ஒரு மூங்கில் காடெரிய சிறு தீ ஒன்று போதும்... வீட்டுல இளசுகளின் விசில் பறக்குது!
சென்னை; விஜய் டிவியின் சின்னத்தம்பி சீரியலில் பல நல்ல விஷயங்களை பார்க்க முடியுது. காரணம் என்னன்னா சின்னத்தம்பி தன்னோட அப்பா அம்மாவுக்கு 60ம் கல்யாணம் செய்ய பல ஏற்பாடுகளை செய்யறார்.
60ம் கல்யாணம்னா சும்மா ஜாலிக்குன்னு சொல்ல முடியாது., ஆதர்ஷ தம்பதிகளா வாழ்ந்தவங்களுக்குத்தான் அது மிகப் பொருத்தமான ஒண்ணா இருக்கும். சும்மா எலியும் பூனையும் மாதிரி, எரிச்சலும் சன்டையும், அடியும், உதையுமா வாழ்ந்துகிட்டு இருந்த தம்பதிக்கு 60ம் கல்யாணம் செய்து வச்சா இது தேவையான்ற மாதிரிதான் கேள்விகள் எழும்.
இதை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் விளக்கி பேசும்போது சின்னஞ்சிறுசுகளுக்கும் ஒரு பாடம் புகட்டும் அறிவுரை கிடைச்ச மாதிரி இருக்கும்.அப்படித்தான் இங்கு சின்னத்தம்பி,யோட அப்பா அம்மா பேச, கணவன் மனைவியா பேருக்கு வாழும் நந்தினி, சின்னத்தம்பி, ஜானு,அர்ஜுன் இவங்களுக்கு பல்வேறு குற்ற உணர்ச்சி வருது.
Also Read | இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த பாம்பையே பிடிச்சுட்டு அலைவீங்க பாஸ்.. நாகினி பரிதாபங்கள்!

சந்தேகம்
மலருக்கு தன் காதலன் ஆரா மேல சந்தேகம் வந்துருது... ஆரா நம்மை உண்மையா காதலிக்கறானா, இல்ல வெறும் டைம் பாஸ் தானான்னு.பல குழப்பம். தனியாக அறையில் உட்கார்ந்து யோசிச்சுகிட்டு இருக்கா. அங்கே அவன் காதலன் ஆரா என்ட்ரி.

செவப்பா
ஆரா, என்னை நீ உண்மையாவே காதலிக்கறியா... இல்லை டைம் பாஸுக்கா கலக்கத்துடன் கேட்கறா. இல்லை ஆரா மனசு சரியில்லை.. அதான் கேட்டேன்.என்னடி என் மேல சந்தேகப்படறியா, நீ கருப்பா செவப்பா, ஒல்லியா, குண்டான்னு கூட தெரியாம வெறும் போன்லேயே ஒரு வருஷம் காதலிச்சவன்டி..என்னைய போயி சந்தேகப்படறேன்னு கேட்கறான்.

கழிச்சு
ஒரு வருஷம் கழிச்சு உன்னை நான் எப்பிடி பார்த்தனோ அது என் கண்ணுல அப்படியே நிக்குதுடி. உன்னை நம்ப வைக்கணும்னா சொல்லு, என் கண்ணை கட்டிக்கிட்டு, நான் பார்த்த உன் உருவாத்தை அப்படியே வரையறேன்னு சொல்றான்

அச்சு அசல்
கண்ணைக் கட்டிக்கொண்டு வரைய ஆரம்பிக்கிறான். முடிச்சுட்டு மலரிடம் கொடுக்க என்ன ஆச்சரியம், கூந்தலை ஒரு பக்கம் மட்டும் படர விட்டு இருக்கும் அழகிய முகம். பார்த்ததும் அதிர்ந்து விடுகிறாள் மலர்.ஓடிச்சென்று ஆராவைக் கட்டிக்கொள்ள

மண்ணும்
வானும் மண்ணும் இன்று கட்டிக் கொண்டதே... மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே .. ஒரு மூங்கில் காடெரிய சிறு தீ ஒன்று போதும்... அது பொசுக்கென்று தோன்றியதேன்னு தல பாட்டுங்க.. வீட்டுல இளசுகளின் விசில் பறக்குது. சீரியலும் அப்பப்போ மக்களை குஷிப் படுத்தத்தான் செய்யுதுங்கோ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications