தலைப் பொங்கலை தொடங்கிய கலர்ஸ் சேனல்...விஜய் டிவியை காப்பி பண்ணுகிறதா?? கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளின் ப்ரமோ தற்போது அனைத்து சேனல்களிலும் வெளியிடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு சீரியல்களில் நடிக்கும் நடிகர்களும் பொங்கல் கொண்டாட்டத்தை கொண்டாடி வருகிறார்கள்.

டிஆர்பிக்கான போட்டிகள்
தற்போதைய 2022 ஆம் ஆண்டிற்கான பொங்கல் நிகழ்ச்சிகளின் ப்ரமோக்கள் சின்னத்திரை ரசிகர்களை கவர வைப்பதற்காக சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு சேனல்களும் தங்களுடைய டிஆர்பியை கூட்டுவதற்காக போட்டி போட்டுக்கொண்டு புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். தங்களுடைய டாப்பில் இருக்கும் சீரியல் நட்சத்திரங்களையும், ரசிகர்களை அதிகமாகக் கவர்ந்த நடிகர்களையும் வைத்து பல புது நிகழ்ச்சிகளை எடுத்து பொங்கலுக்கு ஒளிபரப்பாகி வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த சேனல்கள்
ஒவ்வொரு சேனலும் தங்கள் ரசிகர்களை கவர்வதற்காக புதுசு புதுசாக யோசித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு சில நேரங்களில் ஒரு சில நிகழ்ச்சிகளை ரசிகர்கள் அதிகமாக கவர்ந்து வருவதால் அதைப்போன்றே தாங்களும் செய்யலாம் என்று சில நேரங்களில் முடிவெடுத்து விடுகிறார்கள். ஆனால் பல நேரங்களில் எதார்த்தமாக எடுக்கும் ஒரு சில முடிவுகள் கூட பார்க்கும் ரசிகர்களுக்கு அப்படித்தான் தோன்றுகிறது என்று கூறிவருகின்றனர். தற்போது ரசிகர்களை கவர்ந்த டிவி சேனல்களின் வரிசையில் சன் டிவி, விஜய் டிவி, ஸ்டார் மியூசிக், ஜீ தமிழ், கலர் டிவி என பல டிவி சேனல்கள் நாளுக்குநாள் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

புதுமண ஜோடிகள்
கலர்ஸ் டிவி இதுவரைக்கும் இல்லாத வகையில் தற்போது புது புது சீரியல்களை அறிமுகப்படுத்தி அதில் புதுமுகங்களாக இருந்தாலும் சரி அல்லது பிற சேனல்களில் இருக்கும் நடிகர் நடிகைகளை கூட தங்களுடைய சீரியல்களில் அறிமுகப்படுத்தி, ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழில் கதாநாயகியாக நடித்து வந்த ரேஷ்மா தற்போது கலர்ஸ் டிவியில் அபி டெய்லர் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அவருடைய கணவர் மதன் தான் நடித்து வருகிறார். மதன் பலவருடங்களாக ஜீ தமிழில் நடித்து வந்தாலும் தற்போது இருவரும் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு
சின்னத்திரையில் அதிகமான இளம் ரசிகர்களை கவரும் டிவி சேனல்களில் ஒன்றாக விஜய் டிவி இருந்து வருகிறது. இந்த சேனலில் அடிக்கடி குடும்ப விழாக்களை கொண்டாடி பரபரப்பை ஏற்படுத்தி விடுவார்கள். அந்த வகையில் இந்த சீரியலில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு எங்கேஜிமெண்ட் முதல் திருமணம், வளைகாப்பு என பல அம்சங்களையும் செய்து அதை ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக மாற்றிவிடுவது இவர்களின் டெக்னிக் ஆக இருந்து வருகிறது. அதே பாணியை தற்போது கலர் டிவியும் பின்பற்றியுள்ளது. தற்போது திருமணம் முடிந்து இளம் ஜோடிகளாக இருக்கும் அபி டெய்லர் ஜோடிகள் தலைப் பொங்கலை கொண்டாடி இருக்கின்றனர். இதுதான் தற்போது நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications