பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் விஜே சித்ராவின் நாய் செய்த செயல்...பீல் பண்ணும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்து ஒரு வருடம் ஆனாலும் சித்ராவை மறக்காத அவருடைய நாய் செய்த செயல் வைரலாக பரவி வருகிறது.

சித்ராவின் நினைவாக காலண்டரில் அவருடைய புகைப்படத்தை பதித்து ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் வழங்கி வருகின்றனர்.

முல்லையாக சித்ரா

முல்லையாக சித்ரா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா ரசிகர்களின் மனதில் தனக்கென்று பெரிய இடத்தையே பிடித்து இருந்தார். இந்த சீரியலில் பலர் நடித்திருந்தாலும் அவருக்கு என்று பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தனர். அவருடைய நடிப்பையும் அழகையும் பிடித்துப்போனதால் அவருக்கென்று தனி ரசிகர்களாக மாறியிருந்தனர்.

அனைவருக்கும் பரிச்சயமானவர்

அனைவருக்கும் பரிச்சயமானவர்

விஜே சித்ராவை பொறுத்தவரைக்கும் அவர் சீரியலில் மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும் வலம் வந்திருக்கிறார் .அதனாலேயே அவர் அனைவருக்கும் பரிச்சயமான நபர் தான். சின்ன வயதிலிருந்தே நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக வீட்டில் எந்த சப்போர்ட்டும் இல்லாமல் தனிப்பெண்ணாக ஒவ்வொரு பிரச்சனைகளையும் எதிர் கொண்டு இவர் முன்னேறிக் கொண்டிருந்தார்.

காலண்டரில் சிரிக்கும் சித்ரா

காலண்டரில் சிரிக்கும் சித்ரா

மறைந்த பிறகும் ஒரு சிலர்தான் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பெற்றிருப்பார்கள். அதில் ஒருவராக விஜே சித்ரா இருந்து வருகிறார். இவர் மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் அவருடைய நினைவு நாளில் ரசிகர்கள் பலர் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். ஏற்கனவே அவருடைய பிறந்த நாளில் இந்த மாதிரிதான் எப்போதும் செய்துகொண்டிருந்தனர். தற்போது அவர் இல்லாவிட்டாலும் நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று தங்களுடைய அன்பை காட்டி வருகின்றனர். அந்த மாதிரி தான் தற்போது கேலண்டர் அட்டையில் கூட விஜே சித்ராவின் புகைப்படத்தை பதிவிட்டு அனைவரும் தங்களுடைய அன்பைக் காட்டி வருகிறார்கள்.

வளர்ப்பு நாயின் அன்பு பாசம்

வளர்ப்பு நாயின் அன்பு பாசம்

பாண்டியன் ஸ்டோர் என்னும் சீரியல் மூலமாக பலருக்கும் பரிச்சயமான விஜே சித்ரா தற்போது மறைந்து விட்டாலும் அவர் மீது பாசத்தை வைத்திருந்த அவர் ஆசையாக வளர்த்த பைரவா என்னும் நாய் மறக்காமல் இருந்து செய்த செயல் வைரலாக பரவி வருகிறது. விஜே சித்ரா ஒவ்வொரு நாளும் சூட்டிங் சென்று வீட்டிற்கு வந்ததும் அவரிடம் அவ்வளவு பாசமாக இருக்குமாம். அவர் இல்லாததை நினைத்து அந்த நாய் அவர் மறைந்த ஒரு சில நாட்களுக்கு உணவு உண்ணாமல் சோகத்தோடு இருந்துள்ளது. தற்போது காலண்டரில் விஜே சித்ராவின் புகைப்படத்தை காட்டியதும் அந்த நாய் உணர்ச்சிவசப்பட்டு அவருக்கு முத்தங்களை கொடுத்து வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் பீல் பண்ணி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+