இனி கலர்ஸ் தமிழில் பாக்கியலட்சுமி சீரியல்.. வெளியான முக்கிய அப்டேட்.. ஆனால் இதை கவனிச்சீங்களா?
சென்னை: பெங்காலியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் ஸ்ரீமோயி என்ற ரீமேக்காக தான் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
பொதுவாக பிறமொழி சீரியல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது சில காலமாக நடந்து கொண்டு வருவது தான்.
அந்த வகையில் கலர்ஸ் தமிழில் பாக்கியலட்சுமி என்ற பெயரில் சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

பல வருடங்களாகவே சினிமாவாக இருந்தாலும் சரி, சீரியலாக இருந்தாலும் சரி ஒரு மொழியில் ஒரு சீரியலோ அல்லது சினிமாவோ ஹிட் ஆகிவிட்டால் அதை பிற மொழிகளில் அப்படியே மொழிபெயர்த்து விடுகிறார்கள். இது பல வருடங்களாக தொடர்ந்து கொண்டிருப்பது தான்.
அந்த வகையில் தான் விஜய் டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் பல டிவி சேனல்களில் புதுப்புது சீரியல்களாக பிறமொழி சீரியல்களை மொழிபெயர்த்து ஒளிபரப்பாகி வந்தனர். இதற்கு அதிகமான வரவேற்பும் ரசிகர்களிடம் கிடைத்தது. காரணம் பிற மொழி நடிகைகள் பயன்படுத்தும் உடை அலங்காரங்கள் தமிழ் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இருந்தது.
அதனாலே பிறமொழி சீரியல்களுக்கு டிஆர்பியும் கிடைத்துக் கொண்டிருந்தது. அப்படி வெற்றி பெற்றவர்களில் இனிய இரு மலர்கள், மூன்று முடிச்சு, என் கணவன் என் தோழன் என பல சீரியல்களை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலும் இருந்து வருகிறது.
விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகி தன்னுடைய கணவர் தன்னை விட்டு விட்டு சென்ற பிறகும் தன்னுடைய மாமனார் மாமியார்களை கவனித்து தன்னுடைய குடும்பத்தையே தூக்கி நிறுத்தி தனக்கு என்று ஒரு சுய கௌரவத்தை நிலைநாட்டி தன்னுடைய உழைப்பால் தனக்கென்று ஒரு சுய கவுரவத்தை நிலைநாட்டி அடுத்தடுத்து ஜெயித்துக் கொண்டே இருக்கிறார்.
இதனாலேயே இந்த சீரியலை அதிகமானோர் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இனி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரண்டு சீரியல்கள் தான் இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பாக இருக்கிறதாம். அதில் ஒரு சீரியலுக்கு பாக்கியலட்சுமி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் பெயர் மட்டுமே ஒன்று, இரண்டும் வெவ்வேறு கதைகள் தானாம்.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications