சின்ன மருமகள் சீரியல் ஸ்வேதாவுக்கு இப்படி ஒரு நிலைமையா? நிஜத்திலும் பள்ளியில் நடந்த மோசமான தொந்தரவு
சென்னை: விஜய் டிவியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் நடிகை ஸ்வேதா தமிழ்ச்செல்வி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நவீன் குமார், ஸ்வேதா, சுந்தர் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்வேதா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில மோசமான நினைவுகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
இந்த சீரியலில் கதைப்படி தமிழ்ச்செல்விக்கு பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போது கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்கள். அவரை கதாநாயகன் ஒருதலையாக காதலித்துக் கொண்டிருக்க அதற்கு அவருடைய பெற்றோரும் சம்மதம் சொல்கின்றனர். அதுபோல நிஜத்திலும் தமிழ்செல்வியாக நடிக்கும் ஸ்வேதாவின் வாழ்க்கையில் இது போன்ற மூன்று சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறதாம். அது குறித்து அவரே மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அது பற்றி சீரியல் நடிகை ஸ்வேதா பேசுகையில் சின்ன மருமகள் சீரியல் தான் கதாநாயகியாக நான் நடிக்கும் முதல் சீரியல். ஆனால் இந்த சீரியலுக்கு முன்பு நான் விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தேன் அதிலும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் ப்ரோமோவில் கூட நடிகை நட்சத்திரா வின் பக்கத்தில் நான் நிற்பேன். அதை நானே மறந்து விட்டேன். ஆனால் இப்போது பல வருடங்கள் கழித்து அந்த சீரியலோடு ஒப்பிட்டு என்னை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அதுபோல நான் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சின்ன கேரக்டரில் நடித்திருந்த நிலையில் இப்போது அந்த சீரியல் கதாநாயகியே என்னுடைய சீரியலை விளம்பரப்படுத்தி பேசியது எனக்கு சந்தோஷமாக இருந்தது. என்னோட வயசு இப்போ 21 வயசு தான். ஆனால் நான் உயரம் குறைவாக இருப்பதால் என்னை எல்லோரும் குட்டி பொண்ணுன்னு நினைச்சுகிட்டு இருக்காங்க.
சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் கூட எல்லோரும் என்கிட்ட அப்படித்தான் பழகிட்டு இருக்கிறார்கள். அதனால் தான் எனக்கு இந்த கேரக்டர் கிடைத்தது என்று கூட நான் நினைக்கிறேன். அதுபோல விடா முயற்சி செய்தால் இன்னும் நிறைய பண்ணலாம் என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வது தான். சினிமாவில் நடிக்க வருவது எந்த திட்டமும் கிடையாது. சின்ன மருமகள் சீரியலில் பள்ளி படிக்கும் தமிழ் செல்வியை ஒருதலையாக காதலிக்கும் கதாநாயகனுக்காக அவருடைய குடும்பத்தினருக்கு தமிழ் செல்வியை திருமணம் செய்து வைக்க பார்க்கின்றனர்.
ஆனால் அந்த திருமணம் நடைபெறுகிறாது. ஆனால் இது போன்ற கதை என்னுடைய நிஜ வாழ்க்கையிலும் நடந்து இருக்கிறது. அதாவது நான் பள்ளியில் படிக்கும்போது காமெடியான லவ் ப்ரொபோஸ் எல்லாம் வந்தது. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னுடைய என்னுடன் ஒன்றாக படித்த ஒரு பையனுக்கு என்னை பிடித்து இருக்கிறது. அப்போ இன்னொரு பையன் எனக்கு பேனா கொடுத்தான். அதை பார்த்து அந்தப் பையனுக்கு பொறாமையா இருந்திருக்கு.
ஒரு நாள் என்னிடம் நம்ம கல்யாணத்துக்காக நான் சீட்டு எல்லாம் போட்டு வச்சிருக்கேன். நீ என்னடான்னா அந்த பையன் கிட்ட பேசிட்டு இருக்கியா? என்று என்கிட்ட கேட்டான். எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. என்னடா இது எதிர்கால பிளான் போடுற அளவுக்கு நம்ம மேல பைத்தியமா இருக்கானே என்று எனக்கு தோன்றியது. அதுபோல இன்னொரு சம்பவமும் நடைபெற்றது.
அது பள்ளி பிரின்ஸ்பால் ரூமுக்கு பக்கத்துல மாடிக்கு போகும் படிக்கட்டில் இருக்கும் சுவற்றில் ஒரு பையன் என்னுடைய பெயரையும் அவனுடைய பெயரையும் எழுதி வைத்து நீ எனக்குத்தான் அதோடு ஹாட்டின் வேற வரைந்து வைத்திருந்தான். அந்த சுவற்றைப் பார்த்து எல்லோரும் என்னை பார்த்து ஒரு மாதிரி சிரிச்சாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல, பிறகு நான் போய் பார்த்தேன் அங்கு அப்படி ஒரு விஷயம் எழுதி வைத்திருந்ததை பார்த்ததும் எனக்கு கோபம் வந்துவிட்டது.
பிறகு நான் அதை அழிக்கலாம் என்று முயற்சி செய்தேன் ஆனால் அதை அழிக்க முடியவில்லை. உடனே நான் பள்ளி முதல்வரிடம் போய் சொல்லி அந்த பையனை இரண்டு நாட்களாக சஸ்பெண்ட் பண்ணாங்க. அதுபோல இன்னொரு பையன் கையை எல்லாம் அறுத்துக் கொண்டு whatsappல போட்டோ அனுப்பி விட்டான். அப்போதும் என் பக்கம் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதால் நான் இந்த மாதிரி பிரச்சனைகளை உடனே அம்மா மற்றும் பள்ளி முதல்வரிடம் சொல்லிவிடுவேன் என்று கலகலப்பாக அந்த பேட்டியில் நடிகை ஸ்வேதா பேசியிருக்கிறார்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications