நாயகன் முதல் சித்தி சீரியல் வரை நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா?குழந்தைகளோடு எப்படி மாறிவிட்டார்
சென்னை; கண்ணாத்தா திரைப்படத்தில் நடித்த நீனா அதற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகி தற்போது குடும்பத்தோடு எடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்..
நடிகை நீனா கடைசியாக சித்தி சீரியலில் நடித்துவிட்டு விலகி இருந்த நிலையில் தற்போது வெளிநாட்டில் இருந்த படி குழந்தைகளோடு வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக எத்தனையோ பேர் நடித்திருந்தாலும் இன்றும் சினிமாவில் ஒரு சிலரைத்தான் அதிகமான ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை நீனா. இவர் கமல்ஹாசனுக்கு மகளாகவும், நடிகர் அஜித்குமாருக்கு தங்கையாகவும், பிரகாஷ்ராஜுக்கு மனைவியாகவும் பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்.

நடிகை மீனா 1990 இல் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான கேளடி கண்மணி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார். அதைத் தொடர்ந்து இயக்குனர் செல்வா இயக்கத்தில் நீலா மாலா என்ற நாடகத்திலும் நடித்திருக்கிறார். இப்ப வரைக்கும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் பாடல்களில் ஒன்றாக இருக்கும் கற்பூர பொம்மை ஒன்று எனும் அம்மா சென்டிமென்ட் பாடலில் இவர் தான் க்யூட்டாக நடித்திருப்பார்.
அது மட்டுமில்லாமல் நடிகர் கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகளாக இவர் நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக அந்த ட்ரெயின் போகும்போது அப்பா சொல்லு நீதான அம்மாவை கொன்ன என்று இவர் கேட்கும் கேள்வி அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. அந்த அளவிற்கு குழந்தையிலே தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.
நாயகன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பை பார்த்த இயக்குனர் மணிரத்தினம் தெலுங்கில் இவரை வைத்து கீதாஞ்சலி என்னும் திரைப்படத்தை எடுத்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் நாகார்ஜுனாவின் மகளாக நீனா நடித்திருப்பார்.இந்த திரைப்படத்தை தான் தமிழில் இதயத்தை திருடாதே எனும் திரைப்படமும் எடுக்கப்பட்டது. அதிலும் இவர்தான் குழந்தை நட்சத்திரம் ஆக நடித்திருப்பார்.
அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் நடிகர் அஜித் குமார் நடித்த ராசி திரைப்படத்தில் அவருக்கு தங்கச்சியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருந்தது. இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அஜித்குமார் கூட இவரை பாராட்டியதாக அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
சில வருடங்களிலே இவருக்கு விடுதலை என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் தான் இவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். வயதான நபரை திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் பெண்ணின் கஷ்டங்கள் அந்த திரைப்படத்தில் தத்துருவமாக காட்டி இருப்பார். அதைத் தொடர்ந்து இவர் நடித்து பிரபலமானது கண்ணாத்தா திரைப்படம் தான்.

கண்ணாத்தா திரைப்படத்தில் ஒரு குடும்ப தலைவியாகவும் ஒரு கடவுளாகவும் இவர் அசத்தியிருப்பார். அதற்குப் பிறகு இவர் திரைப்படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார். அந்த நிலையில் தான் சில வருடங்களுக்கு பிறகு வெளியான சித்தி சீரியலில் காவேரி கேரக்டரில் நடித்திருப்பார். சித்தி சீரியலில் இவருடைய நடிப்பு அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. ஆனால் அந்த சீரியலுக்கு பிறகு இவர் நடிக்கவில்லை.
வெளிநாட்டில் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளோடு செட்டில் ஆகிவிட்ட நீனா சமீபத்தில் தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நீனாவா இது எப்படி மாறிவிட்டார் என்று ரசிகர்கள் வியந்து போய் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications