சினிமா காட்டும் வன்முறை.. ரத்தம், கவர்ச்சி நார்மலைஸ் ஆகுதா? திறை உலகம் எங்கே போகிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு காலத்தில் ஹீரோ வில்லனை அடித்தால் அடுத்த ஷாட்டில் வில்லன் கீழே விழுவார். கத்திக்குத்து என்றால் கேமரா வேறு பக்கம் திரும்பி விடும். கற்பழிப்பு என்றால் அதுவும் மறைமுகமாகவே காட்டப்படும். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. கத்தி எங்கே இறங்குகிறது.. ரத்தம் எப்படி தெரிக்கிறது.. கற்பழிப்பு காட்சிகளிலும் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு சூம் செய்வது என மிக நெருத்தமாக காட்டுவது ஆனால் ரியலிஸ்டிக் ஆக்சன் என்ற நிலைமைக்கு சினிமா நகர்ந்து கொண்டிருக்கிறதா? என்பதுதான் பலருக்கும் இப்போது எழுந்த கேள்வியாக இருக்கிறது.

பெரிய பட்ஜெட் படங்கள்

குறிப்பாக பெரிய நட்சத்திரங்கள், பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், கோடிக்கணக்கான பட்ஜெட்டியான பிரம்மாண்டமாக உருவாகும் ஆக்ஷன் படங்களில் வன்முறை காட்சிகள் அதிகரித்து வருகின்றன. அதற்கு உதாரணமாக சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான டிசி, விஷால் நடித்த மகுடம், யாஷ் நடித்த டாக்ஸிக், தனுஷ் நடித்த ராயன் என பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

Cinema Violence Movie

அதிகரிக்கும் வன்முறை காட்சிகள்

சினிமா என்பது கற்பனையையும் நிஜத்தையும் இணைக்கும் ஊடகம். ஒரு கதையில் கொலை நடக்கிறது என்றால் அதை மறைமுகமாக காட்டலாம். அந்த கதாபாத்திரம் கொடூரமானவன் என்றால் அதை உணர்த்தலாம். ஆனால் அந்த கொடூரத்தை பார்வையாளர்களுக்கு ரசிக்கக்கூடிய ஒரு காட்சியாக மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறதா? குறிப்பாக குழந்தைகள் முதல் இளம் வயதினர் சினிமாவில் மிக அதிகமாக கவனிக்கும் காலம் இது.

Cinema Violence Movie

மோசமான முன் உதாரணம்

தியேட்டர் மட்டுமல்லாமல் ஓடிடி சமூக வலைத்தளங்களில் வரும் காட்சிகள் குறும்படங்கள் என ஒரு படத்தின் வன்முறை காட்சிகள் பல மடங்கு அதிகமான பார்வையாளர்களை சென்றடைகின்றன. அதனால் வன்முறை காட்சி படுத்துவதற்கும், வன்முறையை அழகு படுத்துவதற்கும் இடையிலான வித்தியாசத்தை சினிமா கவனிக்க வேண்டிய நேரம் இது. அதுபோல சமுதாயத்தில் அதிகப்படியான பாலியல் குற்றங்களும் நடந்து கொண்டு இருக்கிறது. அதை தூண்டுவது போலவே சில படங்களில் ஆபாச காட்சிகளும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.

Cinema Violence Movie

காட்சிகளின் நெருக்கம்

சமீபத்தில் கூட டாக்ஸிக் படத்தில் ஹீரோ பல பெண்களுடன் உடலுறவு கொள்ளும் காட்சிகள் நெருக்கமாக காட்டப்பட்டு இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்திருப்பதால் தியேட்டரில் வேண்டுமென்றால் குழந்தைகள் பார்க்காமல் இருக்கலாம். ஆனால் ஓடிடியில் வெளியாகும் போது வீட்டில் இருப்பவர்களுடன் சேர்ந்து குழந்தைகளும் படத்தை பார்க்கிறார்கள். அல்லது சோசியல் மீடியாவில் பயன்படுத்தும் இளைஞர்களின் மனதிலும் சலனத்தை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற படக் காட்சிகள் அதிகமாக தென்படுகிறது.

Cinema Violence Movie

இதுதான் பயமே

ஒருவனை சுட்டான், அடுத்தவனை வெட்டினால் ரத்தம் தெரிக்க ஹீரோ நடந்து வருகிறார் என்பது தான் ஹீரோயிசம் என நார்மலைசேஷன் செய்வதுதான் பலருக்கு பயத்தை கொடுத்திருக்கிறது. தன்னையும் இதே போல ஒரு ஹீரோவாக காட்டிக் கொள்ளவே சில இளைஞர்கள் தவறான பாதையை தேர்ந்தெடுப்பதற்கு இது போன்ற காட்சிகளும் அடித்தளம் போட்டு விடக்கூடாது, அதனால் சினிமா எடுப்பவர்கள் எதார்த்தத்துக்கும் கற்பனை காட்சிகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+