நீலாங்கரை பண்ணை வீட்டில் உச்ச நடிகர் ஹேப்பி.. சென்னையில் வீரர்களை வரவேற்க கடலோர மக்கள் ஏன்? பிரபலம்
சென்னை: கடலோர பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரி வரை நாடு தழுவிய சைக்கிள் பேரணி நடத்துகிறார்கள்.. அவர்கள் உங்க ஏரியா வரும்போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவர்களுடன் கொஞ்சம் தூரம் சென்று அவர்களை உற்சாகப்படுத்துங்கள்" என்று நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து தெரிவித்துள்ளார்.
Realone Media யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "கடலோர மக்கள் காலம் காலமாக பாதிக்கப்படும்போதெல்லாம் பேசாத ரஜினி, வெள்ள பாதிப்புகளில் கடலோர மக்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் பேசாத ரஜினி, மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோதெல்லாம் பேசாத ரஜினி, ஒரு இரங்கல் தெரிவிக்காத ரஜினி? இப்ப ஏன் பேசறாரு? அப்படியென்ன இப்போது கடலோரங்களில் நடந்துவிட்டது?

திடீர்னு என்ன நாட்டின் மீது பற்று
சுனாமியில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டபோதுகூட, ஈரக் கையை கூட உதறாத ரஜினி, இப்போ திடீர்னு என்ன நாட்டின் மீது பற்று? கடலோர மீனவர்களை பொறுத்தவரை நிச்சயமற்ற வாழ்க்கையில்தான் எப்போதுமே உள்ளார்கள்.. புதிதாத அவர்களை எழுப்பிட வேண்டிய அவசியமில்லை.. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டு, இந்த விழிப்புணர்வை ரஜினி செய்தால் பரவாயில்லை.
100 சிஐஎஸ்எப் வீரர்கள் ரோந்து வருகிறார்கள் என்பதற்காக, அவர்களை வரவேற்று கடலோரம் நின்று உற்சாகப்படுத்துங்க என்கிறார்.. போயஸ் கார்டன் வீட்டில் இவர் மட்டும் ACயில் உட்கார்ந்துட்டு, அல்லது நீலாங்கரை பண்ணை வீட்டில் உட்கார்ந்துட்டு, மக்களை மட்டும் விழிப்புணர்வுடன் இருக்க சொல்வது என்ன நியாயம்? அரசியலே பேசாத ரஜினி, இதையெல்லாம் மட்டும் ஏன் பேசுகிறார் என்ற சந்தேகம் வருகிறது.
நீலாங்கரை பண்ணை வீடு
தன்னுடைய பண்ணை வீடு, நீலாங்கரையில் உள்ளதால், அந்த கெட்ஸ் ஹவுஸையும் சேர்த்து பார்த்துக்குங்க என்று சொன்னால், கடலோர மக்கள் அதையும் சேர்த்து பார்த்து கொள்வார்கள். சிஐஎஸ்எப் வீரர்கள் வருவதற்கு இவ்வளவு வேகமாக ரஜினி இதற்கு ரியாக்ட் செய்வது ஏன்? புயல் வெள்ளத்தால், பாதிக்கப்பட்டு தங்குவதற்கு இடமில்லாமல் பலமுறை தவித்த மீனவ கிராம மக்களுக்கு தன்னுடைய நீலாங்கரை வீட்டை ரஜினி தந்திருக்கலாமே?
அல்லது இப்போது கடலோர பாதுகாப்பில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏதாவது இருக்கிறதா? தமிழக அரசின் பாதுகாப்பில் குறைபாடு, மெத்தனம் ஏதாவது உள்ளதா? கடலோர பாதுகாப்பில் அரசு அலட்சியமாக நடந்து கொள்கிறதா? ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை தமிழகத்தில் பரவலாக இருக்கத்தான் செய்கிறது. ஆனால், கடலோர மக்களுக்கு என்ன ஆபத்து வந்தது? எதற்காக இந்த திடீர் விழிப்புணர்வு?
சிவப்பு கம்பளம் விரிக்கட்டுமே
அப்படியே கடலோர பாதுகாப்புக்கு ரோந்துக்கு வந்தால், அவர்களுக்கு ரஜினியே நேரடியாக சென்று வரவேற்கட்டும், வாழ்த்து சொல்லட்டும், உற்சாகப்படுத்தட்டும், சிவப்பு கம்பளம் விரிக்கட்டும்.. அதை தடுக்கவில்லை.
ஆனால், இதையெல்லாம "நீங்கள் போய் செய்யுங்கள்" என்று ஏன் மக்களை செய்ய சொல்றாரு? அதைகூட அவர் செய்ய மாட்டாரா? உச்சபட்ச நடிகர்கள் என்றால், மக்களுக்கு அறிவுரை வழங்குவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என எல்லா தகுதிகளும் வந்துவிடுகிறதா? விழிப்புணர்வை யாரும் செய்யலாம். ஆனால், உள்நோக்கம் இல்லாமல் இருக்க வேண்டும்..
திருவான்மியூலிருந்து பாண்டிச்சேரி வரைக்கும், கோடீஸ்வரர்கள்தான் பண்ணை வீடுகளை வைத்திருக்கிறார்கள்.. படகு வைத்து வாழ்ந்து வரும் மீனவர்களை அங்கே போய், விழிப்புணர்வுடன் இருக்க சொன்னால் எப்படி? விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக சொல்லி, அச்ச உணர்வை ரஜினி ஏற்படுத்துகிறாரோ? என்ற சந்தேகம்தான் வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications