ஆளே அடையாளம் தெரியல.. அந்நியன் பட நடிகை ஸ்ரீரஞ்சனியா இது? மகாலட்சுமிக்குள் இப்படியொரு திறமையா.. வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அந்நியன், கஜினி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்தவர் ஸ்ரீரஞ்சனி.. நீண்ட நாட்களாக திரையில் காணாமல் போயிருந்த இவர், தற்போது ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அதில், தன்னுடைய திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

1991, 92ம் காலகட்டத்தில் 20 வயதில், மாடலிங் துறைக்கு வந்தவர் ஸ்ரீரஞ்சனி.. காசளவு நேசம் படத்தில் பாலச்சந்தர் இவரை சின்னத்திரையில் நடிக்க வைத்தார்.. பிறகு, மணிரத்னம் படத்தில் அலைபாயுதே படத்தில் அண்ணியாக நடிப்பை துவங்கினார்.. பட்டுப்புடவை, குங்குமம் என மகாலட்சுமி ரூபத்தில் பல்வேறு படங்களில், அம்மா கேரக்டரில் நடித்தவர்..

Television Sriranjani Anniyan

குறிப்பாக. அந்நியன் படத்தில் சதாவின் அம்மா, கஜினி படத்தில் அசின் அம்மாவாக நடித்து பலரது கவனங்களை ஈர்த்தார்.. இதைத்தவிர, அக்கா, அண்ணி என பல்வேறு கேரக்டர்களில் நடித்தவர் ஸ்ரீரஞ்சனி.

உண்மையான பெயர்

இந்நிலையில், ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஸ்ரீரஞ்சனி, தன்னுடைய உண்மையான பெயர், இந்து மதத்தின் மீது தனக்குள்ள பற்று உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

"திருமணத்துக்கு பிறகுதான் என்னுடைய பெயர் ஸ்ரீரஞ்சனி என்று வைத்து கொண்டேன்.. ஜெனனிவ் நேபிள் மேபிள் டிசோசா என்பதுதான் என்னுடைய உண்மையான பெயர். நான் மகாராஷ்டிராவை சேர்ந்த கிறிஸ்டியன்.. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில்தான்.. என்னுடைய உண்மையான பெயரை வெளியே சொல்லவே மாட்டேன்.. ஒருவரை பார்த்ததுமே, அவர்களை தீர்மானிக்கக்கூடியவர்கள் நிறைய பேர் அப்போது இருந்தார்கள்.
பாட்டி வற்புறுத்தல்

என்னுடைய பாட்டி ஜோலார்பேட்டையில் வசித்து வந்தார். பிறகு சென்னையில் குடியிருந்தார். என்னுடைய அப்பா, புனே, கோவா, பெங்களூர் போன்ற ஊர்களில் வேலைபார்த்த சமயம், என்னுடைய பாட்டியின் வற்புறுத்தலால் சென்னைக்கு வந்தேன்.

பள்ளிப்படிப்பை இங்குதான் முடித்தான்.. படிக்கும்போது அத்தலெட்டாக இருந்தேன்.. நான் தேசிய அளவில் விளையாடி இருக்கிறேன். ஹாக்கியும் விளையாடியிருக்கிறேன். எனக்கு ஓடுவது என்றால் அவ்வளவு இஷ்டம்..

இந்து மதத்தின் மீதான நம்பிக்கை

பாட்டி வீட்டில் நான் இருந்தபோது, அந்த வீட்டுக்கு கீழேயே ஹவுஸ் ஓனர் திரு.மணியன் குடும்பத்தினர் இருந்தனர்.. பூஜையறை என்பதையே அவர்கள் வீட்டில்தான் நான் முதன்முதலில் பார்த்தேன்.. நிறைய நேரம் அந்த வீட்டில் இருந்திருக்கிறேன்.. ஏதோ ஒன்று எனக்கு அங்கு பிடித்திருந்தது.. அத்துடன், பாவாடை தாவணி உடையும் எனக்கு பிடித்திருந்தது.. அப்போதிருந்தே, பொட்டு வைத்து கொள்வது, மூக்குத்தி, பட்டுப்புடவை கட்டிக்கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம்.. இந்து மதத்தில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

என்னுடைய வீட்டை சுற்றி அப்போது ஷூட்டிங் எடுத்து கொண்டிருந்தார்கள்.. அப்படித்தான் எனக்கு விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.. 1994-ல் நிலவே சாட்சி என்ற நிழல்கள் ரவி, சத்யபிரியா, கல்யாண்குமார் போன்றோர் நடித்திருந்தனர். ஸ்ரீகுமரன் சில்க் உள்ளிட்ட விளம்பர படத்தில் நடித்தபோது, அதன் போஸ்டரை அப்போது தி.நகரில் வைத்திருந்தார்கள்.. அதை பார்ப்பதற்காகவே தி.நகர் சென்றேன்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+