சன் டிவியில் பிரியங்காவும், அபிஷேக்கும் ஜோடி சேரும் புது சீரியல்.. அட வில்லி தாமரையா??
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் தற்போது சன் டிவி சீரியலில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த எதிர்பாராத ட்விஸ்ட் ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியாக தான் இருந்து வருகிறதாம்.

பல தலைமுறை கண்ட சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பல வருடங்களாக சன் டிவியை விட்டு விலக மாட்டேன் என்று கூறி வரும் ஒரு சீரியல்தான் சித்தி. இந்த சீரியல் தலைமுறைகள் பல கண்டாலும் தனக்கென்று ஒரு இடத்தை ரசிகர்களின் மத்தியில் பெற்றுள்ளது. வெள்ளித்திரையில் ராதிகா கலக்கிக் கொண்டிருந்த காலத்திலே சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த இந்த சீரியல், இப்ப வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல் பாகமே பல வருடங்கள் கடந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் ஆரம்பத்தில் நடித்து வந்த ராதிகா தற்போது இல்லை என்பதால் இது விரைவில் முடிக்கப்பட்டு மூன்றாவது பாகம் எடுக்கப்படுவதாக செய்திகள் பரவி வருகிறது.

மூன்றாவது சீசன் தொடக்கமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் கலந்துகொண்டு கொண்டிருக்கும் போட்டியாளர்களாக இருக்கும் பிரியங்கா, அபிஷேக், தாமரை ஆகியோர் இந்த சித்தி மூன்றாவது சீஸனில் நடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஏற்கனவே விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வந்த பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு மீண்டும் தொகுப்பாளர் வேலை கிடைக்குமா??என்பது கேள்விக்குறியான விஷயம் தான். அதனால் இப்படி ஒரு சீரியலில் நடிக்க ரெடி ஆகிவிட்டாரா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

கலக்கும் காதல் காட்சிகள்
சன் டிவி சீரியல்களில் ஒரு சீரியலில் நடித்தாலே அவர்கள் வீட்டு குடும்ப பெண்களின் மனதில் இடத்தை பிடித்து விடுவார்கள். இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வாக தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிகமாக என்டர்டைன்மென்ட் கொடுத்துக்கொண்டிருக்கும் சித்தி சீரியல் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் கதாநாயகியும் கதாநாயகனும் திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு காதல் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

நெட்டிசன்களின் குறும்புத்தனம்
அனைத்து சின்னத்திரை ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தற்போது பரவிவரும் சித்தி 3 புரோமோ சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை அவர்களுக்கே தெரியாமல் இப்படி ஒரு ப்ரமோவில் எடிட் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருவதை ஒரு சில தீவிரமான ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். என்னதான் ரசிகர்கள் ஒரு பக்கம் நெட்டிசன்களை திட்டி கொண்டு இருந்தாலும் இந்த சீரியலில் தாமரையை வில்லியாக அறிமுகப்படுத்திய நெட்டிசன்களுக்கு குசும்பு அதிகம்தான் என்று ஒரு சிலர் சிரித்தபடியே கலாய்த்து வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications