பிக் பாஸ் போட்டியாளர்களின் சட்டையில் நேற்று இருந்த கொடி இது தானா? அப்போ மறைக்கப்பட்ட ரகசியம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்பட ப்ரமோஷனுக்காக சென்று இருந்தார். அப்போது அங்கிருந்த போட்டியாளர்கள் எல்லோருடைய உடைகளிலும் ஒரு பேட்ச் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால் அது வெளியே காட்டப்படாமல் மறைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பது இணையத்தில் அதிகமான சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அது சர்ச்சைகள் நிறைந்ததாக தான் இருக்கிறது. முதல் சீசனில் இருந்து ஏழாவது சீசன் வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் சர்ச்சைகள் உருவாகி விடுகிறது. இதுதான் இந்த நிகழ்ச்சியின் பிளஸ் ஆகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரைக்கும் இல்லாத வகையில் நேற்று நடந்த ஒரு நிகழ்வு இப்போது இணையத்தில் பெரிய அளவில் பேசப்படுகிறது.

அதாவது நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் அமரன் திரைப்பட ப்ரமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தார். அந்த திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் ஆண்கள் அல்லது பெண்கள் யார் சிவகார்த்திகேயனை இம்ப்ரஸ் செய்கிறார்களோ அந்த அணிக்கு பரிசு கிடைக்கும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். அதனால் ஆண்களும், பெண்களும் போட்டி போட்டு தங்களுடைய பெர்ஃபாமன்ஸ் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சிவகார்த்திகேயன் உட்பட உள்ளிருக்கும் போட்டியாளர்கள் எல்லோருடைய உடைகளிலும் ஒரு பேட்ச் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால் அது வெளியிலேயே தெரியாத வகையில் செய்யப்பட்டிருந்தது. சில இடங்களில் போட்டியாளர்கள் கண்ணாடியை கடந்து போகும் போது அந்த பேட்ச் தெரிந்திருக்கிறது. அது தேசியக்கொடி தான் என்று தெளிவாக தெரிகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சிவகார்த்திகேயன்.. சொன்ன அந்த வார்த்தை.. நெகிழ்ந்த போட்டியாளர்கள்
ஆனால் ரியாலிட்டி நிகழ்ச்சியில் எதற்காக தேசியக்கொடி மறைக்கப்பட்டது என்ற கேள்விகள் இணையத்தில் அதிகரித்து வரும் நிலையில் தேசிய கொடியை வணிகம் மற்றும் இதர நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இதை மறைத்து இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

அதுபோல தேசிய கொடியின் வடிவம் சதுரமாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் நேற்று அனைவருடைய உடைகளிலும் வட்ட வடிவில் கொடி இருந்ததால் அந்த கொடியை வெளியே காட்டக்கூடாது என்று எடிட்டிங்கில் பிளர் செய்யப்பட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. பிக் பாஸ் என்பது ஒரு வாழ்க்கை பயணம். வியாபாரம் நோக்கத்திற்காக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் நேற்று தேசியக் கொடியை வெளியே தெரிய வைத்திருந்தால் பல்வேறு விமர்சனங்கள் வந்திருக்கும்.
விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை முதல்முறையாக தொகுத்து வழங்குகிறார். இரண்டு வாரம் அவர் இந்த நிகழ்ச்சியில் வந்தாலும் மக்கள் மத்தியில் அவருக்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது. அதே நேரத்தில் நேற்று தேசியக்கொடி பிரச்சனை பெரிய அளவில் வெடிக்காமல் ப்ளர் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications