இனி விவாகரத்து வேண்டாம்னு சொன்ன விஜய் மனைவி.. ஆனா! இனி இவங்களுக்கு மட்டும் பிரச்சனை!
சென்னை: கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் அரசியல் செய்திகளுக்கு இணையாக பேசப்பட்ட ஒரு விஷயம் என்றால் அது முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு தான். நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடங்கிய நாளிலிருந்து ஒவ்வொரு விசாரணையும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி கொண்டே இருந்தது. ஆனால் இன்று அந்த விவாகரத்திற்கு ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை தொடர விருப்பமில்லை என்று மனுதாரர் சங்கீதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரான சங்கீதா இந்த வழக்கை இனி மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை என்று கூறி இருக்கிறார். அதன் பிறகு வழக்கை வாபஸ் பெற அனுமதி வழங்கப்பட்டதாகவும் நீதிமன்ற பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தேவை எனில் புதிய மனு தாக்கல் செய்யும் உரிமையுடன் தற்போதைய வழக்கு வாபஸ் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விஜய் விவாகரத்து வழக்கு
இந்த ஒரு தகவல் வெளியானதும் சோசியல் மீடியாவில் முதலில் கொண்டாடியது விஜய் ரசிகர்கள் தான். ஏனென்றால் இந்த விவாகரத்து விவகாரம் அரசியல் களத்திலும் மிகப்பெரிய ஆயுதமாக மாறி இருந்தது. விஜய்க்கு எதிரான முக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று. குடும்ப வாழ்க்கையை முன்வைத்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டன. சட்டப்பேரவையில் கூட எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினை விமர்சிக்கும் விதத்தில் அப்பாவை காணவில்லை என்று விஜய் பேசியதும் அதற்கு உதயநிதி ஸ்டாலின், ஒரு மனைவி தன்னுடைய கணவனை காணவில்லை என்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தேடிக் கொண்டிருக்கிறார் என்று பேசி இருந்தார். இதுவும் பெரிய விவாதமானது.

வாபஸ் வாங்கிய சங்கீதா
அதுபோல விஜய் மகன் லைக்கா ப்ரொடக்ஷனில் சிக்மா படம் இயக்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் ப்ரோமோஷனில் அப்பாவை பற்றி பேசியால் விஜய் நிலைமை அவ்வளவுதான் என்றெல்லாம் பலரும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் சிக்மா படத்தின் ப்ரோமோஷனில் ஜேசன் பேசும்போது தன்னுடைய அப்பாவை பற்றி பெருமையாக பேச, அதுவும் விஜயை எதிர்ப்பவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. அதற்குப் பிறகு அவர்கள் விஜயின் விவாகரத்து வழக்கை வைத்து காய் நகர்த்தலாம் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் இப்போது விவாகரத்து வழக்கையும் சங்கீதா வாபஸ் வாங்கி விட்டார்.
விஜய் மகனின் பேட்டி
இதற்கு பின்னணியில் கூட பிள்ளைகளின் எதிர்காலம் தான் இருக்கலாம் என்றும் பலரும் கருத்து கூறி வருகின்றனர். காரணம் சமீபத்தில் கூட ஜேசன் பேட்டியில் பேசும் போது அப்பாவின் வரலாற்று வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறது. மக்கள் எங்கள் மீது அதிகம் முக்கியத்துவம் வைத்திருக்கிறார்கள். அதற்கு நாங்கள் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
விவகாரத்து வழக்கை வாபஸ் செய்கிறேன்.. சங்கீதா சொன்னதும்.. விஜய் தரப்பு கோர்ட்டில் சொன்னது என்ன?
அப்போதே பலரும் இப்படிப்பட்ட பிள்ளைகளுக்காகவாவது சங்கீதாவும் விஜய்யும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறியிருந்தனர். இப்போது அது நடந்து விட்டது என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இதை வைத்து இனி விமர்சிக்க முடியாது என்று சோசியல் மீடியாவில் சிலர் மீம்ஸ்களை வெளியிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications
