"சின்னத்தம்பி"யில் குஷ்புவின் தாடி அண்ணனாக நடித்த உதய் பிரகாஷை நினைவிருக்கா? நடுரோட்டில் இறந்த சோகம்
சென்னை: நடிகர் பிரபு, குஷ்பு நடித்த "சின்னத்தம்பி" எனும் படத்தில், குஷ்புவுக்கு 3ஆவது அண்ணனாக தாடி வைத்துக் கொண்டு நடித்த உதய பிரகாஷ் எப்படி இறந்தார் என்பது தெரியுமா? நடிகர் சங்கம் இருக்கும் சாலையில் விழுந்து மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1991 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான படம் "சின்னத்தம்பி". இந்த படத்தில் குஷ்புவுக்கு 3 அண்ணன்கள். அதில் கடைசி அண்ணனாக தாடி வைத்துக் கொண்டு வந்தவர் உதய் பிரகாஷ். இந்த படத்தில் மற்ற இரு அண்ணன்களை விட மிகவும் கோபக்காரராக இருப்பார்.

இவர் 1989 ஆம் ஆண்டு பாசில் இயக்கத்தில் கார்த்திக் , குஷ்பு நடித்த "வருஷம் 16" படத்தில் அறிமுகமானார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து 2ஆவது படத்திலேயே விஜயசாந்தியுடன் நடித்தார்.
சுந்தர் சி இயக்கம்
இதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் "மேட்டுக்குடி" என்ற படத்திலும் நடித்திருந்தார். ரஜினியுடன் "மன்னன்", "வீரா", "உழைப்பாளி", சரத்குமாருடன் "சாமுண்டி", "பேண்டு மாஸ்டர்", "கட்டபொம்மன்" உள்ளிட்ட படங்களிலும் இவர் வில்லனாக நடித்திருந்தார்.
ஊட்டியை சேர்ந்தவர்
1964 ஆம் ஆண்டு ஊட்டியில் பிறந்தவர் உதய் பிரகாஷ். இவரது இயற்பெயர் மணிகண்டன். இவரது தந்தை ராணுவ வீரர் என்பதால் உதய்யை கட்டுக்கோப்பாக வளர்ந்திருந்தார். உதய்யின் நண்பர் ஒருவரை பார்க்க ஒரு தயாரிப்பாளர் வந்திருந்த போது அவரால் உதய்க்கு, விஜயசாந்தியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
விஜயசாந்தியுடன் நடிக்க வாய்ப்பு
"கர்த்தவ்யம்" எனும் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து இது தமிழில் "வைஜெயந்தி ஐபிஎஸ்" என டப்பிங் செய்யப்பட்டது. 2011 ஆம் ஆண்டு சினேகா நடிப்பில் இந்த படம் ரீமேக்கும் செய்யப்பட்டது.
முன்னணி நடிகர் உதய் பிரகாஷ்
நிறைய படங்களில் கமிட்டான உதய் பிரகாஷ், முன்னணி நடிகராக வலம் வந்தார். அப்பா என்னதான் ராணுவ கட்டுக்கோப்புடன் உதய்யை வளர்த்திருந்தாலும் சினிமாவில் கிடைத்த நட்பு வட்டாரங்களுடன் இணைந்து தினமும் மது குடித்ததால் அவர் மதுவுக்கு அடிமையாகிவிட்டார்.
குடிக்கு அடிமை
இதனால் கால்ஷீட்டில் சொதப்பல், நேரம் தவறி ஷூட்டிங் செல்வது என உதய் பிரகாஷ் இருந்ததால் அவருக்கு படவாய்ப்புகளும் போனது. இதனால் அவருக்கு கடன் கழுத்தை நெரித்தது. ஒரு சிறிய குடிசையில் ஒரு மூதாட்டியுடன் இவர் வசித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
நடிகர் சங்கம்
இவருக்கு மறுவாழ்வு அளிக்கும் பொறுப்பை நடிகர் சங்கம் எடுத்துக் கொண்டது. நடிகர் சரத்குமாரும் இவருக்கு "திவான்" படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அது போல் செய்தியாளர்களை சந்திக்க உதய் பிரகாஷ், குடியை நிறுத்திவிட்டதாகவும் புதிய வாழ்க்கை வாழ விரும்புவதாவும் தெரிவித்திருந்தார்.
கல்லீரல் பாதிப்பு
ஆனால் அவர் இவர் மேலும் மேலும் குடித்ததால், கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து இயக்குநர் பி.வாசு, உதய்யை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்து தப்பிய உதய், அதன் பிறகு மீண்டும் குடிக்கத் தொடங்கினார். இப்படி குடித்து குடித்து நடிகர் சங்கம் உள்ள தெருவில் நடுரோட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவருடைய உடலை ஊட்டிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை நெப்போலியனும் பி.வாசுவும் செய்திருந்தனர்.
40 வயதில் மரணம்
உதய் பிரகாஷ் இறக்கும் போது அவருக்கு 40 வயது. இவர் திருப்பத்தூர் புனித இதய கல்லூரியில் படித்தவர். கால் பந்து விளையாட்டு வீரராகவும் இருந்தார். இவர் நடித்த கடைசி படம் "சூப்பர் டா" என்பதாகும்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications