வன்ம குடோனாகும் குக் வித் கோமாளி.. ப்ரோமோவில் மணிமேகலையை டார்கெட் செய்த புகழ், ராமர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கான வரும் வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மணிமேகலை நிகழ்ச்சிகளிலிருந்து விலகியதை வைத்து புகழ் மற்றும் ராமர் இருவரும் கிண்டல் செய்த காட்சிகளை பார்த்து இணையத்தில் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.
ஒரு காலத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்தால் மனக்கவலைகள் எல்லாம் போகும் என்று ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தனர். ஆனால் ஐந்தாவது சீசன் தொடங்கியதில் இருந்தே பஞ்சாயத்து தொடங்கிவிட்டது. அதுவரைக்கும் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியிலிருந்து விலகி இருந்தார். அதை தொடர்ந்து இயக்குனர், தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்து விலகி இருந்தனர்.

புது கூட்டணியோடு ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டது. ஆனாலும் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு வாரங்களிலேயே இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த நாஞ்சில் விஜயன் திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் அதிகமான டபுள் மீனிங் வார்த்தைகள் அளவுக்கு அதிகமாக இருந்தது. அதிலும் ஒரு எபிசோடில் ராமர் அக்ஷிதாவே தேவ்.... சேனா என்று பேசியது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.
பொதுவாக எண்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சி என்றால் அங்கு ஜாலியாக எல்லோரும் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் முகம் சுளிக்கிற மாதிரி காட்சிகளை எதற்காக இந்த சீசனில் வெளியிடுகிறார்கள் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. காரணம் இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பார்த்து வருவதால் இவர்கள் இந்த மாதிரி இரட்டை அர்த்தமுள்ள வசனங்களை பேசுவது தவறு அதை ஒளிபரப்புவதும் தவறு என்று கூறி வந்தனர்.

அதே நேரத்தில் ஒரு எபிசோடில் ஷாலின் ஜோயா, சரத் வடிவேலு போல வேடமிட்டு இருக்கும்போது அவர் இடுப்பில் மாட்டி இருந்த கூடையை தூக்கி பார்த்தது அதிர்ச்சியடைய வைத்திருந்தது. ஜோயா ஒரு ஆணின் உடைய தூக்கி பார்த்தது போல ஒரு ஆண் பெண்ணுடைய தூக்கி பார்த்தால் எவ்வளவு பிரச்சனைகள் வரும் என்றும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த பிரச்சனைகளை எல்லாம் தூக்கி சாப்பிடுவது போல இப்போது மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து விலகியதற்கு காரணம் பிரியங்கா தான் என்று ஒரு போஸ்ட் வெளியிட்டு இருந்தார். அதில் என்னைத் தொகுப்பாளர் வேலை செய்யவிடாமல் தடுக்கிறார் என்று கூறியிருந்தார். இந்த பிரச்சனை பெரிதாக பேசப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் வரும் வாரத்திற்கான ப்ரோமோ இப்போது வெளியாகியிருக்கிறது. அதில் ரக்சன் உடன் தொகுப்பாளராக புகழ் நிற்கிறார்.

அப்போது நீங்க போன வாரம் பார்த்து இருப்பீங்க ரெண்டு பேரை தூக்கி இருக்கோம் என்று சொல்ல, அதற்கு ராமர் என்னது ரெண்டு பேரை தூக்கி இருக்கீங்களா? அப்படி சொல்லக்கூடாது ரெண்டு பேரை செலக்ட் பண்ணி இருக்கோம் என்று சொல்லணும் என்று சொல்ல, அதற்கு புகழ் நீங்க என் தொகுப்பாளர் வேளையில் தலையிடுறீங்க? நீங்க இப்படி எல்லாம் பேசக்கூடாது? உங்களுக்கு பிடிக்கலன்னா வெளியே போங்க என்று பேசுகிறார்.
அதிலும் புகழும் ஆக்டிவிட்டி அப்படியே மணிமேகலையை பிரதிபலிப்பது போல இருக்கிறது. இதனால் விஜய் டிவி பிரியங்காவிற்கு ஆதரவாக மணிமேகலையை கிண்டல் செய்யும் வகையில் ப்ரோமோ வெளியிட்டு இருக்கிறார்கள். இதற்கு ப்ரோமோவிற்கு கீழே அதிகமான ரசிகர்கள் விஜய் டிவியை திட்டி வருகிறார்கள்.
ஒரு காலத்தில் இந்த நிகழ்ச்சியை பார்த்தால் டென்ஷன் எல்லாம் போய்விடும், ஆனால் இப்போது இந்த நிகழ்ச்சியை பார்த்தால் தான் டென்ஷன் ஆகிறது. விஜய் டிவி வன்ம குடோனாக மாறிவிட்டது, விஜய் டிவி பிரியங்காவிற்கு சொம்பு என்று பல்வேறு கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications