பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சிவகார்த்திகேயன்.. சொன்ன அந்த வார்த்தை.. நெகிழ்ந்த போட்டியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அக்டோபர் 25ஆம் தேதிக்கான எபிசோடின் மூன்றாவது ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ஆக சென்றிருக்கிறார். அவர் எதற்காக உள்ளே சென்றார்? போட்டியாளர்களிடம் என்ன பேசினார்? என்று பார்க்கலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி18 நாட்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் ஸ்பெஷல் விருந்தினராக சிவகார்த்திகேயன் என்ட்ரி கொடுக்கிறார். அவர் தன்னுடைய அமரன் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் அந்த நேரத்தில் வெளியாகும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள், நடிகர்கள் பிரமோஷனுக்காக கலந்து கொள்வது வழக்கம்தான். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் புதியதாக தொடங்க இருக்கும் சீரியலில் நடிக்கும் நடிகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஆறாவது சீசனில் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்த் மற்றும் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியா இருவரும் கலந்து கொண்டனர்.

அதுபோல இந்த வாரத்தில் நடிகர் கவின் நடிக்கும் பிளடி பக்கர் திரைப்படத்திற்கான ப்ரமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டிருக்கிறார். அவருடைய என்ட்ரியை பார்த்ததும் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் எல்லோரும் வாவ் என்று இன்ப அதிர்ச்சி அடைகிறார்கள்.

சிவகார்த்திகேயன் இரவு நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அங்கு வான வேடிக்கை வெடிக்கப்படுகிறது. அப்போது தீபக் சிவகார்த்திகேயனை பார்த்ததும் கட்டிப்பிடித்துக் கொள்கிறார். பிறகு சிவகார்த்திகேயன் எல்லோரிடமும் சகஜமாக பேசிவிட்டு தன்னுடைய அமரன் படத்தை பற்றி பிரமோஷன் செய்கிறார். அதற்குப் பிறகு அந்த படத்திற்கான ட்ரெய்லர் ஒளிபரப்பாகிறது.

அதைத் தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம் பேசிக்கா எமோஷனல் பதிவு செய்த படம் தான். பிக் பாஸ் வீட்டிற்கும் இந்த அமரன் படத்துக்கு நிறைய சம்பந்தம் இருக்கு என்று சொல்கிறார். பிறகு அங்கு இருக்கும் போட்டியாளர்கள் எல்லோருக்கும் ஒரு பேட்ச் கொடுக்கிறார். அதற்குப் பிறகு கேக் வெட்டி கொண்டாடுகிறார்.

கடைசியாக முத்துக்குமரன் அமரன் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று ஒரு பூ கொத்தை எடுத்து கொடுக்கிறார். அதோடு அங்கிருக்கும் போட்டியாளர்களிடம் சிவகார்த்திகேயன் ஒற்றுமை ரொம்ப முக்கியம் என்று சொன்னது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது

வெளியே நடக்கும் நிகழ்வுகள் குறித்து சிவகார்த்திகேயன் சில விஷயங்கள் போட்டியாளர்களுக்கு ஹின்ட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போட்டியாளர்களின் விளையாட்டு மாறப்போகிறதா? அல்லது இதே போலத்தான் இவர்கள் அடித்துக் கொள்கிறார்களா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+