பிரபல நடிகை சந்தியா போட்ட கன்றுக்குட்டி வீடியோ.. சென்னை சீதாம்மன் கோயிலில் எருமை குட்டியை? உண்மையா?
சென்னை: சென்னை சீமாத்தம்மன் கோயிலில் கன்றுக்குட்டி பலியிடயிருந்ததாக நடிகை சந்தியார் ஜெகர்லமுடி கூறியிருப்பது பொய்யான தகவல் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கோயில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையானது.
சென்னை திருவல்லிக்கேணியில் பழமையான சீமாத்தம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாதம் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த திருவிழாவின் போது பக்தர்கள் வேண்டுதல் நிவர்த்திக்காக ஆடு, கோழிகளை நேர்த்திக் கடனாக விடுவது வழக்கம்.

அந்த வகையில் கோயிலில் நேற்று முன் தினம் பக்தர் ஒருவர் வழிபாடு நடத்துவதற்காக எருமை கன்றுக்குட்டியை காணிக்கை நடத்துவதற்காக கோயில் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சின்னத்திரை நடிகை சந்தியா ஜெகர்லமுடி ஒரு வீடியோவில் கூறுகையில், சீமாத்தம்மன் கோயிலில் எருமை கன்றை பலியிட அழைத்து செல்கிறார்கள். கோயில் அருகே சமூக ஆர்வலர்கள் யாரேனும் இருந்தால் காப்பாற்றும்படி கோரிக்கை வைத்தார்.
அதன்படி விலங்கு சமூக ஆர்வலர் சாய் விக்னேஷ் என்பவர் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல் துறை உதவியுடன் கோயில் நிர்வாகிகளிடம் எருமை கன்றுக் குட்டி பலியிடப்படுகிறதா என விசாரித்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் எந்த ஆடு, மாடுகளும் கோயிலில் பலியிடுவது கிடையாது என சொல்லிவிட்டனர்.
எனினும் கோயில் நிர்வாகம் கூறிய விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அந்த விசாரணையில், ஆடு, மாடு எதுவும் பலியிடப்படவில்லை என தெரியவந்தது. அம்மனுக்கு காணிக்கையாக வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டதுதான் எருமை கன்றே தவிர, அது பலியிட கொண்டு செல்லப்படவில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்தாலும், அநத் கன்றுக் குட்டியை ஐஸ் அவுஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சீமாத்தம்மன் கோயில் நிர்வாகி புருஷோத்தமன் கூறுகையில், சீமாத்தம்மன் கோயில் நூற்றாண்டு பழமையான கோயிலாகும். இந்த கோயிலுக்கு காந்தியடிகள், காமராஜர் நேரில் வந்து வழிபாடு செய்துள்ளனர். இங்கு யாரும் விலங்குகளை பலியிடுவது கிடையாது. இது முற்றிலும் வதந்தி. 60 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் சிலர் தனது வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக விலங்குகளை பலியிட்டிருக்கலாம். ஆனால் எங்கள் தலைமுறைக்கு பிறகு அப்படி பலியிடும் பழக்கமே கிடையாது. நாங்கள் எல்லாரும் படித்தவர்கள். நானே பலியிட முயன்றாலும் என்னை இவர்கள் எல்லாம் விட மாட்டார்கள்.
கோயிலுக்கு சிலர் கால்நடைகளை நேர்த்திக் கடனுக்காக கொடுக்கிறார்கள். அதை நாங்கள் கோயில் மாடுகள் போல் சுதந்திரமாக விட்டுவிடுவோம். பலியிட மாட்டோம். இந்த புகாரை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து சமூகஆர்வலர் சாய் விக்னேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் காவல் துறை உதவி ஆய்வாளருடன் கோயில் நிர்வாகிகளிடம் விசாரித்தேன். அப்போது கோயில் நிர்வாகிகள் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் வேண்டுதலுக்கு கொடுக்கும் மாடுகளை பலியிடுவது வழக்கம். அதன்படி பலியிட எருமை கன்றை வைத்திருந்தோம். ஆனால் இதை சமூகவலைதளங்களில் யாரோ பரப்பியதால் நிறுத்திவிட்டோம் என கோயில் நிர்வாகிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications