சின்ன கவுண்டர் படத்துக்கு விஜயகாந்த் வாங்கிய சம்பளத்தை பாருங்க.. திருப்புமுனையை தந்த நண்பன்: பிரபலம்
சென்னை: வெறும் 5 லட்சம் ரூபாய்தான் விஜயகாந்த்துக்கு சம்பளம் சின்ன கவுண்டர் படத்துக்காக பேசப்பட்டது. ஆனால் மிகப்பெரிய வசூலை அப்படம் அள்ளியது.. இந்த படத்துக்கு பிறகுதான் அவரது மார்க்கெட் உயர்ந்தது.. ஆக்ஷன் படமாக இல்லையென்றாலும் மாஸ் ஹீரோ என்ற இமேஜை மக்களிடம் கொண்டு சேர்த்தது.. 125 நாட்களுக்கு மேல் அந்த படம் ஓடியது" என்று மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
Media Circle என்று யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள திண்டுக்கல் வெங்கடேசன், "விஜயகாந்த்தை இப்போதும் எல்லாரும் கொண்டாட காரணம் அவரது மனசுதான்.. மக்களை அணுகி சென்றார்.. விஜயகாந்த்துக்கு நடிக்க வருமா? என்று அன்று சந்தேகம் வந்தபோது, வைதேகி காத்திருந்தாள் படம் வெளிவந்து, அதற்கான பதிலை தந்தது..

அதேபோல, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தது அவரது இயல்பான படம்.. சின்ன கவுண்டர் படத்தை பற்றி இங்கு சொல்லியாக வேண்டும்.. இந்த படத்தின்போதே நிறைய கேள்விகள் வந்தன.. விஜயகாந்த் இந்த கேரக்டரை தாங்கி கொள்வாரா? என்று சந்தேகம் பலருக்கும் எழுந்தன.. வெறும் 5 லட்சம் ரூபாய்தான் விஜயகாந்த்துக்கு சம்பளம் சின்ன கவுண்டர் படத்துக்காக பேசப்பட்டது. ஆனால் மிகப்பெரிய வசூலை அப்படம் அள்ளியது..
இந்த படத்துக்கு பிறகுதான் அவரது மார்க்கெட் உயர்ந்தது.. ஆக்ஷன் படமாக இல்லையென்றாலும் மாஸ் ஹீரோ என்ற இமேஜை மக்களிடம் கொண்டு சேர்த்தது.. 125 நாட்களுக்கு மேல் அந்த படம் ஓடியது..
அந்த படத்துக்கான ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடந்து கொண்டிருந்தபோது, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொதுமக்களை சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.. தமிழகம் முழுவதிலிருந்து திரண்டு வரும் ரசிகர்களை சந்திப்பார்.. தான் கேரியரில் கொண்டுவந்திருந்த சாப்பாட்டை, ரசிகர்களுக்கு பகிர்ந்து தந்து சாப்பிட வைப்பார்..
அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசுவார்.. எங்கிருந்து வந்திருக்கீங்க? ஏன் என்னை பார்க்க இவ்வளவு தூரத்திலிருந்து ரிஸ்க் எடுத்து வர்றீங்க? பஸ் சார்ஜ் எவ்வளவு? என்று விசாரிப்பார்.. அந்த போக்குவரத்து செலவையும், வழியில் சாப்பாட்டு செலவையும் சேர்த்து அவர்களுக்கு தந்து அனுப்பி வைப்பார்.. எம்ஜிஆருக்கு பிறகு இப்படி செய்தது விஜயகாந்த்தான்.. இந்த உதவிகளை செய்வதற்கு விஜயகாந்த்துக்கு பக்க பலமாக இருந்தது இப்ராஹிம் ராவுத்தர்தான்.. விஜயகாந்த்தின் வளர்ச்சிக்கு தூணாக நின்றவர்..
ஆனால், தலையீடு அதிகமாக இருப்பதாக கூறி, விஜயகாந்த்தின் திருமணத்துக்கு பிறகு சில சிக்கல்கள் எழுந்தது.. இதனை விஜயகாந்த்தால் தடுக்க முடியவில்லை.. இதனால் நண்பர்களுக்குள்ளும் பிரச்சனை வரத்துவங்கிவிட்டது.. இது நட்புக்குள் விரிசல் வந்துவிட்டது.. தன்னால் விஜயகாந்த்துக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்று ராவுத்தரே விலகி கொண்டார். அதற்கு பிறகு விஜயகாந்த்தின் சம்பளத்தை பேசியது, அவரது குடும்பத்தினர்தான்.
ஆனால், நட்பை இழந்த வலியில் அதிகம் இருந்தார் இப்ராஹிம் ராவுத்தர்.. ஆனால், இப்ராஹிம் ராவுத்தர் இறந்ததுமே, கை காலை இழந்தபோல வருத்தத்தில் விழுந்தார் விஜயகாந்த்..
இதற்கு பிறகு காவிரி பிரச்சனை நடந்தபோது, நெய்வேலிக்கு நடிகர் சங்கத்தை லாரி, வேன்களில் ஊர்வலமாக அழைத்து சென்றார்.. அப்போது பண்ருட்டியில் 100 அம்பாசிடர் கார்களில் ரசிகர்கள் திரண்டபோது, அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்கான பொறி அங்குதான் விஜயகாந்த்துக்கு தோன்றியது.- பிறகுதான் ரசிகர்களை தொண்டர்களாக மாற்றினார்.. 2014-ல் முதலமைச்சராவதற்கான வாய்ப்புகளும் அவருக்கு நிறையவே இருந்தது..
எம்ஜிஆர், சிவாஜி, எஸ்எஸ்ஆர் போன்ற ஜாம்பவான்கள் தலைவர்களாக இருந்த நடிகர் சங்கம் கடனில் தத்தளித்து கொண்டிருந்தது.. அப்போது தலைவராக இருந்த விஜயகாந்த், கடனை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினார்.. ஒட்டுமொத்த திரையுலகையும் திரண்டி வசூல் செய்து, நடிகர் சங்கத்தை மீட்டார்..












Click it and Unblock the Notifications