்படி இந்த படத்தில் நடித்திருப்பார். ஒரு இனத்தின் மீது இன்னொரு இனம் காட்டும் காழ்ப்புணர்ச்சியாகவே இது தெரிகிறது.

நாம் மலையாளிகளை எப்போதுமே அரவணைத்து கொண்டுதான் இருக்கிறோம். தெருவுக்குத் தெரு, 4 நாயர் டீக்கடைகள் உள்ளன. எனவே, தமிழர்களுக்கு எதிரான இந்த செயலுக்கு மோகன்லால் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிராக உள்ள வசனங்களை நீக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிராக மோகன்லால், பிரத்விராஜ் இருவரும் சேர்ந்து இந்த படத்தை எடுத்ததுதான் இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் காரணமாகிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

குறி வைக்கப்படும் பிரித்விராஜ்

முன்னதாக, பிரித்விராஜின் தாயார் எம்புரான் பட சர்ச்சையால் தன் மகன் மட்டும் குறிவைக்கப்படுவதாக கூறி, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "எம்புரான் படத்தில் ஏதாவது பிரச்சனை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதற்குப் படக்குழுவினர் அனைவரும் பொறுப்பாக வேண்டும். அவர்கள் அனைவரும் ஒன்றாக ஸ்கிரிப்ட் படித்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக படமாக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்தார்கள், எல்லோரும் அதை ஒப்புக்கொண்டார்கள்.

படப்பிடிப்பு கட்டத்தில் காட்சிகளைத் திருத்த வேண்டியிருந்தால், எழுத்தாளர் முரளி கோபி எப்போதும் அதைச் செய்யத் தயாராக இருப்பார்... பின்னர் எல்லாம் முடிந்து படம் வெளியான பிறகு, அதற்கு பிருத்விராஜ் மட்டும் எப்படிப் பொறுப்பேற்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+