செஃப் தாமுவோடு உள்ள வீடியோவை நீக்கிய வெங்கடேஷ் பட்.. இருவருக்கும் இடையே இதுதான் பிரச்சனையா?
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் சில தினங்களுக்கு முன்பு தான் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை என்று திடீர் போஸ்ட் வெளியிட்டு இருந்தார். அதோடு தான் புதியதாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தன்னோடு செஃப் தாமுவும் வந்துவிடுவார் என்று கூறியிருந்தார். இப்படியான நிலையில் அடுத்ததாக திடீரென விரக்த்தியான ஒரு போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது அந்தப் பதிவில் "சொல் தவறினாலும் நட்பு மாறாது" என்று வெங்கடேஷ் பட் கேப்ஷன் கொடுத்திருக்கும் நிலையில் இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பலர் பிரபலமடைந்து இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிகளில் குக்காக ஒவ்வொரு சீசனிலும் கலந்து கொண்டவர்கள் மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாகவே அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கின்றனர். அந்த வரிசையில் கடந்த நான்கு சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் இருந்து வருகின்றனர்.
இதற்கு முன்பு இவர்கள் இருவரும் சின்னத்திரையில் பல டிவி நிகழ்ச்சிகளில் சமைத்துக் கொண்டிருந்தாலும் அதில் எல்லாம் டெரரான ஆட்களாக தெரிந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இவர்களுடைய இன்னொரு முகம் தெரிய வந்தது. அதிலும் வெங்கடேஷ் பட் கோமாளிகளை அடிக்கடி அடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தாலும் அது குறித்து வெங்கடேஷ் பட் அடிக்கடி விளக்கமும் கொடுத்துக் கொண்டிருப்பார்.
இப்படியான நிலையில் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சில தினங்களுக்கு முன்பு வெங்கடேஷ் பட் தான் வருகின்ற குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார். அது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் ஒவ்வொரு வருடமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கிவிடும்.
இந்த நிலையில் கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்து இப்போது ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்ட நிலையில் இன்னும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்காமல் இருக்கிறது. இதனால் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதோடு இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று சில எதிர்பார்ப்பு பட்டியலும் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களே இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகப் போகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான். அதே நேரத்தில் வெங்கடேஷ் பட் நான் மட்டும் இந்த நிகழ்ச்சியில் இருந்து போகவில்லை என்னோடு செஃப் தாமுவும் வந்துவிடுவார் நாங்கள் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் உங்களை மனம் கவர போகிறோம் என்று கூறியிருந்தார்.

இதனால் இவர்கள் இருவரும் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற பேச்சு இணையத்தில் பரவி வந்தது. அதே நேரத்தில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு இருவரும் இருக்கும் வீடியோவை வெங்கடேஷ் பற்றி இணையத்தில் நீக்கி இருக்கிறார். இதனால் தாமுவிற்கு வெங்கடேஷ் பட்டிற்க்கும் பிரச்சனை என்பது போல சமூக வலைத்தளத்தில் கிசுகிசு கிளம்பியது.
இதற்கு பதிலடி கொடுத்த வெங்கடேஷ் பட் "பூனை கண் மூடிற்றால் உலகம் இருண்டு விடுமோ...
இணையத்தில் பதிவை நீக்கினால் உரைத்தது மறையுமோ..
இதனால் உமக்கு கிடைப்பது எதுவாயினும் மகிழ்ச்சி என்றும் எனக்கே....
சொல் தவறினாலும் நட்பு மாறாது... என்று பதிவிட்டு இருக்கிறார்.
இதனால் ரசிகர்கள் செஃப் தாமு வெங்கடேஷ் பட்டோடு இனி இணைந்து புது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையா? அதனால் தான் வெங்கடேஷ் பட் இப்படி ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கு வெங்கடேஷ் பட் லைக் மட்டும் கொடுத்து இருக்கிறார். இது குறித்து தெளிவான விளக்கத்தை கொடுக்கவில்லை.












Click it and Unblock the Notifications